உங்க குழந்தை சுறுசுறுப்பா, ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த 8 நிமிட உடற்பயிற்சிகளை சொல்லி கொடுங்க..

Morning Workouts For Kids: விடுமுறையில் குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும். குழந்தைகள் ஓடியாடி விளையாடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் அவர்களின் உடல் எடையை இதன் மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். எனவே குழந்தைகளுக்கு உடல் செயல்பாடுகள் அவசியம்.

எனவே குழந்தைகள் காலை எழுந்ததும் சில உடற்பயிற்சிகள் செய்வது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் குழந்தைகள் உடற்பயிற்சி செய்வது குழந்தையின் கவனம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. இதனால் உங்கள் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.

Morning Workouts For Kids In Tamil

ஆகவே உங்கள் குழந்தைகள் எளிதாக செய்யும் வகையில் வெறும் 8 நிமிட உடற்பயிற்சிகளை உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம். இதற்காக உங்கள் குழந்தைகள் நிறைய மெனக்கெட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வெறும் 8 நிமிடங்கள் செலவழித்தால் போதுமானது உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் நலம் பெற உதவி செய்யும்.

குழந்தைகள் ஏன் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடு குழந்தை வளர்ச்சிக்கு உகந்தது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

* ஒட்டுமொத்த மோட்டார் வளர்ச்சிக்கு உதவுகிறது.
* உடல் சமநிலையை மேம்படுத்துகிறது
* உடல் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது.
* சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது
* சிறந்த மோட்டார் திறனுக்கு உதவுகிறது.
* சுய ஒழுங்குமுறையை மேம்படுத்துகிறது.
* அதிவேகத்தன்மை மற்றும் படபடப்பைக் குறைக்கிறது (குறிப்பாக ADHD அல்லது ASD உள்ள குழந்தைகளில் இந்த நன்மையை அளிக்கிறது)
* குழந்தைகளின் கவனத்தை மேம்படுத்துகிறது
* பதட்டத்தை குறைக்கிறது மற்றும் மனநிலையை அதிகரிக்கிறது
* சிறந்த கற்றல் திறனை கொடுக்கிறது.

உடற்பயிற்சி செய்வது மூளையில் உள்ள நரம்பியல் கடத்தியை பாதித்து கார்டிசோல் மற்றும் அட்ரீனல் ஹார்மோனை குறைக்கிறது. எனவே இதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது. இது டோபமைன் மற்றும் செரோடோனினை அதிகரிக்கிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. புதிய திறனை அதிகரிக்கிறது. உணர்வு ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.

குழந்தைகள் செய்வதற்கான 8 நிமிட விலங்கு உடற்பயிற்சிகள்:

இந்த விலங்கு உடற்பயிற்சிகளை உங்கள் குழந்தைகள் எளிதாக செய்ய முடியும். விலங்குகளைப் போல சத்தம் போட்டுக் கொண்டே இதை நீங்கள் எளிதாக செய்யலாம். உங்கள் குழந்தைகளும் இந்த உடற்பயிற்சிகளை விரும்பி செய்வார்கள்.

உடற்பயிற்சி செய்ய தேவையான பொருட்கள்:

* தண்ணீர்
* இசை
* யோகா பாய்
* ஸ்னீக்கர்கள்
* டைமர்

வழிமுறைகள்:

இந்த உடற்பயிற்சியை 45 நிமிடங்கள் நீங்கள் செய்ய வேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நகர்வுக்கு ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சிகள்:

பல்லி மாதிரி ஓடுதல்

யோகா பாயை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகள் அல்லது முன்கைகள் தரையில் இருக்க வேண்டும். இப்பொழுது முதுகை நேராக வைத்து கைகளை முன்னே ஊன்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் கால் விரல்களால் உங்கள் கீழ் உடலை பல்லி மாதிரி தாங்கிப் பிடியுங்கள். இப்பொழுது உங்கள் கைகள் மற்றும் முழங்கால்களை ஒரே நேரத்தில் அசைத்து ஒரு சிறிய பல்லியைப் போல ஓடுங்கள். இதன் மூலம் உங்கள் முழு உடலும் வேலை செய்கிறது. மைய வலிமையை மேம்படுத்துகிறது. குழந்தையின் மோட்டார் திறனை அதிகரிக்கிறது.

குரங்கு ஏறுதல்

இப்பொழுது உங்கள் குழந்தையை நேராக நிமிர்ந்து கால்களை சற்று இடுப்பு அகலத்தில் வைக்க செல்லுங்கள். இப்பொழுது உங்கள் முழங்கைகளை வளைக்க வேண்டும். இப்பொழுது உங்கள் கைகள் தோள்பட்டைக்கு அருகில் இருக்கும். இப்பொழுது உங்கள் வலது கையை தலைக்கு மேலே தூக்க வேண்டும்.

அதே நேரத்தில் உங்கள் இடது முழங்காலை இடுப்பு வரைக்கு உயர்த்த வேண்டும். அப்புறம் அதை பழைய நிலைக்கு கொண்டு வந்து விட்டு இடது கையை தலைக்கு மேலே உயர்த்தி, வலது முழங்காலை இடுப்பு வரைக்கும் தூக்க வேண்டும்.

ஹம்மிங் பறவை உடற்பயிற்சி

உங்கள் குழந்தையை நேராக நிற்கச் சொல்லுங்கள். கால்களை ஒன்றாக இணைத்து நிற்க வேண்டும். உங்கள் கைகளை இரண்டும் பக்கவாட்டில் நீட்டி சிலுவை வடிவில் நிற்க வேண்டும். பிறகு உங்கள் கைகளை சிறிய அளவில் வட்ட இயக்கத்தில் சுற்ற வேண்டும். காற்றாலை போன்று பறவை பறப்பது போன்று பறக்க வேண்டும்.

ஹம்மிங் பறவை சிறிய மற்றும் வட்டமான இயக்கத்தில் இறக்கைகளை அடிக்கிறது. கைகள் மற்றும் தோள்களில் உள்ள மூட்டுகளைத் தூண்டுவதற்கு இந்த நடவடிக்கை உதவுகிறது. இது ப்ரோபிரியோசெப்டிவ் என்று அழைக்கப்படுகிறது. நமது உடலின் புரோபிரியோசெப்டிவ் உள்ளீடு ஏற்பிகள் மூட்டுகள் மற்றும் தசைநாண்களில் அமைந்துள்ளன. இந்த ஏற்பிகள் அழுத்தம், பதற்றம் மற்றும் நீட்சி இவற்றால் தூண்டப்படுகிறது. இந்த உடற்பயிற்சி உடல் விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகிறது.

கங்காரு போல் குதித்தல்

முதலில் உங்கள் குழந்தையை நேராக நிற்கச் சொல்லுங்கள். இடுப்பு அகலத்தை விட சற்று கால்களை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, உங்கள் முழங்கால்களை சுமார் 45 டிகிரி கோணத்தில் வளைத்து பின்னர் உங்களை ஸ்ப்ரிங் செய்து, உங்களால் முடிந்தவரை உயரத்தில் குதிக்க கங்காரு மாதிரி தாவித் தாவி குதிக்க வேண்டும்.

45 டிகிரி கோணத்தில் உங்கள் முழங்கால்களை மறுபடியும் தரையிறக்கி மீண்டும் செய்யவும்.உங்கள் கைகளை உங்கள் முன் நேராக நீட்டிக் கொள்ளுங்கள். சகிப்புத்தன்மை மற்றும் உடல் சமநிலை இரண்டையும் உருவாக்க இந்த உடற்பயிற்சி உதவுகிறது.

பாம்பு ஊர்தல்

இந்த உடற்பயிற்சிக்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு உங்கள் கால்களை நேராக தரையில் நீட்டிக் கொள்ளுங்கள். உங்கள் முன் கைகளை நேராக நீட்டி பாம்பு ஊர்வது போன்று முன்னோக்கி இழுக்க முன்கைகளை பயன்படுத்தி நகர்ந்து செல்லுங்கள். உங்கள் உடல் எடையை ஆதரிக்க கால்களை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இங்கே கால்கள் நீண்ட பாம்பின் வால் போன்று செயல்படுகிறது.

Story first published: Sunday, August 27, 2023, 10:00 [IST]
Desktop Bottom Promotion