Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
பாப்பா பார்த்து சிரிச்சா முடி கொட்டுமா?

கர்ப்ப காலத்தில் பெண்களின் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடுகள் இருக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பிறகு ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும் எனவே கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பிக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். பழங்கள், காய்கறிகளில் ப்ளேவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன அவை கூந்தல் உதிர்வதை தடுக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கீரைகள், புளு பெர்ரீ, கிவி பழம், போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் பிரசவத்தின் போது உடல் இழந்த சத்துக்கு ஏற்ப பேலன்ஸ் ஆகும்.
பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் தங்களின் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே அவர்களுக்கு நாளடைவில் உடலில் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே தாய்மார்கள் தங்களின் உடலில் வைட்டமின் பி காம்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் இ, பயோடின், துத்தநாகம் போன்றவை குறையாமல் பாதுகாக்க சரிவிகித ஊட்டச்சத்துணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் வீட்டில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு மைய அரைக்கவும். அதை தலையில் பூசி ஊறவைக்கவும். பின்னர் மைல்ட் ஷாம்பு, கன்டிசனர் போட்டு அலசவும். தலை பட்டுப்போல இருக்கும்.
விளக்கெண்ணெயை சூடாக்கி அதில் பாதாம் எண்ணெயை ஊற்றி கலக்கவும். இந்த கலவையை தலையில் அப்ளை செய்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இவ்வ்வாறு செய்து வர முடி உதிர்தல் கட்டுப்படும். அதேபோல் தேங்காய் பாலும், கற்றாழையும் கூந்தலுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றது. இவற்றை ஒன்றாக சேர்த்து கூந்தலின் வேர்களில் படுமாறு மசாஜ் செய்யவும். பின்னர் அரை மணிநேரம் ஊறியபின்னர் மசாஜ் செய்யவும்.



Click it and Unblock the Notifications
