பெண்ணுறுப்பில் இருந்து ஏன் கற்றாழை கவுச்சி வீசுகிறது? ஒரே இரவில் அதை எப்படி சரிசெய்யலாம்?

ஒரே இரவில் பெண்ணுறுப்பில் வெளிப்படுகின்ற துர்நாற்றத்தை வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படி விரட்டலாம் என்பது பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய மிக விரிவான தொகுப்பு தான் இது.

பல பெண்களும் தங்கள் உடல் சார்ந்து சந்திக்கும் பிரச்சனைகள் பல. அவற்றுள் ஒன்று பிறப்புறுப்பில் துர்நாற்றம். இந்த துர்நாற்றம் ஏற்படப் பல காரணங்கள் உண்டு. பால்வினை நோய், ஹார்மோன் மாற்றம், மோசமான சுகாதாரம், பூஞ்சைத் தொற்று, கிருமி வளர்ச்சி ஆகியவை பிறப்புறுப்பில் துர்நாற்றம் உண்டாக சில காரணங்கள் ஆகும். பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் சுரப்பு ஏற்படுவதால் துர்நாற்றம் தவிக்கமுடியாத ஒன்றாக உள்ளது.

Vaginal Odor Overnight

ஆனால் அதுவே மிகக் கடுமையான துர்நாற்றம், விரும்பத்தகாத மணம், பல நிறத்தில் சுரப்பு ஆகியவை ஏற்பட்டால் அதனை உடனடியாக கவனிக்க எண்டும். பொதுவாக பெண்களுக்கு பிறப்புறுப்பில் அடிக்கடி துர்நாற்றம் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்புறுப்பு

பிறப்புறுப்பு

பிறப்புறுப்பு துர்நாற்றத்துடன் வேறு சில அறிகுறிகள் சில நேரம் இணைந்து காணப்படும். அவை, பிறப்புறுப்பு சுரப்பு, பிறப்புறுப்பு எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஆகும் . பிறப்புறுப்பில் சுரப்பு ஏற்படுவது தடுக்க முடியாத ஒரு செயல்பாடாக இருந்தாலும் பிறப்புறுப்பு துர்நாற்றம் வீசாத படி பார்த்துக் கொள்ள முடியும். பொதுவாக பிறப்புறுப்பில் விரும்பத்தகாத மணம் ஏற்படும்போது இதர அறிகுறிகளும் சேர்ந்தே எழும். ஒருவேளை மற்ற அறிகுறிகள் தோன்றாமல் இருந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

அறிகுறிகள்.

அறிகுறிகள்.

பிறப்புறுப்பில் சுரப்பு ஏற்படுவது பெண்களுக்கு பொதுவான நிகழ்வு ஆகும். ஆனால் இதில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான அடையாளங்கள் பின்வருமாறு..

. 1. அதிகரித்த வெள்ளைப்படுதல்

. 2. நிறமுள்ள அல்லது நிறமற்ற சுரப்புடன் ஒருவித துர்நாற்றம்

. 3. நிறமுள்ள அல்லது நிறமற்ற சுரப்புடன் உலோக வாசனை

. 4. திடமான வெள்ளை நிற சுரப்பு

. 5. பிறப்புறுப்பில் துர்நாற்றம்

. 6. மஞ்சள் அல்லது பச்சை சுரப்பு

. 7. பிறப்புறுப்பு பகுதியில் வலி அல்லது அரிப்பு

. 8. அடிவயிற்றுப் பகுதியில் வலி

. 9 உறவின்போது வலி

காரணங்கள் என்ன ?

காரணங்கள் என்ன ?

பல்வேறு காரணங்களின் விளைவாக பிறப்புறுப்பில் துர்நாற்றத்தை உணர முடியும். அவற்றுள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு வருகிற துர்நாற்றத்திற்கான காரணத்தை நீங்கள் உணர்ந்து கொண்டாலே மிக எளிதாக அந்த துர்நாற்றத்தைப் போக்கி நறுமணம் வீசச் செய்ய முடியும்.

கிருமி தொற்று

கிருமி தொற்று

பிறப்புறுப்பில் தொற்று ஏற்படப் பொதுவான காரணம் கிருமி தொற்று. இந்த கிருமித் தொற்று பிறப்புறுப்பு துர்நாற்றத்திற்கு வழி வகுக்கலாம். தற்போது கருவுறும் நிலையில் இருக்கும் பெண்களில் 30% பேர் இந்த கிருமிகளால் உண்டாகும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

ஹார்மோன் மாற்றங்கள்

ஹார்மோன் மாற்றங்கள்

பிறப்புறுப்பில் துர்நாற்றம் ஏற்பட மற்றொரு காரணம் ஹார்மோன் மாற்றங்கள். உங்கள் மாதவிடாய் சுழற்சிக்கும் பிறப்புறுப்பு துர்நாற்றதிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

வியர்வை

வியர்வை

வியர்வை காரணமாகவும் பிறப்புறுப்பில் விரும்பத்தகாத மணம் வீசலாம் . முடிந்த வரை பிறப்புறுப்பு பகுதிகளை ஈரமில்லாமல் வைத்துக் கொள்வது நல்லது. உடல் சுகாதாரத்தை மோசமாகப் பேணுவதாலும் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசலாம். ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு முறை பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம்.

