Latest Updates
-
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது? -
இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது! -
வாஸ்து படி குபேரரின் அருளை பெற்று கோடீஸ்வரராக உங்க வீட்டில் இந்த எளிய மாற்றங்களை செய்யுங்க போதும்
குழந்தைகளுக்கு 1 வயதுக்கு முன்னாடி கொடுக்க வேண்டிய உணவுகள் என்ன? விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் திவ்யா
குழந்தைகளின் உணவு முறையோடு ஒப்பிடும்போது பெரியவர்களின் உணவுமுறை முற்றிலும் வித்தியாசமானது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவையே சுவையானதாக கொடுக்கும் போது அவர்களின் வளர்ச்சியானது இரட்டிப்பு வேகத்தில் இருக்கும். ஆய்வுகளின் படி குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன்பே பழங்கள், காய்கறிகள் மற்றும் பல உணவு பொருட்களை கொடுப்பது நல்லது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வேர்க்கடலை, முட்டை, கடல் மீன் மற்றும் சோயா போன்றவை குழந்தைகளுக்கு ஒவ்வாமையை உருவாக்கலாம். அவை ஏற்கனவே ஒவ்வாததாக இருப்பினும், முதல் வருடம் வரை இந்த உணவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது இந்த ஒவ்வாமைக்கு எதிராக சிறிய எதிர்ப்பை உருவாக்க உதவுகிறது.

ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை முதல் முறை கொடுக்கும்போதே ஒவ்வாமை இருந்தால் அதை தொடர்ந்து கொடுக்காதீர்கள். குழந்தைகளுக்கு 1 வயதுக்கு முன் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முட்டை
முட்டையில் உயர் தரமான புரதம், உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புகள், கண்களுக்கு தேவையான கோலைன், இரும்பு மற்றும் ஃபோலேட், வைட்டமின் A, D, E போன்றவை நிறைந்துள்ளது. அவை எளிதில் ஜீரணமாக கூடியவை மற்றும் எளிய வழிகளில் சமைக்கக் கூடியவை. உங்கள் குழந்தையின் உணவில் கூடுதல் புரோட்டின்களை சேர்ப்பது நன்மைகளை தரக் கூடியதாகவும், உங்கள் குழந்தைக்கு எதிர் காலத்தில் ஒவ்வாமை ஏற்படுவதிலிருந்து தடுக்கவும் உதவுகிறது.
மீன்
மீன் மற்றும் மீன் எண்ணெய்கள், உங்கள் குழந்தையின் தோல் மற்றும் மன வளர்ச்சிக்கு அவசியமானது. அதிலும் குறிப்பாக டூனா, மத்தி மற்றும் சால்மன் போன்ற மீன் நல்ல பலன் தரக்கூடியவையாக இருக்கும். குழந்தையின் விழித்திரை மற்றும் புலனுணர்வு வளர்ச்சிக்கு தேவைப்படும் அனைத்து முக்கிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் DHA வை கொண்டிருக்கின்றன. நீராவியில் வேகவைத்த மீன்களை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
கீரைகள்
பச்சை இலை காய்கறிகள் உங்கள் குழந்தையின் இரத்தத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக கீரைகள் நல்ல பலன் தரக்கூடியவை. இவை மிகவும் ஆரோக்கியமான உணவுகள், இவற்றை உங்கள் குழந்தைகள் மறுத்தாலும் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து அவர்கள் விரும்பும் வகையில் சமைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
பெர்ரி
பெர்ரி பல வண்ணங்களில் இருப்பதால், அவை குழந்தைகளை எளிதில் கவரும். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், அவற்றில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி போன்ற நிறைந்திருப்பதோடு, சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாகவும் செயல்படுகின்றன. இது எலும்பு வளர்ச்சி மற்றும் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்க உதவுகிறது. இதை குழந்தைகளுக்கு அப்படியே சாப்பிட கொடுக்கலாம்.
மூலிகைகள் மற்றும் மசாலாப்பொருட்கள்
உங்கள் குழந்தையின் உணவில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை சேர்ப்பது, அவர்களின் வாய் அண்ணத்தை விரிவாக்கவும், அனைத்து உணவுகளையும் துணிந்து சாப்பிட வைக்கவும் உதவும். இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றிளாகும். ஆனால் சேர்க்கும் அளவில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் அண்ணம் உணர்திறன் கொண்டது, எனவே அதை கவனத்தில் கொள்ளுங்கள்.
குறிப்பாக மிளகாய் தூள் போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கும் பொது அதிக கவனம் தேவை. அதேபோல மஞ்சள், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், துளசி மற்றும் மிளகு போன்ற மசாலா பொருட்களை, உங்கள் குழந்தையின் உணவுத் திட்டத்தில் கவனமாக சேர்த்து கொடுக்கலாம்.
தயிர், சீஸ் மற்றும் வெண்ணெய்
உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளது என்பதை நீங்கள் அறிந்தால், உங்கள் குழந்தைக்கு 8-10 மாதத்தில் தயிர், சீஸ், வெண்ணெய் மற்றும் பிற பால் பொருட்களை அறிமுகப்படுத்துவது சிறந்தது. அவை கால்சியம், நல்ல கொழுப்பு மற்றும் புரதத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. அவை உங்கள் குழந்தையின் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும், மேலும் தேவையான கொழுப்புகளையும், கலோரிகளையும் கொடுக்கின்றன.
ஓட்ஸ்
உங்கள் குழந்தை ஏழு மாதங்கள் கடந்துவிட்டால், உங்கள் குழந்தைக்கு ஓட்ஸ் கொடுக்கத் தொடங்குவது நல்லது. ஓட்ஸில் நார்ச்சத்து, இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்திருக்கின்றன. இது உங்கள் குழந்தையின் செரிமான அமைப்பு, குடல் இயக்கம் மற்றும் குழந்தை வளர்ச்சியின் முறையான செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகின்றன.



Click it and Unblock the Notifications
