For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அய்யோ! சின்ன குழந்தைகளுக்கு இதெல்லாமா சாப்பிட கொடுப்பாங்க...

குழந்தைக்கு 8 மாதங்கள் கடந்துவிட்டாலே போதும் அவர்களாகவே தங்களுக்கான உணவை தானே எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். உணவுத்தட்டை முன்னால் வைத்து ஸ்பூனைப் பிடித்து ஊட்டிவிட ஆரம்பித்து விடலாம்.

By Stalin Felix
|

கைக்குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது? அதும் அதன் பிஞ்சு விரல்களில் உணவைப் பிடித்து உண்ணும் அழகோ, கொள்ளை அழகு. முதல் ஆறுமாதம் தாய்பாலை தவிர வேறு எந்த உணவும் ஒரு குழந்தைக்கு கொடுக்காமல் இருப்பதே அந்த குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கான அஸ்திவாரம். அடுத்து மெதுவாக எட்டாவது மாதத்தில் இருந்து ஆரம்ப கால உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்ககலாம்.

baby foods

அப்போது தான் குழந்தை நாக்கில் சுவையை உணர ஆரம்பிக்கும். அதுவே மற்ற உணவுகள் கொடுப்பதற்கான சரியான காலகட்டமாகும். 10 மாதங்களுக்குள் முன்னால் இருக்கும் உணவுகளை தானே எடுத்து வாயில் வைத்துக்கொள்ள ஆரம்பித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் ஆறு மாதம்

முதல் ஆறு மாதம்

குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் ஆனபின் தாய்மார்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம். முந்தைய மாதங்களை போல் அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை ஆறு மாதத்திற்கு பிறகு குறைக்கலாம்.குழந்தை பாலுக்காக தாயை சார்ந்து இருப்பதும் ஆறு மாதத்திற்கு பின் குறையத் துவங்கும்.

தொடக்க கால உணவுகள்

தொடக்க கால உணவுகள்

உலக சுகாதார அமைப்பு (WHO), ஒரு குழந்தை ஆறு மாதத்தை எட்டிய பிறகு, தாய்ப்பாலுடன் மிதமான திட உணவு ஊட்ட பரிந்துரைக்கிறது. குழந்தை வளரும் நேரத்திலும், ஏன் குழந்தையின் ஆறு மாதத்திற்கு பிறகு கூட, குழந்தை சில நேரம் கூழ் உணவை விட தாய்ப்பாலையே விரும்புகிறது. மென்மையான, கூழ் உணவுகளை குழந்தைக்கு ஊட்டி, அந்த உணவுக்கு குழந்தை பழக்கப்பட்ட பிறகு வேகவைத்த திடமான உணவை அக்குழந்தைக்கு ஊட்டத் துவங்கலாம். சாப்பாடு நேரம் தவிர்த்து குழந்தைகளுக்கு 'ஃபிங்கர் ஃபுட் ' எனப்படும் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளையும் மற்ற நேரத்தில் அறிமுகப்படுத்தலாம்.

ஃபிங்கர் ஃபுட்ஸ்

ஃபிங்கர் ஃபுட்ஸ்

ஃபிங்கர் ஃபுட்ஸ், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் ஏற்றதே. குழந்தைகள் அந்த உணவை எளிதாக கைகளில் பிடித்து அதை அவர்களே உண்ணுவதற்கு உகந்ததாகவே இருக்கும். இப்படி ஃபிங்கர் ஃபுட்சுக்கு உங்கள் குழந்தைகளை பழக்கும் போது அதற்க்கு ஒருவயதோ அதற்க்கு மேலோ இருக்கலாம். சில குழந்தைகள் வெகு சீக்கிரமாகவே ஃபிங்கர் ஃபுட்சுக்கு தயார் ஆகி விடும். எந்த வயதில் குழந்தைக்கு ஃபிங்கர் ஃபுட்சுகளை கொடுக்கலாம் என தீர்மானிக்க வேண்டியது பெற்றோரகளாகிய நீங்களே. என்னென்ன விதமான ஃபிங்கர் ஃபுட்சுகளை உங்கள் குழந்தைக்கு தரலாம், அந்த உணவுகளால் என்னென்ன நன்மை என்பதை கீழே உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.

ஃபிங்கர் ஃபுட்சுக்கு உங்கள் குழந்தை தயாரா? தெரிந்துக் கொள்வது எப்படி?

ஃபிங்கர் ஃபுட்சுக்கு உங்கள் குழந்தை தயாரா? தெரிந்துக் கொள்வது எப்படி?

