Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?
காலநிலை மாற்றத்தை பெரியவர்கள் நன்றாக கையாள முடியும் என்றாலும், குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக இருப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது மிதவெப்ப மண்டல காலநிலையுள்ள இடங்களில், இலையுதிர் காலத்திற்கும், இளவேனில் காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும். சில நாடுகளில் பனிமழை பெய்யும். வெயில் காலத்தை காட்டிலும் குளிர்காலத்தில் தான் அதிக உடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இந்தக் காலங்களில் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, உணவு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக குழந்தைகளின் சருமம் மிகமிக மிருதுவாக இருக்கும். பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாகவும் சென்சிடிவ்வாகவும் இருக்கும். கொசு, எறும்பு ஆகியவை கடித்தவுடன் சிகப்பான திட்டுகளும், கொப்புளங்களும் மற்றும் அலர்ஜியும் அவர்களுக்கு ஏற்படும். அதனால் தான், குழந்தைகளின் சரும பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். மிகவும் மென்மையாக இருக்கும் குழந்தைகளின் சருமம் குளிர்காலங்களில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சரும வறட்சி
குளிர்காலத்தில் இயற்கையாக காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து காணப்படும். இந்த காலநிலை மாற்றத்தை பெரியவர்கள் நன்றாக கையாள முடியும் என்றாலும், குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக இருப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு குழந்தையின் தோல் வயதுவந்தவரின் தோலை விட ஐந்து மடங்கு வேகமாக ஈரப்பதத்தை இழக்கிறது. எனவே சுற்றியுள்ள காற்று அவற்றின் ஈரப்பதத்தை இழக்கும்போது மிருதுவாக இருக்கும் குழந்தைகளின் சருமம் வறண்டு காணப்படும். இது குழந்தைகளின் முகம், கை, முழங்கால் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், உடலில் தடிப்பு போன்ற நிறைய சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கன்னம் மற்றும் உதடுகளில் வெடிப்பு ஏற்படுதல்
பொதுவாக இப்பிரச்சனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும். சருமம் வறண்டு போகும்போது கன்னத்தில் கீறல் போன்ற கோடுகள் மற்றும் உதடுகளில் வெடிப்பு ஏற்படும். உதட்டின் ஈரப்பதம் குறைந்துகொண்டே இருக்கும். பெரியவர்கள் அனைவரும் தங்களுடைய நாவால் உதட்டினை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கு அவ்வாறு செய்ய தெரியாது. இதனால், உதட்டின் வெடிப்பில், சில நேரங்களில் இரத்தம் வெளியேறும்.
உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசலாம். வறண்ட சருமம் உள்ள குழந்தைகளின் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளிக்க வைத்தால் சருமம் சீராகும்.

எக்ஸிமா
எக்ஸிமா எனப்படும் சரும பாதிப்பு பெரும்பாலும் குழந்தைகளின் முகத்தில் தான் ஏற்படும். தோல் அரிப்பு, சிவப்பு நிற திட்டுக்கள், வீக்கமடைதல், நீர் வடிதல் மற்றும் செதிலாக உரிதல் போன்ற பிரச்சனைகள் உடலில் பல்வேறு இடங்களில் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆஸ்துமா அலர்ஜி அல்லது சருமப் பிரச்சனை இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளை கொஞ்சும் போதும், அதீத வறட்சி ஏற்பட்டாலும் குழந்தைக்கு இப்படியான சரும பாதிப்புகள் ஏற்படும். சில நேரங்களில், குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது வெப்பநிலையில் திடீர் மாற்றத்திற்கு ஆளாகியிருந்தாலும் தோல் அலர்ஜியை ஏற்படுத்தும்.

தொற்று நோய்கள் எளிதில் தாக்கும்
குளிர்காலத்தில் குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். இதற்கு காரணம் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். குளிர்காலங்களில் சிவப்பு திட்டுகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதால், வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள பழங்களை குழந்தைகள் உண்டால் உடலுக்கு சக்தி தரும்.
காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன் போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பது
குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் துணிகள் சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இதுவும் குழந்தைகளின் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திடும். சருமத்தில் பொரிப்பொரியாக வந்தாலோ அல்லது அலர்ஜி ஏற்பட்டாலோ சுத்தமான தண்ணீரைக் கொண்டு துடைக்க வேண்டும்.
அதிக வாசனைகொண்ட சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் துணியை அலசுவதற்கான சோப்பையும் அதீத வாசம் கொண்டதாக இருந்தால் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் உடலுக்கு தேவையான சத்து தரக் கூடிய க்ரீம்கள் மற்றும் மாய்ஸ்சுரைசிங் (moisturizing) க்ரீம் ஆகியவற்றைத் தடவுவதால் இந்த திட்டுகள் மற்றும் அலர்ஜியில் இருந்து குழந்தைக்கு சரியாக வாய்ப்பு உள்ளது. தோல் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் குழந்தையை நேரில் மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது நல்லது. அருகில் உள்ள தோல் நோய் நிபுணரிடம் குழந்தையை அழைத்து சென்று காட்டுகள்!



Click it and Unblock the Notifications