Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
நல்ல டான்ஸ் ஆடுங்க! உடம்பு பழைய நிலைக்கு வரும்!

தாய்ப்பால் கொடுங்க
தாய்ப்பால் கொடுத்தால் மார்பு தொங்கிப்போய் அழகு கெட்டுவிடும் என்று சில பெண்கள் நினைக்கின்றனர். இது தவறான எண்ணம். தாய்ப்பால் எந்த அளவிற்கு கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு உடலில் வடிவம் பழைய நிலைக்கு திரும்பும் என்கின்றனர் நிபுணர்கள். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் உடம்பில் கண்ட இடங்க்களில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறதாம்.
ஜும்பா நடனம்
ஜும்பா எனப்படுவது ஒருவகையான லத்தின் நடனம் இசையை ஒலிக்க விட்டு பின்னர் உடலை அசைத்து ஆடுவது இதன் சிறப்பம்சம். இந்த நடனமாடுவதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புகள் கரைகின்றன. தினசரி ஒருமணிநேரம் நடனமாடுவதன் மூலம் 500 கலோரிகள் காலியாகின்றனவாம். புதிதாய் குழந்தை பெற்ற பெண்மணிகள் உற்சாகத்துடன் இந்த நடனத்தை ஆடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
சத்தானதா சாப்பிடுங்க
குழந்தை பிறப்பிற்கு முன் எந்த அளவிற்கு உணவு விசயத்தில் கவனமாய் சத்தானதாய் சாப்பிட்டோமோ அதேபோல பிரசவத்திறகு பின்னரும் சத்தான பழங்கள், காய்கறிகளை சாப்பிடவேண்டும். அதிக கொழுப்பு சத்துள்ள, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. மீன் உணவுகள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இது உடலிற்கு தேவையான நல்ல கொழுப்புக்களை தருவதோடு உடலின் வடிவத்தையே மாற்றும்.
குட்டீஸ் உடன் வாக்கிங்
பிறந்த குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருப்பது சிரமமாக இருக்கும். எனவே குட்டீசை அவர்களுக்கு உரிய ஸ்பெசல் டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வாக்கிங் போங்களேன். இதனால் தினசரி 100 கலோரிகள் காலியாகின்றனவாம்.
நல்லா நீச்சலடிங்களேன்
பிரசவத்திற்குப் பின்னர் உடலில் அதிகம் கொழுப்பு சேரும் சேரும் இடம் வயிறுதான் எனவே வயிற்றில் உள்ள கொழுப்பு கரையும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நீச்சல் சிறந்த உடற்பயிற்சி. இது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் சிறந்த பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். இதனால் பிரசவத்திற்குப் பிந்தைய மனஅழுத்தம் கூட ஏற்படாதாம்.
பிரசவத்திற்குப்பின்னர் சரியாய் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ முடியாது. கண்ட நேரத்தில் உறங்கவேண்டியிருக்கும். இதுவே உடல் எடை அதிகரிக்க காரணம் என்கின்றனர் நிபுணர்கள். எனவே சரியான நேரத்திற்கு உறங்கி, ஓய்வெடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினால் பிரசவத்திற்கு பிந்தைய உடலின் வடிவம் சரியான நிலைக்கு திரும்பும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications











