Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கர்ப்பிணிகள் எதுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யணும் தெரியுமா?
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வோம். இவ்வாறு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். எப்படியெனில், அல்ட்ராசவுண்ட் கருவியை வயிற்றில் தேய்க்கும் போது, அதிலிருந்து வரும் சப்த அலைகள், வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவுகளை அப்படியே திரையில் வெளிக்காட்டும். மேலும் என்ன தான், அது குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தாலும், அதன் மூலம் குழந்தையின் தற்போதைய நிலை மற்றும் ஆரோக்கியத்தை கண்டறிய முடியும்.
மேலும் இந்த ஸ்கேன் மூலம், பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய பிரச்சனையையும் முன்பே கண்டறியலாம். சரி, இப்போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
* அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், கருவில் உள்ள சிசுவின் இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியும். அதிலும் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதனைக் கொண்டு குழந்தையின் இதய ஆரோக்கியத்தை கண்டறியலாம்.
* கர்ப்பிணிகள் இந்த ஸ்கேன் செய்வதன் மூலம், குழந்தையின் நிலையை அறிய முடியும். இதனால் குழந்தை இடம் மாறி இருந்தால், முன்பே நன்கு தெரிந்து கொள்ளலாம்.
* நஞ்சுக் கொடி எந்த பகுதியில் உள்ளது என்பதையும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் அறியலாம். பொதுவாக நஞ்சுக்கொடியானது கர்ப்ப காலத்தில் கருப்பையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் நஞ்சுக்கொடியானது 7 மாதத்திற்கு பின், கருப்பை வாயை மூடியவாறு இருந்தால், அதற்கு சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
* பொதுவாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கானது 11-14 வாரத்திற்குள் செய்யப்படும். இவ்வாறு செய்தால், குழந்தைக்கு மனநலிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* கர்ப்பிணிகளுக்கு 18-20 வாரங்களில் அனாமலி ஸ்கேன் மேற்கொள்ளப்படும். இந்த ஸ்கேன் மூலம், குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும் 20-வது வாரத்தில் ஸ்கேன் செய்தால், குழந்தை ஒரு வடிவத்தில் வந்துவிடும். இதனால் தண்டுவடம், மூளை மற்றும் இதர உள்ளுறுப்புக்களை சோதனை செய்து, அதில் பிரச்சனைகள் இருந்தால், அதை தெரிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
