Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
கருவிலேயே பாட்டு கேட்கும் குழந்தைகள் புத்திசாலியாகும் – ஆய்வில் தகவல்

குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரான்கள் - உருவாகின்றன.
அவை நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக்கணக்கில் நியூரான்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.கேட்கும் திறனும், அறிவுத்திறனும் வேகமாக வளர்கிறது. கருவில் 17 வார வளர்ச்சி உடைய குழந்தை ஒரு செயலை எதிர்நோக்கு விளைவுடன் கவனிக்கத் தொடங்குகிறதாம்.
கருவிலேயே பயிற்சி
தன்னுடைய குழந்தைகள் எதிலும் முதன்மையானவராக வரவேண்டும், புத்திசாலிகளாக இருக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம். எனவே குழந்தைகளை புத்திசாலிகளாக்க வேண்டுமெனில் கருவிலேயே பயிற்சி தரலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இசையானது கருவில் இருக்கும் குழந்தையின் முளைத்திறனை அதிகரிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே தாயும், குழந்தையும் இணைந்து இசை கேட்பதன் முலம் அறிவுள்ள குழந்தையை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதற்காக அமெரிக்காவின் தெற்கு கரோலினா நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கர்ப்பிணித் தாய்மார்கள் வயிறு - இடுப்பில் எளிதாக பொருத்திக் கொள்ளும் பெல்ட்' வடிவில் நவீன கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது. இதில் 2 வரிசைகளில் ஸ்பீக்கர் மற்றும் இயர்போன் இணைந்திருக்கும். குழந்தையின் தலைப்பகுதி எந்தப்பக்கம் இருந்தாலும் பாட்டு கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்
கருவிலேயே இசையை கேட்கும் குழந்தைகள் பிறந்த உடன் இந்த உலகில் எதையுடம் நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனராம். குழந்தையின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறதாம். அவர்களின் புத்திக்கூர்மை அதிகரிப்பதாகவும் ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் வளர்ச்சியும், பெற்றோர்கள் மகிழத்தக்க வகையில் இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தாயின் கருவில் வளரும் 5 மாத குழந்தைக்கு கேட்கும் திறன் நன்றாக இருக்குமாம். எனவே இந்த பெல்ட் இசையை அணிந்து கொண்டு மென்மையான பாடல்களை தாயும், கருக்குழந்தையும் கேட்பதன் மூலம் தன்னம்பிக்கை நிறைந்த புத்திசாலி குழந்தைகள் உருவாவது உறுதி என்கின்றனர் விஞ்ஞானிகள்.
1990 களில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், ஆதிகாலம் தொட்டே நம் முன்னோர்கள் பிறந்த குழந்தைகளுக்கு எந்தவித செலவும் இல்லாமல், தாலாட்டு பாடி உறங்க வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications