Latest Updates
-
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
செல்லங்களுக்கு அதிகமா பிடிக்கும் பழங்கள் எது தெரியுமா!!!

அன்னாசி : குழந்தைகளது உடலுக்கு இது மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அதில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ளது. மேலும் இந்த பழம் குழந்தைகளுக்கு செரிமானத்தை அதிகப்படுத்துதோடு, தொண்டைகளில் பிரச்சனை மற்றும் ஜலதோஷம் போன்றவற்றை சரிசெய்யும். குழந்தைக்கு ஒரு வேளை ஜலதோஷம் பிடித்திருந்தால், அப்போது அவர்களுக்கு ஒரு டம்ளர் அன்னாசிப்பழ ஜூஸ் அல்லது ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை மறக்காமல் கொடுங்கள். மேலும் இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, ஆகவே அதனை அதிகமாக கொடுத்தால் குழந்தைகளின் உடலில் தண்ணீர் குறைபாடு இல்லாமல் இருக்கும்.
மாம்பழம் : மாம்பழம் என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்காது. அந்த மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் கொடுத்தால் போதுமானது. மேலும் வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைக் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். ஆகவே இந்த பழத்தை குழந்தைகளுக்கு பசிக்கும் போதெல்லாம் கொடுக்கலாம். சொல்லப்போனால் இது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த தின்பண்டம்.
மாதுளை : வைட்டமின், சோடியம், கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள மாதுளையை குழந்தைகள் சாப்பிட்டால் அவர்கள் நன்கு ஆரோக்கியத்துடன், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு அதிகரித்து, அவர்களை எந்த ஒரு நோயும் எளிதில் தாக்காமல் இருக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் எந்த ஒரு கடுமையான நோயையும் எதிர்த்து, தடுத்து நிற்கும் ஆற்றலுடையது. இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளது மூளையை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்.
bகுழந்தைகளது இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் கிவி பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி, கனிமச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. வேண்டுமென்றால் கிவி பழத்தில் குழந்தைகளுக்கு ஜூஸ் செய்து கொடுக்கலாம். அவ்வாறு ஜூஸ் போடும் போது, அந்த பழத்தின் தோலை சீவி பின்னர் போட வேண்டும். இல்லையென்றால் கசப்பான சுவை ஏற்படும், பின் குழந்தைகள் அதனை வெறுத்துவிடுவர்.
ஆரஞ்சு : குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தினாலான ஜூஸை கொடுத்தால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு தொற்றுநோயும் தாக்காமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இதனை குழந்தைகள் குடிப்பதால், அவர்கள் பதட்டத்தை குறைத்துவிடும். மேலும் இந்த பழத்தால் ஆன ஜூஸை குழந்தைகள் தேர்வு எழுதும் முன் கொடுத்தால், அவர்கள் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் எழுதிவிட்டு வருவர்.
எனவே மேற்கூறிய பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று குழந்தை நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.



Click it and Unblock the Notifications