மாதவிடாய்க் கால விழிப்புணர்வு

மாதவிடாய்க் கால விழிப்புணர்வு

மறதியின் காரணமாக தொடர்ந்து வைத்திருக்கும் டம்பூன் கூட, மோசமான சுகாதாரத்தின் கீழ் வரலாம். இது குறித்த விழிப்புணர்வும், சுகாதாரமும் மிகவும் அவசியம். இதனால் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் துர்நாற்றத்தைத் தடுக்க முடியும்.

தொற்று பாதிப்பு

தொற்று பாதிப்பு

பால்வினை நோய்களான ட்ரைகொமொனோசிஸ், மேகவெட்டை நோய், கிளமீடியா போன்றவற்றால் பரவக்கூடிய தொற்றுகளின் காரணமாக பிறப்புறுப்பில் துர்நாற்றம் உண்டாகலாம். இதனால் க்ரே, மஞ்சள், பச்சை நிற சுரப்பு வெளியாகி துர்நாற்றம் உண்டாகும்.

இறுக்கமான ஆடைகள்

இறுக்கமான ஆடைகள்

இறுக்கமான ஆடைகள் அணிவதால் உங்கள் பிறப்புறுப்பு சுவாசிக்க முடியாத சூழல் உண்டாகும். இதனால் வியர்வை சேமிக்கப்பட்டு பிறப்புறுப்பில் துர்நாற்றம் உண்டாகும்.

காரமான மசாலாப் பொருட்கள்

காரமான மசாலாப் பொருட்கள்

காரமான மசாலாப் பொருட்களை அதிகம் உட்கொள்வதால் பிறப்புறுப்பு சுரப்பு அதிகமாகும் . இதன் காரணமாக ஒருவித துர்நாற்றம் வீசலாம். இவற்றை நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்ஆட நாமே எப்படி துர்நாற்றத்தை விரட்டியடிக்க முடியும்.

யோகர்ட்

யோகர்ட்

தினமும் யோகர்ட் உட்கொள்வதால் பிறப்புறுப்பு துர்நாற்றத்தைப் போக்க முடியும். யோகர்ட்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பிறப்புறுப்பில் மேற்புறமாக இதனைத் தடவலாம். இரண்டு விதமாக யோகர்ட்டை பிறப்புறுப்பில் தடவலாம்.

யோகர்ட் குளியல்

யோகர்ட் குளியல்

இது ஒரு எளிய தீர்வாகும். நீங்கள் குளிக்கத் தயாராகும்போது, தண்ணீரில் சிறிதளவு யோகர்ட் சேர்த்துக் கொண்டு வழக்கம் போல் குளியுங்கள். குளிக்கும் நேரத்தில் உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் அதிக கவனம் செலுத்தி தண்ணீர் கொண்டு சீராக சுத்தம் செய்யுங்கள்.

மேலே தடவுவது

மேலே தடவுவது

ஒரு டாம்பூன் மற்றும் ஒரு கப் யோகர்ட் எடுத்துக் கொள்ளவும். டம்பூனை யோகர்ட்டில் முக்கி எடுத்து உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் வைத்துக் கொள்ளவும். தொடர்ந்து 3-4 மணி நேரம் அப்படியே வைத்துக் கொள்ளவும். பிறகு டாம்பூனை வெளியில் அகற்றி, வெதுவெதுப்பான நீரில் பிறப்புறுப்பைக் கழுவுங்கள். ஒரே நாளில் பிறப்புறுப்பு துர்நாற்றத்தைப் போக்க இது ஒரு சிறந்த தீர்வாகும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பிறப்புறுப்பின் pH அளவை மீட்டு வழக்கமான நிலையில் வைக்க இந்த பேக்கிங் சோடா உதவுகிறது. pH அளவு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதால் பிறப்புறுப்பில் உண்டாகும் துர்நாற்றம் இயற்கையாகக் குறையும். பிறப்புறுப்பு துர்நாற்றத்திற்கு காரணமாக இருக்கும் பூஞ்சை தொற்று பாதிப்புடன் போராட பேக்கிங் சோடா உதவுகிறது. குளிக்கும் நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து வழக்கமான முறையில் குளிக்கவும். சானிடரி வைப் மூலம் உடல் முழுவதையும் நன்றாகத் தேய்த்து குளிக்கவும். குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் நன்றாகத் தேய்க்கவும். இதனைப் பின்பற்றுவதால் பிறப்புறுப்பு துர்நாற்றத்தில் ஒரு மாறுபாடு நிச்சயம் தோன்றும்.

வேப்பிலை

வேப்பிலை

உடலின் எந்த ஒரு துர்நாற்றத்தையும் போக்க உதவும் பண்பு வேப்பிலையில் உண்டு. பிறப்புறுப்பு துர்நாற்றத்தையும் வேப்பிலை போக்கும். இந்தியன் லிலக் என்றும் அழைக்கப்படும் வேப்பிலை, பக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு ஆகிய பண்புகள் கொண்டது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், வேப்பிலை சிறிதளவு எடுத்து நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு அந்த நீரை எடுத்து வடிகட்டி ஆற விடவும். ஆறிய நீரை எடுத்து பிறப்புறுப்பு பகுதிகளில் ஊற்றி நன்றாகக் கழுவவும். வேப்பிலை கொதிக்க வைத்த நீரைக் கொண்டு குளிப்பதால் கூட நல்ல பலன் கிடைக்கும்.

வினிகர்

வினிகர்

சந்தையில் கிடைக்கும் பிறப்புறுப்பு க்ளென்சர் அல்லது பெண்களுக்கான துர்நாற்றம் களையும் பொருட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது. இவற்றைப் பயன்படுத்துவதால் நிலைமை மோசமைடைந்து, இயற்கை பாக்டீரியாக்கள் இறக்க நேர்ந்து பூஞ்சை தொற்று பாதிக்கும் நிலை உண்டாகலாம். அதனால் இயற்கை மூலப்பொருட்கள் கொண்டு சொந்தமாக பிறப்புறுப்பு க்ளென்சர் தயாரித்து பயன்படுத்தலாம். இது மிகவும் எளிது. நீங்கள் குளிக்கும் நீரில் 250மிலி ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கவும். இந்த நீரில் 15-20 நிமிடங்கள் குளிக்கவும். பிறப்புறுப்பில் நச்சுகள் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களை அழித்து துர்நாற்றத்தைப் போக்க வினிகர் உதவுகிறது.

வினிகர் பயன்படுத்தும் மற்றொரு வழி, 11/2 கப் வினிகர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும். இந்த நீரைக் கொண்டு குளிக்கவும். துர்நாற்றம் விளைவிக்கும் புரதங்களை உடைக்க வினிகர் உதவுகிறது. ஒரு வாரத்தில் பலமுறை இதனைப் பின்பற்றலாம். டாம்பூனையும் இதற்கு பயன்படுத்தலாம். நீர் சேர்க்கப்பட்ட ஆப்பிள் சிடர் வினிகரில் டாம்பூனை ஊற வைத்து பிறப்புறுப்பில் வைத்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக இதனை வைத்துக் கொள்ள வேண்டாம். பிறகு வெதுவெதுப்பான நீரில் அந்தப் பகுதியைக் கழுவவும்.

பூண்டு

பூண்டு

பூண்டு ஒரு சிறந்த அன்டி பயோடிக் ஆகும். அதிக நேரம் ஓய்வாக இருக்கும் போது இந்த முயற்சியைப் பின்பற்றலாம். பிறப்புறுப்பு பகுதியில் ஒரு பூண்டு பல்லை ஒரு வைத்துக் கொள்ளவும். பிறப்புறுப்பின் உட்பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டாம். இதனால் காயம் உண்டாகலாம். ஒரு மணி நேரம் கழித்து பூண்டை அகற்றி விட்டு குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இதனைப் பின்பற்றுவதால் துர்நாற்றம் உடனடியாக மறையும். ஒரு வாரத்தில் சில முறை இதனைப் பின்பற்றவும்.

வெற்றிலை

வெற்றிலை

வெற்றிலை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பண்பு ஆகியவைகளைக் கொண்டது. இந்த தன்மைக் காரணமாக பிறப்புறுப்பு துர்நாற்றத்தைப் போக்க இது பெரிய அளவில் உதவுகிறது. மேலும் பிறப்புறுப்பு எரிச்சலைப் போக்கவும் வெற்றிலை உதவுகிறது. வெற்றிலையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெற்றிலையை நீரில் போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் ஓரளவிற்கு ஆறியவுடன் டாம்பூனை அந்த நீரில் முக்கிய எடுக்கவும். பிறகு பிறப்புறுப்பு பகுதியில் அந்த டாம்பூனை வைத்துக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து அதனை வெளியில் எடுக்கவும். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் இதனைப் பின்பற்றலாம். வெற்றிலை கொதிக்க வைத்த நீரை வடிகட்டி, பிறப்புறுப்பு பகுதியைக் கழுவலாம்.

படிகாரம்

படிகாரம்

அலுமினியம் பொட்டாசியம் சல்பேட்டின் பொதுவான பெயரான படிகாரம், கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டது. தொற்றைப் போக்குவதற்காகத் தண்ணீர் தொட்டிகளில், ஊறுகாய் பதப்படுத்துவதில் , ஷேவ் செய்த பின் பயன்படுத்தும் கிரீம்களில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பிறப்புறுப்பில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் படிகாரம் சிறந்த தீர்வைத் தருகிறது. அதிகரித்த வெள்ளைப் படுதல் காரணமாக உண்டாகும் பிறப்புறுப்பு துர்நாற்றத்தைப் போக்க குறிப்பாக இதனைப் பயன்படுத்தலாம். தண்ணீரில் படிகாரக் குச்சியை முக்கி எடுத்து பிறப்புறுப்பு வாய் பகுதியில் மென்மையாக தடவலாம். தினமும் இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம். 1/4 ஸ்பூன் படிகாரத் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்பட்ட கலவைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவலாம். அதிகரித்த வெள்ளைப் படுதலைத் தவிர்க்க, 1/2 ஸ்பூன் படிகாரத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து தினமும் இரண்டு வேளைப் பருகலாம்.

மஞ்சள்

மஞ்சள்

வேப்பிலைக்கு பிறகு பல நன்மைகளைக் கொண்டது மஞ்சள். இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் அன்டி ஆக்சிடென்ட் பண்புகள் காரணமாக இவை தொற்றை நீக்குவதில் சிறந்த பலனைத் தருகிறது. ஒரு இன்ச் நீளம் கொண்ட மஞ்சளை நன்றாகக் கழுவி ஒரு லிட்டர் தண்ணீரில், கொதிக்க விடவும். ஒரு லிட்டர் நீர் பாதியாகும் வரை கொதிக்க விடவும். இந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பு பகுதியை நன்றாகச் சுத்தம் செய்யவும். நீண்ட நாட்களாக பிறப்புறுப்பு துர்நாற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள், தினமும் ஒரு துண்டு மஞ்சளை காலையில் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது ஒரு கிளாஸ் பாலுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பருகலாம்.

போரிக் அமிலம்

போரிக் அமிலம்

மாதவிடாய் உதிரம் மற்றும் விந்து ஆகிய இரண்டும் பிறப்புறுப்பின் pH அளவை அதிகரித்து, பக்டீரியா வளர்ச்சிக்கு உதவலாம். போரிக் அமிலம் போன்ற ஒரு மென்மையான அன்டி செப்டிக் இவற்றைக் குறைத்து நல்ல பக்டீரியா அளவை நிர்வகிக்கும். இதனைப் பயன்படுத்த சிறிது சாமர்த்தியம் வேண்டும், குறிப்பாக, மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே இதனைப் பயன்படுத்த வேண்டும். "00" அளவு ஜெலட்டின் மாத்திரையில் போரிக் அமிலத்தை நிரப்பி, காற்று புகாத கண்டயினரில் குளிர்ந்த அதே நேரம் காய்ந்திருக்கும் இடத்தில் சேமித்து வைக்கவும். இரவு உறங்கச் செவதற்கு முன், அதில் ஒரு மாத்திரையை எடுத்து உங்கள் பிறப்புறுப்பில் வைத்துக் கொள்ளவும். பிறப்புறுப்பு அழற்சி உள்ளவர்கள் இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். இருப்பினும், கர்ப்பிணிகள் இந்த முறையைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

பிறப்புறுப்பு துர்நாற்றத்தைப் போக்க உதவும் சில வழிமுறைகளை நாம் இங்கே பார்த்திருக்கிறோம். பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கு பால்வினை நோய் போன்ற தீவிர காரணிகளும் உண்டு. மஞ்சள் அல்லது பச்சை சுரப்பு இருந்தாலும் கவனம் அதிகம் தேவை. மேலே கூறிய குறிப்புகளைப் பின்பற்றிய பின்னும் அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.

மருத்துவரின் அனுமதியில்லாமல் எந்த ஒரு தீர்வையும் முயற்சிப்பது நன்மை ஆகாது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி, போதுமான அளவு வைட்டமின் சி நிறைந்த பழங்கள், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது, சுத்தமான ஆடைகளை அணிவது, சரியான அளவு உள்ளாடைகள் அணிவது, பருத்தி உள்ளாடைகள் அணிவது , பாதுகாப்பான முறையில் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவது ஆகியவற்றை மேற்கொள்வதால் இந்த பிரச்சனைகளைக் கூடுமான வரையில் தவிர்க்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, March 21, 2019, 12:12 [IST]
Desktop Bottom Promotion