Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
கருச்சிதைவு ஏற்பட்டால் மார்பக புற்றுநோய் வருமா?
தற்போது பெண்கள் அனைவரும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மார்ப புற்றுநோய். இத்தகைய மார்பக புற்றுநோயால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவதால், அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோயைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காகத் தான் இந்த நோயைப் பற்றிய பல விழிப்புணர்வுகள் ஆங்காங்கு நடைபெறுகின்றன.
பொதுவாக மார்பக புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகப்படியான ஆல்கஹாலை அருந்துதல் மற்றும் கருச்சிதைவு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எப்படி கருச்சிதைவு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்?
கருச்சிதைவு ஏற்பட்டால், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் பெண்கள் கர்ப்பமாகும் போது, அவரது உடலில் பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அப்படி ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும் போது, மார்பகத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, அதே சமயம் பால் சுரக்கவும் ஆரம்பிக்கும். அப்படி இருக்கும் போது, கருச்சிதைவு நடைபெற்றால், அது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதுவே இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கருச்சிதைவு நடைபெற்றால், அது மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்லாமல், 1997 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆஃப் மெடிசன், மார்பக புற்றுநோய்க்கும், கருச்சிதைவிற்கு உள்ள தொடர்பினை கண்டறிவதற்கு சர்வே ஒன்றை நடத்தியது. இதில் கருச்சிதைவானது கருத்தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்பட்டால், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், அதுவே 2-3 மாதங்கள் கழித்து ஏற்பட்டால், அது மோசமாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோய் இருப்பதை எப்படி கண்டுப்பிடிப்பது?
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்தால், அதனை குணப்படுத்திவிடலாம். அதற்கு அதனை எப்படி கண்டுப்பிடிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் வீட்டிலேயே சோதனையை செய்து எளிமையாக கண்டுப்பிடிக்கலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இது தான்..
* முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, வலது கையை மேலே தூக்கி, கழுத்தின் பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடது கையின் விரல்களால், மார்பகம் மற்றும் மார்பகத்தைச் சுற்றியுள்ள இடத்தை வட்ட சுழற்சியில் மென்மையாக மசாஜ் செய்வது போல் தேய்த்து பார்க்க வேண்டும். இதேப் போன்று இடது பக்கமும் செய்து பார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் கட்டி போன்று தென்பட்டால், அது மார்பக புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.
* அதுமட்டுமல்லாமல், மார்பக காம்புகளில் இருந்து ஏதேனும் நீர்மம் அடிக்கடி வெளிவந்தாலோ அல்லது மார்பக காம்புகளின் நிறம் மாறுபட்டாலோ அல்லது மார்பகத்தின் வடிவம் வித்தியாசமாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications