Latest Updates
-
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்.. -
ஜூன் 29-ல் நிகழும் புதனின் வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் துரத்தப்போகுதாம் -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. -
ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் கூட இந்த சுவை கிடைக்காது -
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா
குழந்தைகளின் தடுப்பூசி வலியைக் குறைக்க உதவும் சில அற்புதமான டிப்ஸ்!
Vaccination In Babies In Tamil: குழந்தை பெற்று புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது குழந்தைக்கு தடுப்பூசி போடுவது தான். குழந்தை சாதாரணமாக அழுவதையே பெற்றோரால் தாங்க முடியாது. எப்படி இருந்தாலும், குழந்தைக்கு ஒரு வயதான பிறகு அடுத்தடுத்து தடுப்பூசிகளை போட வேண்டும்.
தடுப்பூசி என்பது ஒரு குழந்தைக்கு மிக முக்கியமானது. பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து குழந்தையை காப்பாற்ற வேண்டுமெனில், கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசிக்குப் பிறகு வலி மற்றும் வீக்கம் ஏற்படுவது மிகவும் இயல்பானது. ஆனால், பிஞ்சு குழந்தைகளுக்கு இந்த வலி மிகவும் கொடுமையானது தான். சிறு வலி கூட அவர்களுக்கு மிக பெரிதாக தான் தெரியும். இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள்.

குழந்தை அழுவதைக் கண்டு பெற்றோர் அனைவரும் கவலைப்படத் தொடங்கிவிடுவர். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளுக்கு இந்த வலியிலிருந்து விடுபட உதவக்கூடிய சில எளிய குறிப்புகளை இன்று உங்களுக்குச் சொல்லப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட போகிறீர்கள் அல்லது சமீபத்தில் போட்டிருக்கிறீர்கள் என்றால், அதன் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மசாஜ்
தடுப்பூசியின் வலியைப் போக்க, உங்கள் குழந்தையின் சருமத்தில் மசாஜ் செய்ய வேண்டும். வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க நீங்கள் ஊசி போட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதியை மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் மிகவும் கடினமாக தேய்த்து விட கூடாது மற்றும் ஊசி போட்ட இடத்தை தொடவும் கூடாது. ஊசி போட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதியை கையால் லேசாக மசாஜ் செய்யவும். நீண்ட நேரம் மசாஜ் செய்ய வேண்டியதில்லை. 10 விநாடிகள் செய்தால் போதுமானது. இதுவே வலியிலிருந்து நிவாரணம் தரும்.
தாய் பால் கொடுப்பது
குழந்தைக்கு ஊசி போட்ட வலியை மறக்க செய்யும் ஆக சிறந்த வழி தான் பால் கொடுப்பது. தாய் பாலை குழந்தைக்கு ஊட்டுவது, தடுப்பூசிக்குப் பிறகு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இப்படி செய்வதால் அவர்களின் கவனமும் திசை திருப்பும். இருப்பினும், ஊசி போட்ட பிறகு சிறிது நேரம் உணவளிக்கவோ, குடிக்க கொடுக்கவோ கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவர் கூறுவதை பின்பற்றி, குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு பிறகு குழந்தைக்கு பால் கொடுக்கலாம்.
இனிப்பு கொடுக்கலாம்
உங்கள் குழந்தை மிகவும் சிறியவராக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை கரைசலை கொடுக்கலாம். இல்லையெனில், பாசிஃபையரில் இனிப்பு கரைசலை போட்டு உறிஞ்ச கொடுக்கலாம். இதனால் உங்கள் குழந்தை மிகவும் நன்றாக உணரும். குழந்தைக்கு இனிப்பு ஊட்டுவதால் வலி குறையும் என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. உங்கள் குழந்தை வலி அல்லது வீக்கத்தால் அவதிப்பட்டால், அவர்கள் மிகவும் எரிச்சலாக உணரலாம். இதனால் அடிக்கடி அழுது கொண்டே இருப்பார்கள். இதனைத் தவிர்க்க வேண்டுமெனில், நீங்கள் அவர்களை முடிந்தவரை தூங்க வைக்க வேண்டும்.
குழந்தைக்கு திரவம் நிறைய கொடுங்கள்
உங்கள் குழந்தைக்கு அதிக திரவம் கொடுங்கள். இதுபோன்ற நேரங்களில், நீங்கள் குழந்தைக்கு திட உணவை விட திரவ கொடுப்பதே சிறந்தது. நீங்கள் உங்கள் குழந்தைக்கு பழச்சாறு அல்லது பழங்களை ஊட்டவும். குழந்தைக்கு சூப்கள், ப்யூரிகள் மற்றும் பிற திரவங்களை கூட கொடுக்கலாம். குழந்தைக்கு வலி மிகவும் அதிகமாக இருந்தால், நீங்கள் உடனே மருத்துவரை அணுகி, வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை மருந்துகளின் மூலம் அகற்றலாம். ஆனால், எந்த மருந்தையும் நீங்களாக கொடுக்கக்கூடாது. அது குழந்தையின் பிரச்சனையை அதிகரிக்கும். .
ஐஸ் ஒத்தடம்
குழந்தையை வீக்கம் மற்றும் வலியிலிருந்து விடுவிக்க நீங்கள் ஐஸ் பயன்படுத்த வேண்டும். வீக்கம் மற்றும் வலி இரண்டிலும் இருந்து விடுவிட ஐஸ் பெரிதும் உதவும். குழந்தை அதிக வலியை உணர்ந்தால், குழந்தையின் ஊசி போட்ட இடத்தைச் சுற்றிலும் ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். ஊசி போட்ட இடத்தின் மீமு எக்காரணம் கொண்டும் ஒத்தடம் கொடுக்கக்கூடாது. ஐஸ் ஒத்தடம் கொடுக்க, ஐஸை ஒரு சுத்தமான துணியில் வைத்து பயன்படுத்தவும். சருமத்தில் நேரடியாக ஐஸைப் பயன்படுத்த வேண்டாம். அது குழந்தைக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தலாம் அல்லது வலியை அதிகரிக்கலாம்.
மருந்துகள்
தடுப்பூசி போட்டவுடன் மருத்துவர்களே காய்ச்சல் மருந்தை வழங்குவதுண்டு. அவற்றை கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால், மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவது வலியை உடனே குறைத்திடும். எந்த மருந்தாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே குழந்தைக்கு கொடுக்கவும்.



Click it and Unblock the Notifications

