Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
புது அம்மாவிற்கு ஏற்ற மசாஜ்! உடம்பை ரிலாக்ஸ் ஆக்கும்!

ரிலாக்ஸ் செய்யுங்கள்
குழந்தை பிறந்த உடன் அவர்களை நன்றாக கவனிக்கவேண்டுமே என்ற கவலை பெண்களை பீடித்துக்கொள்ளும். இதுவே மனஅழுத்தத்தில் கொண்டுபோய் விடும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தளர்வடைந்து போயிருப்பவர்களுக்கு மசாஜ் சிறந்த நிவாரணியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடல் வலியை போக்குங்கள்
பிரசவத்தின் போது ஏகப்பட்ட உதிரப்போக்கு இருந்திருக்கும். இதனால் சத்துக்கள் குறைந்து உடல் வலி பின்னி எடுக்கும். பாதங்களிலும், தொடைகளிலும் வலி தெறிப்பதோடு தோள்களிலும் முதுகுப் பகுதிகளிலும் வலி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு மசாஜ் செய்வது உடல் வலியை சற்றே குறைக்கும். உடலில் ஆங்காங்கே மெதுவாக பிடித்து விட்டு மசாஜ் செய்துவிடுங்களேன். கணவர் இதை செய்து விடலாம். பெண்களுக்கு உடனடி ரிலீப் கிடைக்கும்.
ரத்தம் உடலில் பாயும்
பாடி மசாஜ் செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்தம் நன்றாக பாயும். இதனால் ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சப்ளை ஆவதால் உடல் வலி குறையும். அதோடு மசாஜ் செய்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்குமாம். மார்புப் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்வதால் அதன் காம்புப் பகுதியில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்குவதோடு அதிக அளவில் பால் சுரக்கும்
உடல் அழகாகும்
பிரசவத்தினால் தசைகள் தளர்ந்து போயிருக்கும். அவர்களுக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்வதால் தசைகள் இருகும். உடலானது படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பும். அதோடு ஆங்காங்கே கொழுப்புகள் சேர்ந்துள்ள பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் அவை கரைந்து எடை குறைவதோடு உடல் சிக் என்று மாறிவிடும். மேலும் தழும்புகள் இருக்கும் பகுதிகளில் ஆயில் விட்டு மசாஜ் செய்வதன் மூலம் பிரசவ தழும்புகள் மறையும்.
பிரசவத்திற்குப் பின்னர் மசாஜ் செய்வதனால் உடலானது பழைய நிலைக்கு திரும்பும் என்றாலும் சிசேரியன் செய்தவர்கள் தையல் காய்ந்து பிரிக்கும் வரை காத்திருக்கவேண்டும். பின்னர் மிதமான வெந்நீரில் குளிக்கவேண்டும். மசாஜ் செய்த பின்னரும் வெந்நீரில் சில துளி எலுமிச்சையை சேர்த்து குளிக்கலாம். உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆக இருக்கும்.



Click it and Unblock the Notifications
