Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
விந்து அணுக்களை பெண்ணின் உடலுக்குள் செலுத்தாது, கலவி கொள்வது எப்படி?
கருத்தடை என்பது கர்ப்பத்தை தடுக்க மிக முக்கியமான விஷயம்; இந்த பதிப்பில் விந்து அணுக்களை பெண்ணின் உடலுக்குள் செலுத்தாது, கலவி கொள்வது எப்படி என்பது குறித்து படித்து அறியலாம்.
ஆண்களும் பெண்களும் இனணந்து வாழ்வதற்காக படைக்கப்பட்ட உயிரினங்கள்; இந்த இரண்டு இனமும் இணைவதால் நிகழ்வது தான் கருத்தரிப்பு என்னும் புதிய விஷயமும், குழந்தை என்னும் அழகான விஷயமும். ஆண் மற்றும் பெண் இணைந்து வாழ்ந்து தங்களுக்கு என ஒரு சொந்தத்தை உருவாக்கி கொண்ட பின்பு தான், குழந்தையை விரும்பி பெற்று எடுத்துக் கொண்ட பின்பு தான், வாழ்க்கையின் முழுமையான அர்த்தத்தை உணர்கின்றனர்.

சில சமயங்களில் தம்பதியர் தங்களுக்கு குழந்தை உருவாக வேண்டாம் என்றும் நினைப்பது உண்டு; இந்த பதிப்பில் கருத்தடையை ஏற்படுத்தும் அல்லது ஆணின் விந்து அணுக்கள் பெண்ணின் உடலுக்குள் செல்லாமலே உறவு கொள்ள உதவும் முறை குறித்து படித்து அறியலாம்.

சொந்தம் வேண்டாமா?
தம்பதியர் தங்களுக்கு என ஒரு புது உறவை, தங்களின் வாழ்வின் அர்த்தத்தை உருவாக்கி வாழ நினைப்பது சகஜம் தான். ஆனால் சில சமயங்களில் வாழ்க்கையை வாழ வேண்டும்; பின்பு தான் குழந்தை அது இது என்று பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிலர் மற்றும் போதுமான அளவு குழந்தையை பெற்று எடுத்து கொண்டோம்; இனி குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் சிலரும் கருத்தடை என்னும் விஷயத்தை நாடி செல்வது உண்டு.

கருத்தடை அவசியமா?
எந்த ஓரு வெளிப்புற தூண்டுதலும் இன்றி ஆணும் பெண்ணும் இணைவதால் மட்டுமே ஏற்படுவது தான் குழந்தை பிறப்பு; இவ்வாறு பெரும்பாலான மக்களுக்கு இயற்கையாகவே நடக்கும் கருத்தரிப்பு ஒரு சிலருக்கு தான் அறிவியலின் உதவி சேர்ந்து செயற்கை கலந்து நடக்கிறது. கருத்தரிப்பு இயற்கையாக நிகழும் பொழுது, கருத்தடைக்கு மட்டும் ஏன் அறுவை சிகிச்சை செய்ய விடும்?

இயற்கையாக நிகழும்!
கருத்தடையும் இயற்கையாக நிகழக் கூடிய ஒரு நிகழ்வே; பெண்கள் 40 அல்லது 45 வயதை எட்டினால், தானாகவே கருத்தரிப்பு என்னும் விஷயம் பெரும்பாலான பெண்களின் உடலில் நின்று விடும். சில பெண்களுக்கு தான் வயது ஆகியும் கரு முட்டை வளம் குறையாமல் இருக்கும். ஆகையால் தம்பதியர்கள் தங்களின் உடலின் அறிகுறிகளை வைத்து கருத்தரிப்பை அறிவது போல, உடலின் அறிகுறிகளை கூர்ந்து கவனித்தால், இயற்கை முறை கருத்தடையையும் அடைய முடியும்.

அது எப்படி முடியும்?
தம்பதியர் இயற்கை முறையில் எப்படி கருத்தடையை அடைவது என்று மனதில் எண்ணலாம். அது எப்படி என்றால், பெண்ணின் மாதவிடாய் நாட்களை கணக்கிட்டு உடலால் இணைவதன் மூலம் கண்டிப்பாக இயற்கை முறை கருத்தடையை அடைய முடியும். மேலும் இந்த இயற்கை மறை கருத்தடையை எட்ட இன்னொரு விஷயமும் உதவி புரிவதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

அது என்ன தகவல்?
ஆண்கள் தங்கள் மனைவியருடன் உறவு கொள்ளும் பொழுது, ஆண்களின் உடலில் உருவாகும் விந்து அணுக்கள் பெண்ணின் உடலை அடையாதவாறு பார்த்துக் கொண்டால், மிக மிக எளிதாக இயற்கை முறையில் கருத்தடையை ஏற்படுத்தலாம். அதாவது ஆண்கள் பெண்களுடன் உறவு கொள்ளும் பொழுது தங்கள் பிறப்புறுப்பை பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செலுத்தும் பொழுது, சரியான நேரத்தில் வெளியே எடுத்து விட வேண்டும்.

அது என்ன சரியான நேரம்?
உறவு கொள்ள ஆரம்பித்த சிறிது நேரத்திற்கு பின் அல்லது முக்கியமாக பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் செலுத்திய சிறிது நேரத்திற்கு பின், ஆணின் பிறப்புறுப்பு விந்து அணுக்களை வெளிப்படுத்த ஆரம்பிக்கும். அப்படி விந்து அணுக்கள் வெளிப்படும் சமயம் பார்த்து ஆண்கள் பிறப்புறுப்பை வெளியில் எடுத்து, விந்து அணுக்களின் வெளிப்பாடு நிற்கும் வரை காத்திருந்து, அந்த நேரத்தில் வேறு வித லீலைகள் புரிந்து உறவை மேற்கொண்டால், எளிதில் இயற்கை முறை கருத்தடையை அடைய முடியும்.

உறவு சுகமாகும்!
இந்த மாதிரி விந்து அணுக்கள் வெளிப்படாமல், காதலுடன், விளையாட்டுகள் கூடிய உறவாக மேற்கொண்டால், உறவு மிகவும் சுகமானதாக மற்றும் இன்பமானதாக இருக்கும். பெண்கள் ஆண்களின் பிறப்புறுப்பில் வாய் வைப்பதை கட்டாயமாக தவிர்த்து, ஆணின் விந்து அணுக்களை உடலில் ஏற்றிக் கொள்ளமல் இருந்தால் கருத்தரிப்பு நிகழாமல் சந்தோஷமான உடல் உறவை நெடுங்காலத்திற்கு மேற்கொள்ள முடியும்; மேற்கொள்ளும் உறவும் இன்ப மயமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications