Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
பிரசவத்துக்கு பிறகு உங்க இடுப்பு டயர் மாதிரி ஆயிடுச்சா?... இந்த வொர்க்அவுட் ட்ரை பண்ணுங்க...
நீங்கள் பிரசவத்திற்கு பிறகு பழைய நிலைக்கு வர நினைக்கும் போது நிறைய உடற்பயிற்சிகள், டயட் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அந்த சிரமம் இல்லாமல் எளிதாக உங்கள் உடலை கச்சிதமாக ,fiமாற்ற நாங்கள்
கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் மிகவும் கஷ்டமான தருணமாகும். இந்த மாதிரியான சமயங்களில் ஒரு பெண் நிறைய உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் அவளின் உடல் நிலையும் நிறைய மாற்றங்களுக்கு உட்படும். கர்ப்ப கால வயிறு, மார்பகம் பெரிதாகுதல் போன்ற மாற்றங்கள் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும். எனவே நீங்கள் பிரசவத்திற்கு பிறகு பழைய நிலைக்கு வர நினைக்கும் போது நிறைய உடற்பயிற்சிகள், டயட் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அந்த சிரமம் இல்லாமல் எளிதாக உங்கள் உடலை கச்சிதமாக மாற்ற நாங்கள் சில ஐடியாக்களை இங்கே கூற உள்ளோம்.

மூச்சு விடும் பயிற்சி
பிரசவத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தான் உங்கள் உடல் பழைய நிலையை அடையும். எனவே நீங்கள் ஆழமான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் உங்கள் தசைகள் வலுவடைந்து சருமம் பழைய நிலைக்கு திரும்பி வரும்.

நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி உங்கள் உடம்பை கச்சிதமாக வைக்க உதவுகிறது. இது உங்களுக்கு ஒரு எளிமையான முறையாகும். உங்கள் தினசரி வேலைகளுக்கு இடையில் நடைபயிற்சி மேற்கொள்ள மறக்காதீர்கள். கண்டிப்பாக இது உங்கள் பிரசவ காலத்தில் இருந்து உங்கள் உடலை பழைய நிலைக்கு கொண்டு வர உதவும்.

காபி மற்றும் ஸ்நாக்ஸ்
நீங்கள் இந்த மாதிரியான சமயங்களில் உங்கள் குழந்தைகளுடன் நல்ல நட்பு வட்டாரத்துடன் சேர்ந்து காபி, பிஸ்கட் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்துக் கொள்வீர்கள். எனவே இந்த மாதிரியான விஷயங்களை அறவே தவிருங்கள். இதுவும் உங்கள் உடலை பழைய நிலைக்கு கொண்டு வர விடாமல் தடுக்கும்.

இடை பயிற்சி
உங்களுக்கு சுகப்பிரசவமாக இருந்தால் குழந்தை பிறந்த ஒரு வாரத்திலேயே நீங்கள் எழுந்து நடக்க ஆரம்பித்து விடலாம். உங்களுக்கு அறுவை சிகிச்சை என்றால் 8-10 வாரங்களாவது ஆகும்.
உங்கள் முழங்கால்களை மடக்கி புட்டத்தை கொண்டு படுத்து கொள்ளுங்கள். இடுப்பு பகுதிக்கு அடியில் ஒரு தலையணையை வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது பாதங்களை நேராக வைத்து கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விடவும். பிறகு அப்படியே மெதுவாக இடுப்பு பகுதியை மேலே தூக்கி 5 நிமிடங்கள் நின்று பிறகு பழைய நிலைக்கு வரவும் . இதை 10 முறை செய்யவும்.

அடிவயிற்று பயிற்சி
பின்பகுதியை கொண்டு படுத்துக் கொள்ளுங்கள். பாதங்கள் கீழே இருக்கவும். முழங்கால்கள் மேல்புறமாகவும் மற்றும் முழங்கைகள் மார்பக பகுதிக்கு அருகில் இருக்கிற மாதிரி மடக்கி வைக்கவும். கைகள் உங்கள் தலையின் பக்கவாட்டில் பிடித்திருக்க வேண்டும். இப்பொழுது உங்கள் தோள்பட்டையை உயர்த்தி முழங்காலை நோக்கி நகர்த்த வேண்டும். இப்பொழுது மூச்சை உள்ளே இழுக்கவும் . பழைய நிலைக்கு திரும்பவும். தலையை தரையில் வைத்து பிறகு மறுபடியும் இதே உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

டவல் பல்ஸ்
பின்புறத்தை கொண்டு படுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு துண்டை உங்கள் முழங்காலுக்கு கீழ் வைத்து ஒவ்வொரு முனையையும் ஒவ்வொரு கையில் பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது துண்டின் முனையை தொடையை நோக்கி இழுக்கவும். இப்பொழுது உங்கள் இடுப்பு பகுதி மற்றும் தோள்பட்டையை தரைக்கு சற்று மேலே உயர்த்தவும். அப்படியே மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். இது 10-12 முறை செய்யவும். இதை வாரத்திற்கு 1-4 தடவை செய்யவும்.

ஒட்டுமொத்த உடற்பயிற்சி
உங்கள் தசைகள் மற்றும் தண்டுவடத்தை வலுவாக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். லேசான க்வாட்ஸ் மற்றும் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபடலாம்.

ஏரோபிக்
ஏரோபிக் டான்ஸ் போன்றவை உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை எரித்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே உங்கள் குழந்தை ஓரளவிற்கு வளர்ந்து விட்டால் உங்களுக்கு கண்டிப்பாக சிறிது ஓய்வு நேரம் கிடைக்கும். இந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
என்னங்க இனி பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட உடல் எடையை நினைத்து கவைப்படாதிங்க. இதெல்லாம் ப்லோ பண்ணுங்க. கண்டிப்பாக மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பலாம்.



Click it and Unblock the Notifications