Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கொரோனா அச்சத்திற்கு நடுவில் புதிய தாய்மார்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள்!
கொரோனா பெருந்தொற்று பரவல் மத்தியில் புதிய தாய்மார்கள் தங்கள் குழந்தை மற்றும் தங்களுடைய ஆரோக்கியம் குறித்து பயம், கவலை மற்றும் பதட்டம் அடைவதாக புள்ளி விவரங்கள் கூறப்படுகின்றன.
கொடிய கொரோனா தொற்றில் இருந்து நாம் தப்பிக்க ஒரே வழி தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக விலகலை பின்பற்றுவது தான். இது ஒரு பக்கம் கொரோனா பற்றிய பயம் ஒரு பக்கம் இதற்கிடையில் நிறைய பெண்கள் பிரசவித்து குழந்தையும் ஈன்று வந்துள்ளனர். இந்த கொரோனா தனிமைப்படுத்துதல் நம்மில் பெரும்பாலான மக்களின் உடல் மற்றும் மனநிலையை அதிகளவில் பாதித்து உள்ளது.

இதில் புதிய தாய்மார்கள் தங்கள் குழந்தை மற்றும் தங்களுடைய ஆரோக்கியம் குறித்து பயம், கவலை மற்றும் பதட்டம் அடைவதாக புள்ளி விவரங்கள் கூறப்படுகின்றன.

ஆய்வுத் தகவல்கள்
ஃபிரான்டியர்ஸ் இன் குளோபல் வுமன்ஸ் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கோவிட் -19 ஆல் புதிய தாய்மார்களின் மனச்சோர்வு மற்றும் கவலை அறிகுறிகள் அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆய்வு முடிவின் படி 7 பெண்களில் ஒருவர் இந்த மன அழுத்த நிலைகளுடன் பிரசவ காலத்தை போராடி வருவதாக தெரிய வந்துள்ளது.

900 பெண்களைக் கொண்ட ஆய்வு
கனடாவின் ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 900 பெண்களை ஆய்வு செய்தனர். இதில் 520 பேர் கர்ப்பமாக இருந்தனர், 380 பேர் கடந்த ஆண்டில் குழந்தை ஈன்றவர்கள். தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் அந்த பெண்களின் மனச்சோர்வு மற்றும் கவலை அறிகுறிகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது.
அவர்களில் 29 சதவீதம் பேர் மிதமான முதல் அதிக கவலை அறிகுறிகளையும், 15 சதவீதம் பேர் மனச்சோர்வு அறிகுறிகளையும் அனுபவித்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இருப்பினும், தொற்றுநோய்களின் போது இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. பெண்களில் 72 சதவிகிதம் பேர் பதட்டத்தை அனுபவிக்கின்றனர், 41 சதவிகிதத்தினர் மனச்சோர்வை எதிர்கொள்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மனச்சோர்வு அறிகுறிகளுக்கான காரணங்கள்
உடல் செயல்பாடு மட்டுமல்ல மனநிலையும் மனச்சோர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. கணக்கெடுக்கப்பட்ட மொத்த பெண்களில், 64 சதவீதம் பேர் தொற்றுநோயைத் தொடர்ந்து உடல் செயல்பாடுகளைக் குறைத்து வீட்டுற்குள்ளே அடைபட்டு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
ஒரு வாரத்தில் குறைந்தது 150 நிமிட மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகள் கணிசமாகக் குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் மனநோய்களின் பக்க விளைவுகள்:
கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் மனச்சோர்வு மற்றும் கவலை அறிகுறிகளைக் கொண்டிருப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இது பல ஆண்டுகளாக நீடிக்க வாய்ப்பு உள்ளது. இத்தகைய மனச்சோர்வு தாய், குழந்தையின் பிணைப்பை குறைத்தல், குழந்தையின் வளர்ச்சியை தாமதப்படுத்துதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புதிய அம்மாக்களுக்கு COVID-19 இன் தாக்கம் குறித்து இந்த ஆய்வில் கவனம் செலுத்திய அதே வேளையில், தொற்றுநோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தாய்வழி மன ஆரோக்கியம் ஒரு முக்கியமான பிரச்சினை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். இந்த சூழ்நிலையில் பொதுவாக பெரும்பாலான கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பிறகான பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு உதவ குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் இல்லை. இதுவே அவர்களின் மன ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது.
கர்ப்பிணி மற்றும் மகப்பேற்றுக்கு பிறகான பெண்களின் மன ஆரோக்கியத்தில் சமூக தனிமைப்படுத்தலின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மனச்சோர்வு மற்றும் கவலைகளை போக்க உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது?
உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் பதட்டத்தை குறைக்கவும் உடற்பயிற்சி உதவும். இது நல்ல உணர்வை உண்டாக்கும் எண்டோர்பின்கள் மற்றும் பிற இயற்கை மூளை இரசாயனங்கள் வெளியீட்டைத் தூண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடற்பயிற்சி செய்வது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை உணர்த்தும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்கள் மனதை திசை திருப்பும். கூடுதலாக, உடற்பயிற்சி செய்வது உங்களின் உடல் அழகான வடிவம் பெற உதவும், இது உங்கள் தோற்றத்தைப் பற்றி நன்றாக உணரவும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும்.
எனவே சமூக தொடர்புகளை பெற உடற்பயிற்சி செய்வது அவசியம். மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் காலார சுற்றுப்புறத்தை சுற்றி நடப்பது மற்றவர்களை சந்திக்க அல்லது பழகுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கீல்வாதம் போன்ற சுகாதார நிலைமைகளுக்கு வழக்கமான உடற்பயிற்சி சிறந்த வழியாகும்.
எனவே கர்ப்பிணி பெண்கள் இந்த மாதிரியான கால கட்டத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க உடல் சார்ந்த செயல்பாடுகளில் கொஞ்சம் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











