Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
லாக்டவுனில் குழந்தைகளை சமாளிக்க முடியலையா? இத ட்ரை பண்ணுங்க...
கொரோனா பற்றிய பயமும் மன அழுத்தமும் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் செய்து விடுகிறது. எனவே வீட்டில் இருக்கும் உங்க குழந்தைகளை எப்படி பிஸியாகவும் உற்சாகமாகவும் வைக்கலாம்.
COVID-19 தொற்றால் நம் அலுவலகங்கள், பள்ளிகள், குழந்தைகளின் பொழுது போக்கு அம்சங்கள் என்று எல்லாமே முடங்கி விடப்பட்டுள்ளது. கொரோனா தனிமை, சமூக விலகல் பெரியவர்களையே தாக்கும் போது குழந்தைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? குழந்தைகளும் ஏகப்பட்ட மனச்சோர்வையும் மன அழுத்தத்தையும் சந்தித்து வருகிறார்கள். பட்டாம்பூச்சி போல சுற்றி சுற்றி வரும் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே பிடித்து வைப்பது குழந்தைகளை விட பெற்றோர்களுக்கு பெரிய பிரச்சினையை உண்டாக்குகிறது. இதனால் என்னவோ குழந்தைகளும் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்த குழந்தைகள் கூட எப்பமா பள்ளிகள் திறக்கும் என்று ஏங்க துவங்கி விட்டார்கள். அந்த அளவுக்கு கொரோனா உடல் ரீதியாக மட்டுமல்ல உணர்வு ரீதியாகவும் நம்மிடம் விளையாடி விட்டது. கொரோனா பற்றிய பயமும் மன அழுத்தமும் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் செய்து விடுகிறது.
இதனால் குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாடுகளும் பாதிப்படைந்து வருகின்றன. எனவே வீட்டில் இருக்கும் உங்க குழந்தைகளை எப்படி பிஸியாகவும் உற்சாகமாகவும் வைக்கலாம். அவர்களின் பொழுதை எப்படி ஜாலியாக போக்குவது, கொரோனா பற்றிய பயம், எரிச்சலை எப்படி களைவது, குழந்தைகளின் மனச்சோர்வை போக்கி குதூகலமாக்க பெற்றோர்களே இதோ உங்களுக்கான சிறந்த வழிகள்.

அட்டவணையை உருவாக்குங்கள்
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வரை ஒவ்வொரு மணி நேரமும் என்ன செய்ய வேண்டும் என்ற அட்டவணை இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரிவதில்லை. இதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு நிலையான வழக்கம் இல்லாமல் இருப்பதே ஆகும். எனவே தினசரி நிலையான வழக்கத்தை நீங்கள் பின்பற்றினால் நல்ல மாற்றத்தை அவர்களிடம் நீங்கள் காண முடியும். அவர்களுக்கான சரியான படிப்பு நேரம், உணவு நேரம் மற்றும் விளையாட்டு நேரத்தையும் திட்டமிடுங்கள். இது அவர்களின் செயல்பாடு, முடிவெடுக்கும் திறன் என எல்லாவற்றையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உங்க மன அழுத்தத்தை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள்
வீட்டிலேயே இருந்து அனைத்து வேலைகளையும், குடும்பத்தையும் நிர்வகிப்பது உங்களுக்கு எரிச்சலை தரலாம். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர், இதன் படி பெற்றோர்கள் வெளிப்படுத்தும் மன அழுத்தம் குழந்தைகளையும் பாதிப்பது தெரிய வந்துள்ளது. இந்த விவரங்கள் தொழில்சார் சுகாதார உளவியல் இதழில் வெளியிடப்பட்டது. எனவே குழந்தைகளிடம் எப்பொழுதும் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். அமைதியாக அவர்களை கையாள முற்படுங்கள்.

மொபைல், டிவியை அதிகமாக பார்க்காதீர்கள்
பள்ளிக்குச் செல்லும் போது குழந்தைகள் அதிகமாக டிவி, மொபைல் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் சதா டிவி, மொபைல் என்று உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு கண்களில் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. எனவே குழந்தைகள் மொபைல், டிவி பயன்படுத்துவதை குறையுங்கள். அதே மாதிரி நீங்களும் மொபைல், டிவியிலயே மூழ்கி இருக்காமல் இருங்கள். அல்பானியில் உள்ள பல்கலைக்கழகம், தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக லாங்கோன் மருத்துவ மையம் நடத்திய ஆய்வின்படி, ஒரு குழந்தை திரைகளுக்கு முன்னால் செலவழிக்கும் சராசரி நேரம் ஒரு நாளைக்கு 53 நிமிடங்களிலிருந்து 12 மாதங்களில் 150 நிமிடங்களுக்கு மேல் அதிகரித்துள்ளது என்றால் 3 ஆண்டுகளில் ஏற்படும் நிலையை யோசியுங்கள். இது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே குழந்தைகளின் திரை நேரத்தை குறையுங்கள்.

குழந்தையின் படிக்கும் பழக்கத்தை தொடருங்கள்
பள்ளிக்குச் செல்லும் வரை எல்லா குழந்தைகளும் ஒழுங்காக படித்துக் கொண்டு வந்து இருக்கும். ஆனால் தற்போது வீட்டிலேயே இருப்பது அவர்களின் படிப்பார்வத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களின் படிக்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். கற்றல் செயல்முறையை எளிதாக்குங்கள். கலிஃபோர்னியா-லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குழப்பமான வீடுகளும் சுற்றுப்புறங்களும் உங்கள் மனச்சோர்வின் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. எனவே உங்க குழந்தைகள் படிக்கும் போது வீட்டை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களைச் சுற்றி அமைதியான சூழலை உருவாக்கி மன ஆரோக்கியத்தை பேணுங்கள்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டாம்
குழந்தைகள் படிக்கும் போது ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அவர்களுக்கு முதுகுவலியை உண்டாக்க நேரிடலாம். இது அவர்களுக்கு எரிச்சலையும் உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே படிக்கும் போது குழந்தைகளை நேராக உட்கார்ந்து படிக்க பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகு மற்றும் கழுத்து வலியை தடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications











