கருவுறுதலை பற்றி நிலவும் உண்மைகளும் கட்டுக்கதைகளும்

கருவுறுதல் என்பது தான் குழந்தை உருவாக்கத்தின் முதல் படி; கருவுறுதலை பற்றி நிலவும் உண்மைகளும் கட்டுக்கதைகளும் என்னென்ன என்று இங்கு படித்து அறியலாம்.

கருவுறுதல் என்பது தான் குழந்தை உருவாக்கத்தின் முதல் படி; கருவுறுதல் நிகழ ஆண் மற்றும் பெண் என்ற இருபாலரும் உடலாலோ அல்லது கரு முட்டைகளாலோ இணைய வேண்டியது அவசியம். கருவுறுதல் சரியான முறையில் நடந்து, குழந்தையை பெற்று எடுக்க ஆண் மற்றும் பெண் தங்களது உடல் நலம் மற்றும் கரு முட்டைகள், குழந்தை உருவாக்க அடிப்படை விஷயங்கள் குறித்து கண்டிப்பாக அறிந்து வைத்து இருக்க வேண்டியது அவசியம்.

surprising facts and myths about fertility

ஆண்மையை பற்றி யாரும் அறியாத சில முக்கிய விஷயங்கள் மற்றும் கருவுறுதலை பற்றி நிலவும் உண்மைகளும் கட்டுக்கதைகளும் என்னென்ன என்று இங்கு படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நாள் போதும்!

ஒரு நாள் போதும்!

நம்மில் பலர் கருத்தரிப்பு ஏற்பட ஒரு நாள் உடலால் உறவு கொண்டால் போதும் என்று தவறாக நினைத்து கொண்டு இருக்கிறோம்; ஆனால் அது தவறு. என்ன தான் மாதவிடாய் நாட்களை கணித்து உறவு கொண்டாலும் கூட ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை என உறவு கொண்டால் மட்டுமே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். தினசரி உறவு கொள்வதும் கூட கருத்தரிப்பை விரைவு படுத்த உதவும்.

கால அவகாசம் தேவை!

கால அவகாசம் தேவை!

பெண்ணின் உடலில் நுழையும் விந்து அணுக்கள் 3 முதல் 4 நாட்கள் வரை உயிர் வாழும்; அவை பெண்ணின் கருமுட்டையை அடைந்து அதனோடு இணைய சிறிது காலம் தேவைப்படும். எனவே தொடர்ந்து உறவு கொள்ளுதல், அதாவது தினசரி உறவு கொள்ளுதல் இல்லை வாரத்திற்கு இரண்டு - மூன்று முறை உறவு கொள்ளுதல் கண்டிப்பாக நல்ல பலனை அளிக்கும்.

தோன்றும் பொழுது..!

தோன்றும் பொழுது..!

ஆணும் பெண்ணும் கருத்தரித்து குழந்தையை பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில், நாட்களை கணித்து நேரம் பார்த்து மட்டும் உறவு கொண்டிராமல், எப்பொழுது எல்லாம் உறவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதோ எப்பொழுது எல்லாம் உடலால் இணைவது சிறந்த பலனை உடனடியாக அளிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே தோன்றும் பொழுது எல்லாம் உறவு கொண்டு கருவுறுதல் சிறப்பாக நடைபெற உதவுங்கள்.

உறவின் நிலைகள்!

உறவின் நிலைகள்!

பல நிலைகளில் வித விதமாக உறவு கொண்டால் தான் கருத்தரிப்பு ஏற்படும் என்று இல்லை; ஒரே நிலையில் உறவு கொண்டாலே போதும். ஆனால், அப்படி உறவு கொள்ளும் பொழுது, எந்த நிலையாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன், அன்புடன் உறவு கொண்டால் கட்டாயம் கருத்தரிப்பு விரைவில் நிகழும். உறவின் நிலைகள் குழந்தை பிறப்பை விரைவு படுத்தும் என்பது சுத்தமான கட்டுக்கதை!

கவனம் ஆண்களே!

கவனம் ஆண்களே!

ஆண்கள் தங்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியம், எண்ணிக்கை மற்றும் நீந்து சக்தி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் விந்து அணுக்களின் இந்த விஷயங்கள் நலமாக இருந்தால் தான் ஆண்கள் ஆண்மையுடன் உள்ளனர் என்று கூற முடியும். மேலும் ஆண்கள் ஆண்மை தன்மையுடன் இருந்தால் மட்டுமே ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியும்.

பெண்ணின் பிறப்புறுப்பு அமிலம்!

பெண்ணின் பிறப்புறுப்பு அமிலம்!

பெண்ணின் உடலில் விந்து அணுக்கள் நுழையும் பொழுது, பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் அமிலத்தின் pH அளவு விந்து அணுக்களை அழிக்க அல்லது அதன் ஆரோக்கியத்தை, செயல்பாட்டை குறைக்கும் அளவு சக்தி கொண்டது. எனவே பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் காணப்படும் அமிலத்தினை பற்றி அறிந்து, அது செயல்படாத நேரம் அல்லது அதன் pH அளவை குறைப்பது என்ற செயல்முறைகளை செய்வது, கருத்தரிப்பு விரைவில் நடக்க உதவும்.

சுய இன்பம் தேவையா?

சுய இன்பம் தேவையா?

கருத்தரிப்பு கடகடவென நடக்க சுய இன்பம் என்பது ஒரு அவசிய தேவை என்று என்ன வேண்டாம். சுய இன்பம் கண்டாலும் சரி, காணவில்லை எனினும் சரி தகுந்த முறையில் உறவு கொண்டால், பெண்ணின் உடலில் நுழைந்து அவள் உடலில் இருக்கும் கருமுட்டையை எட்டும் அளவு காதலுடன் உறவாடினால் மட்டும் போதும். நிச்சயம் கருத்தரிப்பை எளிதில் அடைந்து விடலாம்.

இளமை எதையும் செய்யும்!

இளமை எதையும் செய்யும்!

இளமையாக இருக்கிறேன் என்னால், எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு கொண்டு அவர்களை கருத்தரிக்க வைக்க முடியும் என்று ஆண்கள் எண்ணினால் அது முட்டாள் தானம். இளமை கருத்தரிக்க அதிக வாய்ப்புகளை தரும் தான்; ஆனால் அந்த இளமை காலத்தில் புகை, மது போன்ற பழக்கங்கள் மேற்கொள்ளப்படுமானால், அவை ஆண்களின் கரு முட்டைகளை சேதப்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு.

எனவே இந்த பழக்கங்கள் அதிகம் இருக்கும் இளைஞர்கள் கருத்தரிப்பில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

முதுமையிலும் முடியும்!

முதுமையிலும் முடியும்!

பல ஆண்கள் தனக்கு 90 வயது ஆனாலும் தன்னால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது மிகச்சரியான விந்து அணுக்களின் ஆரோக்கியம் இருந்தால், உடல் பலம் இருந்தால் மட்டுமே நடக்கும். மேலும் எல்லா ஆண்களுக்கும் முதுமையிலும் முடியும் என்று கூற முடியாது.

உடல் நலனை கெடுக்கும் தீய பழக்கங்கள் இருந்தால் முதுமையில் என்ன, இளமை பருவத்திலேயே ஆணின் செயல் திறன் செயலிழந்து விட வாய்ப்பு உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion