Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
நம்மை அறியாமல் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் 8 செயல்கள்!!!
பெண்களுக்கு கருத்தரித்தல் என்பது ஒரு பெரிய பரிசு. எந்த ஒரு பெண்ணும் அந்த பரிசை வீணாக்குவதற்கு விரும்பமாட்டார்கள். ஆனால் கடவுள் தந்த அந்த பரிசானது பெண்கள் செய்யும் சிறு தவறுகளால் வீணாகிவிடுகிறது. இந்த உலகில் தவறு செய்யாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் கர்ப்பம் என்று வந்த பின்னர், எந்த ஒரு பெண்ணும் அஜாக்கிரதையுடன் செயல்படக்கூடாது. ஏனெனில் அவை வயிற்றில் வளரும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே கர்ப்பமாக இருக்கும் போது, மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக கருத்தரித்துவிட்டால், வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அவையே அளவுக்கு அதிகமாக போனால், அதுவே கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். யாரும் இந்த உலகில் கருச்சிதைவு ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படமாட்டார்கள். இருப்பினும் சிறு கவனக்குறைவினால், இத்தகைய கருச்சிதைவு ஏற்படுகிறது. அதிலும் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் தான், இத்தகைய கருச்சிதைவு ஏற்படும். இப்போது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் சில செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

உணவுப்பழக்கம்
உணவுகளை சாப்பிடும் போது பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழங்களை சாப்பிட வேண்டும். ஏனெனில் அழுகிய பழங்களையோ அல்லது அசுத்தமான பழங்களையோ சாப்பிட்டாலும், அவை கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.

பயணம்
இந்தியாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமானதாக உள்ளன. இந்த சாலைகளில் கர்ப்பிணிகள் பயணம் மேற்கொண்டால், அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். ஏனெனில் சிறிது தடுமாறினாலும், கீழே வழுக்கி விட நேர்ந்து, இறுதியில் கருச்சிதைவை ஏற்படுத்தும்.

போதிய ஓய்வு இல்லாமை
அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கமும், 2 மணிநேர ஓய்வும் மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை உடலுக்கு போதிய ஓய்வு இல்லாவிட்டால், அவை உடலுக்கு தேவையான பலத்தைக் கொடுக்காமல், தடுமாற்றத்தை உண்டாக்கிவிடும்.

ஆபத்தான விளையாட்டுக்கள்
கர்ப்பமாக இருக்கும் போது வேகமாக சைக்கிள் ஓட்டுவது, குதிரை பந்தயம், ஸ்கேட்டிங், தண்ணீர் பூங்காக்களில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற விளையாட்டுக்களை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மன அழுத்தம்
அமைதியாக இருந்து ஆளைக் கொல்வது தான் மன அழுத்தம். இத்தகைய மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கருப்பையில் இறுக்கத்தை உருவாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால்
தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராகவோ அல்லது ஆல்கஹால் பருகினாலோ, அந்த பழக்கத்தில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினம். ஆனால் அதில் உள்ள நிக்கோட்டின் மற்றும் ஆல்கஹாலில் உள்ள பொருள் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, நஞ்சுக்கொடிக்கு ஆபத்தை ஏற்படுத்தி, கருச்சிதைவை எளிதாக்கிவிடும்.

மருந்து மாத்திரைகள்
மருந்து பொருட்களான ஆஸ்பிரின் போன்றவற்றை கர்ப்பத்தின் போது எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் எந்த வகையான ஸ்டெராய்டுகளையும் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. அதிலும் இதனை தேவையில்லாமல் அடிக்கடி எடுத்தால், அவை கருச்சிதைவை ஏற்படுத்தும்.

தவறான உடற்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும் போது செய்யும் உடற்பயிற்சியில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது அனைத்து உடற்பயிற்சிகளுமே பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் சில உடற்பயிற்சிகள், வயிற்றை இறுக்கமடையச் செய்யும். எனவே எந்த ஒரு உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்பும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications