Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!

கர்ப்பமான காலத்திலிருந்து செய்ய கூடிய ஒவ்வொரு வேலையையும், அணுகுமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். பயணம் செய்யும் காலத்தில் சில வழிமுறைகளை பின்பற்றினால் கர்ப்பிணிகள் கருவில் உள்ள குழந்தைகளை கவனமாக பாதுகாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
அதிக பயணம் வேண்டாமே
கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே. இந்த மாதங்களில் பயணம் செய்வது மட்டுமே பாதுகாப்பானது.
கரு உருவான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் நீங்கள் பயணம் செய்யும் போது அபார்சன் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. மேலும் தாயின் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.
உயர் ரத்த அழுத்தம்
கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று கூறப்படுவதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம், கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவை பயணம் ஒத்தி வைக்க பிற காரணங்களாக உள்ளன.
குறை வளர்ச்சி குழந்தைகள்
கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க நேரிடலாம். கரு சிதைவிற்கும் அதிக வாய்ப்புள்ளது.. ஒரு வேளை கருவில் இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்வதை முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications