Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
பெற்றோர்களின் நடத்தை குழந்தையின் மனநிலையை பாதிக்குமா? இதில் நீங்கள் எந்த வகையான பெற்றோர்?
Parenting Tips In Tamil: குழந்தை வளர்ப்பு என்பது கஷ்டமான விஷயமாக ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இது ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை வளர்ப்பில் பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
சில சமயங்களில் நாம் உணர்வுப் பூர்வமாக செயல்பட வேண்டியிருக்கும். சில சமயங்களில் குழந்தையின் உணர்வுகளையும் அவர்கள் பக்கத்தில் இருக்கும் நியாயங்களையும் அறிந்து செயல்பட வேண்டியிருக்கும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் எல்லா பெற்றோரும் அப்படி நடந்து கொள்வதில்லை.

சில பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பான பெற்றோர்களாக இருக்கிறார்கள், சிலர் மிகவும் செல்லமாக குழந்தையை வளர்க்கிறார்கள். இப்படி பெற்றோரின் சில நடத்தைகள் உங்கள் குழந்தையின் மனநிலையை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களின் நடத்தை உங்கள் குழந்தையின் மனநிலையை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
இதில் நீங்கள் எந்த வகை பெற்றோர்?
சர்வாதிகார பெற்றோர்
நம்மில் பலர் சர்வாதிகார பெற்றோராக இருக்கின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கு எப்பொழுது பார்த்தாலும் கடுமையான விதிகள், அதிக எதிர்ப்பார்ப்புகள் மற்றும் குழந்தை கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் போன்ற பல குணாதிசயங்களை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களிடத்து திறந்த உரையாடல் என்ற எண்ணம் இருக்கவே இருக்காது. இந்த மாதிரியான சர்வாதிகார பெற்றோர் கீழ்ப்படிதலில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்துகின்றனர்.
அதிகாரப்பூர்வ பெற்றோர்
அதிகாரப்பூர்வ பெற்றோர்கள் தெளிவான விதிகள் மற்றும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பார்கள். இந்த வகை பெற்றோர்கள் குழந்தையை ஒழுக்கத்துடன் வளர்ப்பார்கள். குழந்தையின் உணர்வுகளை கணக்கில் கொண்டு குழந்தையுடன் வெளிப்படையாக பேசுவார்கள். நேர்மறையான எண்ணங்களை குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
அனுமதி அளிக்கும் பெற்றோர்
சில பெற்றோர்கள் விதிகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளை விட குழந்தையின் மகிழ்ச்சிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தை கொடுப்பார்கள். வரம்புகளை நிர்ணயிக்காமல் குழந்தையின் மகிழ்ச்சியை நிறைவேற்றுவார்கள். இத்தகைய பெற்றோர்கள் குழந்தையின் ஒழுக்கத்தை பெரியதாக கண்டு கொள்வதில்லை.
ஈடுபாடற்ற பெற்றோர்கள்
இத்தகைய பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் பெரியதாக ஈடுபாடு கொண்டு இருக்க மாட்டார்கள். பெற்றோர்களின் மேற்பார்வை குழந்தைகள் மீது குறைவாக இருக்கும். குறைந்த பட்ச வழிகாட்டுதல், ஆதரவு அல்லது கவனத்தை மட்டுமே வழங்குவர். இது குழந்தையின் சாத்தியமான வளர்ச்சி மற்றும் உணர்ச்சி சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
ஒரு பெற்றோரின் நடத்தை குழந்தையின் மன ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது?
ஒரு பெற்றோரின் நடத்தை குழந்தையின் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் கணிசமாக பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக கண்டிப்பான பெற்றோர்கள் ஒரு குழந்தைக்கு பிரஷர் குக்கர் போன்ற சூழ்நிலையை உருவாக்குகின்றனர். அதாவது குழந்தைகளுக்கு எப்பொழுது பார்த்தாலும் அதிக அழுத்தத்தை கொடுக்கின்றனர். இது குழந்தையின் உணர்ச்சியை பெரிய அளவில் பாதிக்கிறது.
குழந்தைகள் மீது திணிக்கப்படும் தொடர்ச்சியான விமர்சனங்கள், சிறுமைப்படுத்துதல் அல்லது அதிக எதிர்ப்பார்ப்புகள் குழந்தைகளுக்கு குறைந்த சுயமரியாதை உணர்வுகளுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தை அடிக்கடி எதிர்மறை உணர்வுடன் காணப்பட்டாலோ அல்லது தன்னம்பிக்கை உடன் போராடினாலோ பெற்றோரின் நடத்தை குழந்தையின் சுய மதிப்பு உணர்வை பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதே மாதிரி குழந்தைகளை சவால்களில் இருந்து பாதுகாக்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் திறனை தடுக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே மாதிரி முரண்பாடான ஒழுக்கம் மற்றும் அதிகப்படியான அனுமதி அளிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் பல்வேறு நடத்தை சிக்கல்களை சந்திக்கின்றனர். இதனால் குழந்தைகள் சுய கட்டுப்பாட்டுடன் போராடுதல், ஆக்கிரமிப்பு அல்லது எதிர்மறையான நடத்தைகள் மற்றும் விதிகளை பின்பற்றுவதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
குழந்தையின் உணர்ச்சி சிக்கல்கள்
மருத்துவ நிபுணரின் கூற்றுப்படி, குழந்தை உணர்ச்சிப் பூர்வமான ஆதரவைப் புறக்கணிப்பது, குழந்தையின் உணர்வுகளை நிராகரிப்பது, உணர்ச்சி வெளிப்பாடுகளை அடக்குவது போன்றவை குழந்தையின் உணர்ச்சி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சில குழந்தைகள் சமூகத்தில் இருந்து தனியாக இருப்பது, சமூக விலகல் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
குழந்தையின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை திணிக்கும் பெற்றோரால் ஏற்படும் பிரச்சினைகள்
உங்கள் குழந்தையிடம் அதிகமாக கோருவது, நம்பத்தகாத எதிர்ப்பார்ப்புகளை வைத்திருப்பது கீழ்க்கண்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
* குழந்தையின் சாதனையில் அதீத கவனம் செலுத்த வலியுறுத்தல்
* குழந்தைகள் வெற்றி பெற பெரும் அழுத்தத்தை கொடுத்தல்
* குழந்தைகள் தவறு செய்யும் போது பயம் உண்டாதல்
* நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுதல்
போன்ற பிரச்சினைகளை உங்களின் நடத்தையால் குழந்தைகள் சந்திக்கின்றனர். எனவே பெற்றோர்களே! ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை ஏற்றுக் கொண்டு ஒப்புக் கொண்டு அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications