Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
கர்ப்பமாக இருக்கும் போது சந்திக்கக்கூடும் 10 பிரச்சனைகள்!!!
ஒரு பெண் வாழ்வின் முழு நிலையை அடைய தாய்மை நிலையை அடைய வேண்டும். சிலருக்கு அத்தகைய தாய்மையை அடைவதிலேயே பல பிரச்சனைகள் எழும். அதற்கு போதிய சிகிச்சையை மேற்கொண்டால், விரைவில் தாய்மை அடையலாம். அவ்வாறு தாய்மை அடைந்த பின்னரும், பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது அனைத்து பெண்களிடமும் நிகழும் ஒரு பொதுவான பிரச்சனையே. இத்தகைய பிரச்சனைகள் சந்திக்கும் போது, அதனை போக்கும் வகையில் செயல்பட்டால் நல்லது. இல்லாவிட்டால், அது பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
சில கர்ப்பிணிகள் கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அது கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ என்று பயப்படுவார்கள். ஆனால் ஒருசில பிரச்சனைகள் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடியவையே. இப்போது அத்தகைய பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வீக்கங்கள்
கர்ப்பிணிகள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் வீக்கங்கள். ஆம், இந்த காலத்தில் கர்ப்பிணிகளின் கை மற்றும் கால்கள் மற்றும் சில நேரத்தில் முகம் கூட வீக்கத்துடன் காணப்படும். இவ்வாறு கால்கள் வீங்கி காணப்பட்டால், நடப்பது சிரமமாக இருக்கும். அதுவே வீக்கத்துடன், காலை சோர்வு மற்றும் பார்வை கோளாறு இருந்தால், அது மிகவும் ஆபத்தானது. இந்த மாதிரியான நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வாசனை மற்றும் சுவையில் மாற்றம்
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சனை தான் வாசனை மற்றும் சுவையில் மாற்றம். கர்ப்ப காலத்தில் சில உணவுகள் வாந்தியை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும். எதையும் சரியாக சாப்பிட முடியாதவாறு இருக்கும். இதற்கு பயப்பட வேண்டாம். இத்தகைய நிலை நாளடைவில் மறைந்துவிடும்.

காய்ச்சல்
சில சமயங்களில் கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் வரும். ஆனால் அந்த காய்ச்சலானது நீண்ட நாட்கள் தொடர்ந்தாலோ அல்லது 100 டிகிரிக்கு மேல் உடல் வெப்பமானது இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லாவிட்டால், அது கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

வாந்தி
முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வாந்தி. இவ்வாறு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடல் பலவீனமடைவதுடன், உடலில் வறட்சியும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் சிலருக்கு கடைசி மூன்று மாதங்களில் வாந்தியானது ஏற்படும். அதிலும் காய்ச்சல் மற்றும் உடல் வலியுடன் ஏற்படும். மேலும் அதிகப்படியாக வாந்தி எடுத்தால், குழந்தை மிகவும் குறைவான உடல் எடையில் பிறக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், வலியுடன் கூடிய வாந்தி எடுத்தால், அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வாந்தி வந்தால், அதனை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

எடை அதிகரித்தல்
கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் அவ்வாறு உடல் எடை அதிகரிப்பதற்கும் ஒரு அளவு உள்ளது. அந்த அளவை மீறி உடல் எடை அதிகரித்தால், அது மிகவும் கஷ்டமாகிவிடும். எனவே, இந்த நேரத்திலும் எடையில் சற்று கவனம் வேண்டும்.

இரத்தப் போக்கு
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரத்தப் போக்கு ஏற்படும். அதிலும் அந்த இரத்தப் போக்கானது முதல் மூன்று மாதங்களிலோ அல்லது அதற்கு முன்பாகவோ ஏற்பட்டால், கருச்சிதைவு ஏற்படுவதற்கோ அல்லது குறைபிரசவம் நடைபெறுவதற்கோ வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நல்ல ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுவே இறுதி மூன்று மாதங்களில் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அது வேறு சில சிக்கலான பிரசவத்திற்கு வழிவகுப்பதற்கான அறிகுறியாக இருக்கும்.

அடிவயிற்றில் வலி
சில கர்ப்பிணிகளுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படும். இதற்கு செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனனையே காரணமாக இருக்கும். சில நேரங்களில் குமட்டலுடன் சேர்ந்து அடிவயிற்றில் வலி ஏற்படும். இவ்வாறு ஏற்பட்டால், அது வயிற்றில் வைரஸ் தாக்கியிருப்பதற்கான அறிகுறியாக இருக்கும். ஆகவே இந்த நிலையில் மருத்துவரை உடனே அணுகுவது இன்றியமையாதது.

தலைவலி
நிறைய பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தலைவலிக்கு ஆளாவார்கள். இதுவும் இத்தகைய தலைவலியானது நீண்ட நேரம் இருக்கும். இதனால் உடல் களைப்படைவதுடன், எரிச்சல் மற்றும் தொந்தரவுக்கு ஆளாகக்கூடும். இதனால் தான் சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

கீழ்முதுகு வலி
கர்ப்பத்தின் போது அதிகப்படியான சுமையை சுமப்பதால், பெண்களுக்கு கீழ்முதுகில் வலியானது ஏற்படும். அதிலும் நீண்ட நேரம் உட்கார்ந்தாலோ அல்லது நின்றாலோ தான், இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட, பெண்கள் படுத்து ஓய்வு எடுப்பது மிகவும் அவசியமாகும்.

மலச்சிக்கல்
கர்ப்பமாக இருக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவது பொதுவானவையே. அதிலும் முதல் மூன்று மாதங்களில் இந்த பிரச்சனை ஏற்படும். ஏனென்றால், கர்ப்பத்தின் போது உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதே காரணம். ஆகவே சரியான நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு, முறையான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால், நிவாரணம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications