Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
வயதான அப்பாவிற்கு பிறக்கும் குழந்தை ஆட்டிசம் குறைபாடு ஏற்படும்: ஆய்வில் தகவல்

ஆட்டிசம் ஒரு நோய் அல்ல, மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடுதான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பிற்கு ஆளான குழந்தைகள் தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கி கொண்டு அதில் மூழ்கி கிடப்பார்கள். மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. ஸ்பெக்ட்ரல் டிஸ்ஆர்டர் என்று ஆங்கிலத்தில் இந்த நோய் அழைக்கப்படுகிறது.
பரம்பரை கோளாறு
ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துக்களின் குறைபாடு, சென்ரடின் என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் ஆட்டிசம் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குறைந்த எடையுடன் அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 5 சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இயல்பான எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 1 சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பை கண்டறியுங்கள்
ஆட்டிசம் குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாது. கைகளை உதறிக் கொண்டே இருக்கும். மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பது போல், இக்குழந்தைகளை கட்டிப் பிடித்தால் கோபம் வரும். சில குழந்தைகள் மூர்க்கமாக நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல், சைகை மூலம் கேட்பார்கள். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்சினை இருக்காது. எதற்காக சிரிக்கிறார்கள். எதற்காக அழுகிறார்கள் என தெரியாது. வலி, சிறிய அளவில் இருந்தாலும் பெரிதாக அலறுவார்கள். சில குழந்தைகள் கடும் வலி இருந்தாலும் வலியை உணர்வதில்லை.
வாழக் கற்றுக்கொடுங்கள்
நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை.
நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும்.
ஆட்டிசம் இருப்பது தெரியவந்தால், அதற்கு உரிய நரம்பியல் மற்றும் மனநல சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications
