Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கைக்குழந்தை வயிற்று வலியால் அழுதால் என்ன செய்ய வேண்டும்?
சின்ன சின்ன உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விட்டால் குழந்தைகள் பயங்கரமாக அழ ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக கைக்குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம்.
பிறந்த குழந்தையை சமாளிப்பது என்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு நீங்கள் ரெம்ப பொறுமையாக இருக்க வேண்டும். அதிலும் சின்ன சின்ன உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விட்டால் குழந்தைகள் பயங்கரமாக அழ ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக கைக்குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம்.

இதற்கு நீங்கள் அவர்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். இப்படி குழந்தைகளுக்கு எந்த மாதிரியான செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காணலாம்.

செரிமான சிக்கல்
குழந்தைகளுக்கு செரிமான சிக்கல் வந்து விட்டால் உடனே அழத் தொடங்கி விடுவார்கள். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அதன் ஜீரண மண்டலம் இன்னும் சரியாக வளர்ச்சி பெற்றிருக்காது. உணவை வயிற்றுக்கு அனுப்பும் உணவுக் குழாய் வால்வு இன்னும் வளர்ச்சியடைய வேண்டியிருக்கும். இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி, வாந்தி, எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

பொதுவான காரணங்கள்
* வைரல் அல்லது பாக்டீரியா தொற்று. பொதுவாக குழந்தைகள் எதாவது பொருளை வாயில் வைப்பதால், தூசிகளில் விளையாடி விட்டு கையை வாயில் வைப்பதால் நோய்த்தொற்றுகள் உண்டாகிறது.
* பிறந்த குழந்தைகள் ஆரம்ப காலத்தில் சாப்பிடும் போதோ அல்லது பால் குடிக்கும் போதோ காற்றை உறிஞ்சிக் கொள்ளும். இது குழந்தைகளுக்கு வயிற்றில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
* அதே மாதிரி குழந்தைகள் திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கும் போது அவர்கள் மலச்சிக்கலை அனுபவிக்கலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை
பால் போன்ற பொருட்களை உண்ணும் போது, அந்த உணவுப் பொருட்கள் சரிவர செரிமானமாகாவிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதன் அறிகுறிகளை கீழ்க்கண்டவாறு காணலாம்

அறிகுறிகள்:
* எதற்கெடுத்தாலும் குழந்தை அழத் தொடங்குவர்
* பாக்டீரியா தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
* வயிற்று போக்கு
* வாந்தி
* மலச்சிக்கல்
* வயிற்று வீக்கம்
மேற்கண்ட அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?
* அதீத காய்ச்சல்
* தீவிர வயிற்று போக்கு
* பசியின்மை
* எடை இழப்பு
* தொடர்ச்சியான விக்கல்கள்
* மூச்சு விட சிரமம்
* பச்சை கலரில் வாந்தி எடுத்தல்
* வாந்தி எடுக்கும் போது இரத்தம் வருதல்
* நீர்ச்சத்துயின்மை
* மலத்தில் இரத்தம் வருதல்
* அதிகப்படியான சோம்பல்
* மலம் கழிக்க முடியாமல் போதல்
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications