Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
பெண்களுக்கு எப்போ அகோர பசி எடுக்கும்னு தெரியுமா?... காரணம் இதுதான்...
கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு ஏற்றவாறு சாப்பிடுவதும் மிக முக்கியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் சில உணவுகளை விரும்பி சாப்பிடுவர். அடிக்கடி பசி எடுத்தாற் போல் ஒரு உணர்வு தோன்றும்.

எனவே இப்படி பசி எடுக்கும் போதெல்லாம் கர்ப்பிணி பெண்கள் கண்டதையும் சாப்பிடவும் கூடாது. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பசி உணர்வு இரண்டாவது மூன்றாவது மாதங்களில் ஏற்படும். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

பசி எடுக்க காரணங்கள்
இப்பொழுது நீங்கள் ஒருவர் மட்டுமில்லை. உங்கள் வயிற்றில் இப்பொழுது ஒரு குழந்தை யும் வளர்கிறது. குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்களிடமிருந்தே குழந்தைக்கு செல்லும். எனவே தான் நீங்கள் இதற்கு முன்னாடி சாப்பிட்டதை விட இப்பொழுது அளவுக்கு அதிகமாக பசி எடுக்கும். சரி இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வதென்று யோசிக்கிறீர்களா? நாங்கள் கூறும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள் பலன் பெறலாம்.

கலோரியை கணக்கிடுதல்
இப்பொழுது நீங்கள் இன்னொரு உயிருக்காகவும் சாப்பிட வேண்டும். நீங்கள் அதிகமாக சாப்பிடுவதாக எண்ணினால் உங்களுக்கு தேவையான கலோரியை கணக்கிட்டு கொள்ளுங்கள். உங்களுக்கு முதல் இரண்டு மாதங்கள் 300 கலோரி வரை அதிகமாக தேவைப்படும். கடைசி மூன்று மாதங்கள் 450 கலோரிகள் வரை தேவைப்படும். எனவே சரியான டயட் திட்டத்தை மேற்கொண்டு உங்கள் கொலை பசியை சற்று கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

சாப்பிடும் வேளையை அதிகப்படுத்துங்கள்
ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுவதை தவிர்த்து 6 அல்லதுள7 வேளையாக சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறை உங்களுக்கு தீவிரமாக பசி எடுப்பதை தடுக்கும். அதே நேரத்தில் அதிகப்படியான உணவால் அசெளகரியம் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள்
நீங்கள் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை எடுக்கும் போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. மேலும் தேவையற்ற கலோரிகளை யும் தடுக்கலாம். எனவே பசி எடுக்கும் போது பழங்கள், யோகார்ட் மற்றும் முளைகட்டிய பயிறு வகைகள் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். அதே நேரத்தில் குக்கீஸ், சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை தவிர்த்து விடுங்கள். எனவே பசி எடுக்கும் போது உங்கள் சுயகட்டுப்பாடு ரெம்ப முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுங்கள்.

கால்சியம் உணவுகள்
கர்ப்ப காலத்தில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் அடிக்கடி பசிக்க ஆரம்பிக்கும். எனவே பால் பொருட்களை எடுத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பசும் பால் அழற்சி என்றால் ஆட்டுப்பால் குடியுங்கள். எனவே போதுமான கால்சியம் சத்து கிடைத்து விட்டால் பசியை பறந்தோடி விடும்.

மெதுவாக சாப்பிடுங்கள்
எப்பொழுதுமே நாம் வேகமாக சாப்பிட்டால் நமது உடல் வயிறு நிரம்பியதை அறியாது. எனவே தேவையில்லாமல் நிறைய உணவை தள்ள முற்படுவீர்கள். எனவே மெதுவாக சாப்பிடுங்கள். இப்படி சாப்பிடும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வும் தோன்றும். பசியும் எடுக்காது.

காலை உணவை மறக்காதீர்கள்
காலையில் எழுந்ததும் கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் இருப்பதால் நிறைய பெண்கள் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இது உடலுக்கு நல்லது அல்ல. இப்படி செய்தால் அந்த நாள் முழுவதும் சோர்வாக காணப்படுவீர்கள். எனவே காலை உணவு கண்டிப்பாக முக்கியம். அப்பொழுது தான் உங்கள் பசியை அடக்க முடியும்.

போதுமான தண்ணீர்
கர்ப்ப காலத்தில் உடம்பில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் அடிக்கடி பசிக்கும். எனவே போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் 10 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இதை நீங்கள் தண்ணீராகவோ, டீ, காபி, ஜூஸ் என்று கூட எடுத்து கொள்ளலாம். எனவே சத்தான உணவுடன் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுங்கள்.



Click it and Unblock the Notifications