Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்..

பொய் சொல்லக்கூடாது
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்தான் சிறந்த முன் உதாரணம். எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நீங்கள்தான் கற்றுத்தரவேண்டும். பொய் சொல்வதனால் ஏற்படும் தீமைகளை பெற்றோர்கள்தான் கற்றுக்கொடுக்கவேண்டும். அதை விடுத்து யாரிடமாவது போனில் பேசும் போது வீட்டில் இருந்து கொண்டே வெளியூரில் இருப்பதாக கூறினால் அவசியத்திற்கு பொய் சொல்வது தப்பில்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.
நேர்மையாக இருப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து 'மரவெட்டியின் கதை' போன்ற நீதிக்கதைகளை கூறி பிள்ளைகளை மகிழ்வூட்டலாம்.
பொறுப்புணர்ச்சி அதிகரிக்க
வெளியிடங்களுக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவதானால் யாரிடமும் விட்டு விட்டு போகாதீர்கள். எங்கு போனாலும் கூட்டிக்கொண்டு போனால்தான் அவர்களுக்கும் எங்கு எப்படி நடந்து கொள்வது என்பது தெரியும்.
கோவிலுக்கு அழைத்துச் சென்றால் அங்கு விளையாடக்கூடாது என்று கூறி அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் அங்கு அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். கண்ணை மூடி இறைவனை வழிபட்டால்மட்டுமே கோவிலின் அமைதி பாதுகாக்கப்படும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.
ஹோட்டலில் சில குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். எதையாவது தட்டி உடைத்து விடுவார்கள். அதுமாதிரியான இடங்களுக்குச் சென்றால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுங்களேன். அதேபோல் அடுத்தவர்கள் வீட்டிற்குப் போகும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் பழக்கப் படுத்த வேண்டும்.
சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு பர்ச்சேஸ் செய்ய சென்றால் குழந்தைகளுக்கு ட்ராலி தள்ள கற்றுக்கொடுங்கள். அதுவே மிகப்பெரிய பொறுப்பை அவர்களுக்கு கொடுத்தது போல ஆகும். அதேசமயம் பார்க் போன்ற விளையாடும் இடங்களுக்குச் சென்றால் ஒடி ஆடி விளையாட விடுங்கள். அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.



Click it and Unblock the Notifications