தனது சொந்த முயற்சியால் ஒரு குழந்தை எழுந்து, நகர்ந்து, உட்கார முடிந்தால் அது ஒரு நல்ல அறிகுறி. உங்கள் தட்டில் இருக்கும் உணவின் மீது ஆர்வம் கொண்டு உங்கள் உணவுகளை அக்குழந்தை பறிக்க முயல்வது. ஒரு பொருளை எடுப்பதற்கான வலிமையை குழந்தைகளின் கை பெறும்போது உங்கள் குழந்தை தயார் என புரிந்துக்கொள்ளுங்கள்.

பல் முளைத்தல்

பல் முளைத்தல்

பெருவாரியான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்தால் தான் கவலை இல்லாமல் உணவுகளை கொடுக்க துவங்குவார்கள். ஆனால், ஃபிங்கர் ஃபுட்சுகளை பொறுத்த வரையில், குழந்தைகள் தங்கள் ஈறுகளை வைத்தே அந்த உணவுகளை கொரித்துக் கொரித்து சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.

சிறிய துண்டுகள்

சிறிய துண்டுகள்

நீங்கள் குழந்தைக்கு உணவைத் தயாரிக்கும் போது, அது மிக சிறியதாகவும், குழந்தைத் தனது பிஞ்சு விரல்களால் அதை எடுத்துக்கொள்ள தக்க வரையிலும் இருப்பது போல கொடுங்கள். அப்படி சின்ன சின்ன துண்டுகளாகக் கொடுக்கும்போது கீழே போட்டு எடுத்து சிரமப்படாமல் கைக்கு அடக்கமாக அழகாக சாப்பிட கற்றுக் கொள்ளும். இந்தப் பழக்கம் அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் தொடரும்.

மென்மையான உணவுகள்

மென்மையான உணவுகள்

குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகள் மென்மையானதாகவும் மற்றும் மெல்லும் வகையில் இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு எந்த வகையிலும் ஆபத்தை உருவாக்காத வண்ணம் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானதாகும். குழந்தை தனது ஈறுகளால் மென்று, எளிதாக அது கூழாகி செல்லும் வகையில் இருக்க வேண்டும்.

கெட்டியான பிங்கர் ஃபுட்ஸ்

கெட்டியான பிங்கர் ஃபுட்ஸ்

சிலவகை கிரீம்கள், வேர்கடலை பட்டர், கேராமில்க்குகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதுபோன்ற உணவுகளில் நெகிழும் தன்மை குறைவாக இருக்கும். மிக எளிதாக இவை உருகிச் செல்லாது. உள்வாயில் மேல் பகுதியில் இவை எளிதாக ஒட்டிக்கொள்வதால், இது போன்ற உணவுகளை குழந்தைக்கு கொடுப்பதிலிருந்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உப்பு மற்றும் சர்க்கரை குறைவான உணவுகள்

உப்பு மற்றும் சர்க்கரை குறைவான உணவுகள்

பெரியவர்கள் உண்ணும் உணவை உங்கள் கை குழந்தைக்கு கொடுக்க முனையும் போது, அதில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு பெரியவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கலாம். எனவே, உப்பு மற்றும் சர்க்கரையை அளவை மிகவும் குறைத்து, முடிந்தால் தவிர்த்து குழந்தைகளுக்கான உணவை தயாரியுங்கள்.

ஊட்டுவது எப்படி?

ஊட்டுவது எப்படி?

உணவைச் சிறிது சிறிதாக நறுக்கி உடையாத ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொடுக்கலாம். காய்கறிகளை போல மிக மிருதுவாக, நன்றாக உணவுகளை வேக வைத்துக் கொடுக்க வேண்டும். உணவை எளிதாக எடுத்து உண்ணும் வகையில், கரண்டி மற்றும் மழுங்கிய ஃபோர்க்குகளை குழந்தைக்குப் பழக்கப்படுத்தலாம்.

பொறுமை

பொறுமை

இது பெற்றோராகிய உங்களுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் முதன்முதலாக சாப்பிட ஆரம்பிக்கும் போது உணவை வீணாக்குவார்கள். பாத்திரங்களை, ஸ்பூன்களை தூக்கி வீசுவார்கள். குழந்தைகள் உணவை மிகக் கவனமாக உண்ண பழகும் முன்பு இதுபோன்ற வேடிக்கைகளை எல்லாம் செய்துவிட்டு தான் கொஞ்சம் கொஞ்சமாக பழகுவார்கள். குழந்தைகள் உணவை உண்ணத் துவங்கும் காலகட்டத்தில், அவர்களை தனியாக விட்டு விட்டு எங்கேயும் செல்லக்கூடாது. அது சரி. வளரும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவைக் கொடுக்கலாம்?

உலர்ந்த தானியங்கள்

உலர்ந்த தானியங்கள்

உலர் தானியங்கள் எந்த வடிவமும் அற்றவை. ஃபிங்கர் ஃபுட் களில் மிகவும் பிரபலமான உணவும் இதுவே. குழந்தைகள் நுள்ளி எடுப்பதற்கு ஏற்ற வகையில் இவை உள்ளது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் எளிதாக இந்த உணவை குழந்தை உட்கொள்ளலாம்.

