Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 19 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான மிளகு சீரக அடை ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இதுல உங்க கட்டைவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
வெயில் காலத்தில் வீட்டில் ஏசி சண்டையா? இந்த சின்ன மாற்றங்கள் உங்கள் குடும்ப அமைதியை காக்கும்! -
சூரியன் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு செலவுகளும், தோல்விகளும் தேடிவரப் போகுதாம் -
1 கப் மீல்மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு முன் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!
கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என பலரும் கூறி வருகிறார்கள். இதற்கு காரணம் உபயோகப் படுத்துபவர்கள் தான். கருத்தடை மாத்திரையை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த கூடாது என மக்களுக்கு தெரிவதில்லை.
நீரழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் கருத்தடை மாத்திரை பயன்படுத்த வேண்டாம் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுப் போல கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தும் முன்பு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன...

மருத்தவரிடம் கலந்தாய்வு
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் முன்னர் மருத்துவரிடம் கலந்தாய்வு செய்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் தகுதியை கருத்தடை மாத்திரைகள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை தெரிந்துக் கொண்ட பிறகு உபயோகிக்கவும்.

35 வயதிற்கு மேல்
நீங்கள் 35 வயதிற்கு மேலான பெண்ணாக இருந்தால், உங்களுக்கு நீரிழிவு, உடல்பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு உட்கொள்ளுங்கள். இல்லேயேல் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கருத்தடை மாத்திரையின் பாதுகாப்பு
கருத்தடை மாத்திரை கருத்தரிக்காமல் இருக்க மட்டுமே உதவும், பால்வினை நோயை இது தடுக்காது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

தலைவலி
தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாய்வு செய்துவிட்டு பிறகு உட்கொள்ளுங்கள்.

பிரசவித்த பெண்கள்
குழந்தை பிரசவித்த புதிய தாய்மார்கள் (பாலூட்டும் தாய்மார்கள்), குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்களால் எச்சரிக்கப் படுகிறார்கள். இது குழந்தையின் உடல் நலத்தையும் பாதிக்கும் என கூறுகிறார்கள்.

இரத்த கசிவு
முதல் முறை கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது மாத சுழற்சியின் போது நடுவில் சிறிதளவில் இரத்த கசிவு ஏற்படலாம். இது சாதாரணம் தான் பயப்பட தேவையில்லை.

உடல் பருமன்
கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால், இதனால் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என சிலர் கூறுவதை நம்ப வேண்டாம். கருத்தடை மாத்திரை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காது.

குறைபாடுகள்
பொதுவாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் அது குழந்தைகளையும் பாதிக்கும் என சிலர் கூறுவதுண்டு. ஆனால் அப்படி ஏதும் ஆகாது. இது குழந்தைகளுக்கு எந்த குறைபாட்டையும் ஏற்படுத்தாது.

மார்பக புற்றுநோய்
சில பெண்கள் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்பட ஓர் காரணியாக இருப்பதாய் நினைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு இல்லை, புற்றுநோய் கட்டி ஏற்படுவதற்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இரத்த கட்டிகள்
உங்கள் பரம்பரையில் தொடர்ச்சியாக இரத்த கட்டி ஏற்படும் பிரச்சனை இருந்தால், நீங்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications