காலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்!

Written By:
Subscribe to Boldsky

உடலுறவு என்பது திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் பெரும்பாலும் இரவு நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதை தான் விரும்புகிறோம். ஆனால் காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் விளைகின்றன. அதுவும் குறிப்பாக காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக்கொள்வதால் பல ஆச்சரியமூட்டும் நன்மைகள் நடக்கின்றன. அது ஏன் இந்த நேரத்தில்... இந்த நேரத்திற்கு என்ன ஸ்பெஷல்... என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் ஆர்வத்துடன் கேட்பது புரிகிறது...

காலையில் உறவு கொள்வதால் உங்கள் காதல் வாழ்க்கை பயனடைவதோடு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியமும் மேம்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலையில் ஒரு கப் டீ மற்றும் காலை உணவுடன் பொழுதை தொடங்குபவர்களை விட, உடலுறவுடன் தங்கள் பொழுதை தொடங்குபவர்கள் தான் மிகுந்த ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள். இந்த பகுதியில் 7.30 மணிக்கு உடலுறவு கொள்வதால் உண்டாகும் பல பலன்களை பற்றி விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை தொடர்பான அமைப்பு ஒன்று உடலுறவு சம்மந்தமாக நடத்திய ஆய்வு ஒன்றில் ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன. அந்த ஆய்வின் படி, அந்த ஆய்வில் கலந்து கொண்ட பலர் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், அவர்களுடைய மன அழுத்த அளவு குறைகிறது என்றும், இதனால் அவர்கள் அன்றைய நாளை நல்ல விதமாக, புத்துணர்ச்சியுடன் தொடங்க முடிகிறது என்றும் முடிவுகள் வந்தது.

குஷியான நாள்

குஷியான நாள்

காலையில் 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதிகளால் அந்த நாள் முழுவதும் உற்ச்சாகமாக பணியாற்ற முடிகிறது என்றும் ஆய்வின் முடிவுகள் வெளிவந்தன. நெருக்கடியான வேலைகளாக மார்க்கெட்டிங் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் கூட, காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால் உற்சாகம் குறையாமலும், சிரித்த முகத்துடனும் வேலை செய்ய முடிகிறதாம்.

காரணம்

காரணம்

காலை 7.30 மணி என்பது ஆண்களின் டெஸ்டிரோன் அளவானது அதிகமாக இருக்கும் நேரமாகும். எனவே தான் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அதீத இன்பத்தை அனுவிக்க முடியும். மற்ற எல்லா நேரங்களையும் விட இந்த நேரத்தில் தான் ஆண்களின் டெஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கிறது எனவே இது தான் உடலுறவு வைத்துக்கொள்ள சரியான நேரமாகும்.

சரியான நேரம்

சரியான நேரம்

இந்த காலை 7.30 மணியானது உடலுறவு வைத்துக் கொள்ள சரியான நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் ஹார்மோன்கள் நன்றாக செயல்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் தான் உடலுறவு சமிக்கைகள் எழுச்சியடைகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நேரமில்லை

நேரமில்லை

காலை 7.30 மணியானது நான் உடற்பயிற்சி செய்யும் நேரம், நான் சமையல் செய்யும் நேரம் என்று எல்லாம் நீங்கள் கூறலாம். ஆனால் இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. நீங்கள் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அனைத்து வேலைகளையும் மிகவும் திறமையுடன், முன்பை விட மிக அதிக கவனத்துடன் செய்ய முடியும் என்பது முற்றிலும் உண்மையானதாகும்.

உடற்பயிற்சிக்கு பதிலாக

உடற்பயிற்சிக்கு பதிலாக

நீங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் நேரத்தை உடலுறவு ஒதுக்கலாம என கேட்கலாம். நிச்சயமாக இந்த காலை 7.30 மணியை நீங்கள் உடலுறவுக்காக ஒதுக்கலாம். ஏனெனில் உடலுறவின் மூலமாக நீங்கள் உங்களது உடலமைப்பை நன்றாக பாதுகாக்க முடியும். இதனால் நீங்கள் சரியான உடலமைப்புடன் இருக்க முடிகிறது. அதுமட்டுமின்றி உங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்றால் அதில் சந்தேகம் ஏதும் இல்லை.

பட்டம் கிடைக்கும்

பட்டம் கிடைக்கும்

ஒரு ஆண் என்ன தான் வெளியில் புலி, சிங்கமாகவே இருந்தாலும் கூட, தன் மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது தான் கடினம். நீங்கள் உங்களது மனைவியுடன் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், ரொமேண்டிக் கணவர் என்ற பட்டத்தை பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையாகும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

அதிகாலையில் உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்ஸின் என்னும் ரசாயனம் வெளிப்படும். இதனால் நாள் முழுவதும் அந்த ஜோடி அன்யோன்ய உணர்வுடன் இருப்பார்கள். காலையில் உடலுறவு கொள்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது போக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் திடமாக்க உதவும். காலையில் உடலுறவு கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்றவைகள் உங்களை அவ்வளவு எளிதில் அண்டாது.

எத்தனை முறை

எத்தனை முறை

ஒரு வாரத்தில் காலையில் குறைந்தது 3 முறையாவது உடலுறவு வைத்துக் கொண்டால் நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாடு குறைவாக இருக்கும். மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் சூழ்நிலை உள்ளது. இரவில் வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வரும் அவர்களால் தம்பத்தியத்தில் ஈடுபட முடியதில்லை. இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் அதிகாலையில் தம்பத்தியத்தை வைத்துகொண்டால் ஆரோக்கியம் மேம்படும். மேலும் மனஅழுத்தம் வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

why morning time is best for intercourse

why morning time is best for intercourse
Story first published: Friday, October 13, 2017, 15:25 [IST]