பிரட் மற்றும் பிஸ்கட்டுகள்

பிரட் மற்றும் பிஸ்கட்டுகள்

பிரட் மற்றும் பிஸ்கட் உணவுகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும், சத்துக்களையும் மட்டும் கொடுப்பதில்லை. அவை குழந்தைகளின் ஈறுகள் பலமாக உதவியாக இருக்கிறது. குழந்தை வளரும் நேரத்தில் வாழைப்பழம், அவகாடோ மற்றும் நட் கலந்த பட்டர்களுக்கு குழந்தையை பழக்கலாம்.

முட்டை

முட்டை

முட்டை ஒரு அசத்தலான ஃபிங்கர் ஃபுட் ஆகும். குழந்தைகளுக்கு முட்டைகளை ஊட்டுவதற்கு முன்பு அதை நன்றாக வேக வைப்பது மிக அவசியம். பின் அதைத் துண்டுத் துண்டாக வெட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வெட்டிய முட்டையின் மீது உப்புச் சேர்க்கக் கூடாது.

பழங்கள்

பழங்கள்

பழங்கள் மென்மையானவை, ருசியானவை, உடலுக்கு ஆரோக்கியமானவை. முதல் ஃபிங்கர் ஃபுட்டாக குழந்தைகளுக்கு பழங்களை அளிக்கலாம். வாட்டர் மெலன், பெர்ரிகள், வாழைப்பழங்கள் மிக சிறப்பான ஃபிங்கர் ஃபுட்கள் ஆகும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடாவில் புரதங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மிக மிருதுவானது, ஒட்டாது. ஒமேகா 3 சத்துகள் கொழுப்பு அமிலங்கள் அவகாடோவில் அதிகமாக உள்ளது. அது குழந்தையின் மூளைவளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை அவகேடா கொடுக்கிறது. குழந்தைக்கு பல் முளைக்கும் முன்பே அவகாடோவை குழந்தைக்கு ஊட்டலாம். பட்டர் போல மாவாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மில்க் ஷேக்காக செய்தும் கொடுக்கலாம்.

பாஸ்தா

பாஸ்தா

இதுவும் குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் பிடித்த உணவாகும். முதலில் நன்றாக வேகவைத்து, வேறு எந்த பொருட்களையும் உடன் சேர்க்காமல் குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தை வளர வளர, ஆலிவ் எண்ணை, பட்டர், தக்காளி சாஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.

டோஃபு

டோஃபு

டோஃபுவில் புரதசத்துக்கள் மிக அதிகம். டோஃபுவை சமைத்தோ, சமைக்காமலோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கான ஃபிங்கர் ஃபுட்சில் டோஃபு வையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறது என்ற புலம்பலே உங்களிடம் இருக்காது.

காய்கறிகள்

காய்கறிகள்

காய்கறிகளை வேகவைத்து கைக்குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஏற்கனவே நன்கு மசிந்த நிலையில் குழந்தைகளுக்கு காய்கறிகளை கொடுத்திருப்பீர்கள், அதனால் அவர்களுக்கு எளிதில் அதன் ருசி பிடிபடும். காய்கறியை நன்கு சமைத்து கொடுப்பதை விட வேகவைத்தோ, வாட்டியோ கொடுத்தால் காய்கறியில் இருக்கும் சத்துகள் ஆவியாகி வெளியேறாமல் தவிர்க்கலாம். சிவப்பு இனிப்பு உருளைகிழங்கு, கேரட், பிரக்கோலி, காலிபிளவர் போன்றவை குழந்தைகளுக்கு கொடுக்கும் காய்கறிகளில் அசத்தலானவை. தினமும் இப்படி ஒவ்வொரு நிற காய்கறிகளைக் கொடுத்தால் அவர்களும் ஆர்வத்துடன் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.

சீஸ்

சீஸ்

உங்கள் குழந்தைக்கு பால் பொருட்கள் மீது அலர்ஜிகள் இல்லாமல் இருந்தால், சீஸ் ஒரு நல்ல உணவாகும். எப்போதும் மெதுவான, வடிக்கட்டின சீஸ் வகைகளை தேர்ந்தெடுங்கள். ஒட்டும் கட்டியான சீஸ் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காதீர்கள்.

என்ன உங்கள் குழந்தைக்கு பிங்கர் ஃபுட்ஸ் ஊட்ட ரெடி ஆகிட்டீங்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Best Finger Foods For Your Toddler

When your baby's between 8 and 9 months old, she'll probably let you know that she's ready to start feeding herself – by grabbing the spoon you're feeding her with or snatching food off your plate
Story first published: Monday, March 26, 2018, 16:10 [IST]
Desktop Bottom Promotion