Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
பொண்ணுங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்களுக்கு பாலியல் தேவை அதிகமாக இருக்குனு அர்த்தமாம்...
உடலில் பாலியல் தேவை நிறைவுறாத பொழுது ஏற்படுகின்ற உடல் மாற்றங்கள் பெண்களுக்கு எப்படி இருக்கும் என்று இங்கே பார்ப்போம்.
நம்முடைய உடலுக்குள் என்ன மாதிரியான விஷயங்கள் நடந்தாலும் அதை நம்முடைய உடல் நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதற்கான சமிக்ஞைகள் வேண்டுமானால் நமக்குப் புரியாமல் இருக்கலாமே ஒழிய, நம்முடைய உடலில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், நாம் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கிறோம் என்றால், தொண்டை வறட்சி ஏற்படும், உதடு வறண்டு போகும். நாக்கு வறட்சியாக இருக்கும். லேசான தலைவலி இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் நம்முடைய உடலுக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம்.

உடலியல் தேவை
இது ஒரு எடுத்துக்காட்டு தான். இதுபோன்ற உடலின் மற்ற எல்லா விதமான தேவைகளையும் நம்முடைய உடல் வெளிக்காட்டிவிடும். அது செக்ஸ் தேவையாக இருந்தாலும் சரி. ஆம். உடல் சார்ந்த இன்பத்தின் தேவையையும் நம்முடைய உடல் வெளிப்படுத்திவிடும். பொதுவாக ஆண்களுக்கு பாலியல் இச்சை உண்டாகிற பொழுது, அவர்களுடைய பிறப்புறுப்பின் விறைப்புத் தன்மை அதிகரிக்க ஆரம்பிக்கும். அதுவே பெண்களுக்கு உண்டாகும் பாலியல் இச்சையை நம்மால் வெளியில் தெரிந்து கொள்ள முடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பெண்களுடைய பாலியல் இ்சசையையும் அது நிறைவுறாமல் போனால் அவர்களுக்கு என்ன எண்ண ஓட்டம் இருக்கும் என்பது பற்றியும் அவர்களுடைய உடலின் மூலமே நம்மால் உண்ர்ந்து கொள்ள முடியும்.

அறிகுறிகள்
அப்படி பெண்களுக்கு இருக்கும் பாலியல் தேவையை எப்படி நாம் தெரிந்து கொள்வது? பொதுவாக நாம் இதுபோன்ற அறிகுறிகளைப் பெரிதாக்க கண்டுகொள்வதில்லை. பாலியல் தேவை பெண்ணுக்கு ஏற்படுகிற பொழுது, அவர்களுடைய நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படும். தூக்கமின்மை, தன்னம்பிக்கை குறைவாக காணப்படுவார்கள்.
இதுபோன்ற சில அறிகுறிகளை வைத்து பெண்ணுக்கு இருக்கும் பாலியல் தேவையையும் அது நிறைவேறாவிட்டால் என்ன மாதரியான பிரச்சினைகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

தூக்கமின்மை
பாலியல் இச்சை அதிகமாகி, அது நிறைவேறாமல் இருக்கிற பெண்கள் இரவு நேரங்களில் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். பாலியல் நடவடிக்கை என்பது ஒரு இயற்கையான தூண்டுதல். பாலியல் தேவை உண்டாகிற பொழுது, ஆக்சிடோசின் என்னும் ஹார்மோன் சுரப்பு ஏற்பட்டு, அது அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்து இன்பத்தின் உச்சத்தை அடைவார்கள். ஒருவேளை அவர்களால் உச்சத்தை எட்ட முடியாத போது, அது அவர்களுடைய தூக்கத்தையே கெடுத்து விடும்.

வயதான தோற்றம்
நீண்ட நாட்களால் உடலுறவில் ஈடுபடாமல் தன்னுடைய பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ளாத பெண்கள் அவர்களுடைய சருமத்தின் இளமைப் பொலிவை இழந்துவிடுவார்கள். ஏனென்றால் பாலியல் உறவின் ஈடுபாட்டால் உற்பத்தியாகிற கொலாஜென் குறைவாக உற்பத்தி ஆவதே இதற்குக் காரணம். ஏனெனில் ஓரு குறிப்பிட்ட வயதுக்கும் மேல் சருமம் மென்மையாகவும் பட்டு போலவும் இருப்பதற்கு இந்த கொலாஜென் உற்பத்தி தான் காரணம்.

சரும தளர்ச்சியும் பருக்களும்
உங்களுடைய உடலின் பாலியல் தேவைகளை வெளியில் உங்களுக்கு உணர்த்துவதற்கு புரோகெஸ்டிரோன் என்னும் ஹார்மோன் சுரந்து, முகத்தில் பருகு்களாகக் காட்டிக் கொடுக்கும். பொதுவாக உறவில் ஈடுபடுகிற பொழுது, மாா்புப் பகுதி மற்றும் தொடைப்பகுதிகள் வலிமையடையும்.

மற்றவர்களுடன் பழகுதல்
வெளியில் செல்லுதல், பொது விஷயங்களின் மீதான ஈடுபாடு, அடுத்தவர்களுடன் இருக்கின்ற உறவுகளை மேம்படுத்துமல் ஆகிய எல்லாவற்றிலும் ஆர்வம் குறைந்து விடும். தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

அதிக வலி நிவாரணிகள்
ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆக்சிடோசின் ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தியினால், பெண்களுக்கு பாலியல் இச்சை அதிகரிக்கும். அது நிறைவுறாமல் போகிற பொழுது, தலைவலி போன்ற உடலியல் மாற்றங்கள் உண்டாகும். இந்த ஹார்மோன்களால் உடலில் வலி ஏற்படுகிறது. அதனால் அதிக வலி நிவாரணிகள் பயன்படுத்துகிறார்கள்.

எப்போதும் நோய்வாய்ப்படுதல்
போதிய உடலுறவு இல்லாமையால் வைரஸ்களைத் தாங்கும் எதிர்ப்பு சக்தியை உடல் 30 சதவீதம் அளவுக்கு இழந்துவிடுகிறது. அதனால் பொதுவாக நிரந்தரமாகவே பெண்கள் உடலில் வலிமை இல்லாமல் எப்போதும் நோயாளியைப் போலவே ஆகிவிடுகிறார்கள்.

ஞாபக மறதி
உடலுறவினால் ரத்தத்துக்குப் போதிய ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது ஹார்மோன். அது மூளைக்கும் சரியான அளவில் ஆக்சிஜனைக் கடத்தும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நிறைய புதிதாக யோசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என அத்தனையும் குறைய ஆரம்பித்துவிடும். அத்தகைய செக்ஸ் தேவை நிறைவுறாமல் இருக்கும்போது, இயல்பாகவே மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைந்து ஞாபக மறதி உண்டாகிவிடும்.

தன்னம்பிக்கை இன்மை
உடல் தேவை நிறைவேறாத பொழுது, மனம் விரக்தி நிலைக்குப் போய், தங்களைத் தாங்களே லேசாக நினைத்து, தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.



Click it and Unblock the Notifications











