Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம்
ஆணுறை வாங்கும்போது உங்களுக்குப் பொருந்துகிற சைஸை எப்படி பார்த்து வாங்கணும் தெரியுமா? இப்படித்தான்...
ஆணுறை வாங்குகின்ற பொழுது உங்களுக்கு ஏற்ற சரியான அளவை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது பற்றிய விரிவான தொகுப்பு தான் அது. அதைப் பற்றி மிக விரிவாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கான காண்டம் வாங்கும் போது, அதை எந்த அளவில் வாங்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? இதை உறுதிப்படுத்தி கொள்ள உதவும் சில வழிகள் இதோ. ஏனெனில் சரியான அளவிலான காண்டம் பயன்படுத்தும் போது, அணிய சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும், அதிக கலவி இன்பம் தருவதாகவும் அமைகிறது. நீங்கள் கலவி இன்பம் அனுபவிக்கும் போதே, தேவையில்லாத கர்ப்பம் மற்றும் உடலுறவு மூலம் பரவும் நோய்களை, நீங்கள் பயன்படுத்தும் காண்டம் தடுத்துள்ளது என்பதை உறுதிப்படுத்தி கொள்வது நல்லது.

சரியான அளவில் அமைந்த காண்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க கீழ்க்காணும் காரியங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

சரிபார்ப்பது
காண்டத்தை வாங்கிய உடன் அது உங்களுக்கு சரியான அளவில் பொருந்துகிறதா என்பதை நன்றாக அணிந்து பாருங்கள். அதிக இறுக்கமாகவோ, மிகவும் பெரியதாகவோ, மிகவும் சிறியதாகவோ அல்லது மிகவும் இறுக்கமின்றி இருப்பதாகவோ உணர்ந்தால், உங்களுக்கு சரியாக பொருந்தும் வேறு அளவிலான காண்டத்தை பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு சரியாக பொருந்தாத நிலையில், நீங்கள் கலவியில் ஈடுபடும் போது, தவறி போகவோ அல்லது கிழிந்து விடவோ வாய்ப்புள்ளது.

லூப்ரிகோட்
லுப்பிரிகோட் உள்ள காண்டத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் பெரும்பாலான காண்டங்களில் இந்த வசதி இருப்பது இல்லை. இதன்மூலம் உங்களுக்கும் உங்களுடன் உறவு கொள்பவருக்கும் இதமாக இருக்கும். இதமான தன்மை மட்டுமின்றி, இந்த லுப்பரிகேஷன் மூலம் கிழிந்து விடுவதும் தவிர்க்கப்படுகிறது.

காம்போ பேக்
பல அளவில் அமைந்த பேக் வாங்குவதன் மூலம் உங்களுக்கான சரியான அளவிலான காண்டத்திற்கான தேடலை எளியதாக முடித்து கொள்ள முடியும். இதன்மூலம் ஒவ்வொரு அளவில் அமைந்த காண்டத்தையும் பயன்படுத்தி பார்த்து சரியானதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

சரியாக அணிதல்
காண்டத்தை சரியான முறையில் அணியுங்கள். காண்டம் உள்ள கவரை சரியான முறையில் திறந்து, உறுப்பில் கடைசி வரை அதை மெதுவாக உருட்டி ஏற்றுங்கள். உங்கள் உறுப்பின் கடைசி வரை, அது வரவில்லை என்றால், மற்றொரு அளவில் அமைந்த காண்டத்தை பயன்படுத்தி பாருங்கள். உங்களிடம் உள்ள எல்லா அளவுகளை பரிசோதித்து பார்த்து, உங்களுக்கு சரியான முறையில் பொருந்துவதை தேர்ந்தெடுங்கள்.

பிரபல பிராண்டுகள்
பிரபலமான பிராண்டுகள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பான செக்ஸ் உறவை அளிக்கும் வகையில், பெரும்பாலான பிரபல பிராண்டுகளின் காண்டங்கள் உறவின் போது கிழிந்து போவதில்லை.

கிழியாமல் இருக்க
உங்களுக்கு சரியான வகையில் பொருந்துவதை வாங்கிவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். நீங்கள் தேடும் அளவிலான காண்டம் கிடைத்துவிட்டால், அந்த அளவையே பயன்படுத்துங்கள். இங்கு ஒரு காரியத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரே ஒரு பிராண்டை மட்டுமே நீங்கள் பரிசோதித்து பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு சில பிராண்டுகளை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே, அதிலும் பிரபலமான பிராண்டுகளை சோதித்த பிறகு தான், சரியான ஒன்றில் நீங்கள் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். குறிப்பாக அது சரியான அளவில் இருக்க வேண்டும்.

நோய்த் தடுப்பு முறை
சரியான அளவில் அமைந்த காண்டம் தேர்ந்தெடுப்பதன் மூலம், உடலுறவு மூலம் கடத்தப்படும் நோய்கள் மற்றும் தேவையில்லாத கர்ப்பங்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது. அதை பயன்படுத்துவது குறித்த தெளிவான அறிவு இல்லாமல் இருப்பது நல்லதல்ல. நீங்கள் அதை பயன்படுத்தும் முன், அது சரியான அளவில் அல்லது சரியான வகையைச் சேர்ந்தது என்பதில் உள்ள குழப்பங்கள் நீங்கி, தெளிவு அடைந்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications