Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மழைக்காலத்தில உங்க குழந்தைகளை எப்படி பத்திரமா பார்த்துக்கணும் தெரியுமா?
மழைக்காலம் வந்தால் அத்துடன் சேர்ந்து கிருமிகளும் வந்து விடுகின்றன. இது குழந்தைகளுக்குப் பரவும் போது நோய்களும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே எந்த விதமான கிருமிகளும் குழந்தைகளைப் பாதிக்காமல் எவ்வாறு பத்
குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பது நாம் அறிந்த ஒன்றாகும். எனவே அவர்களின் சருமத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளுவது பெற்றோர்களின் கடமையாகும். இப்போது மழைக்காலம் தொடங்கி விட்டது. புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதுகாப்பதில் நீங்கள் சற்று அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.

மழைக்காலம் வந்தால் அத்துடன் சேர்ந்து கிருமிகளும் வந்து விடுகின்றன. இது குழந்தைகளுக்குப் பரவும் போது நோய்களும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே எந்த விதமான கிருமிகளும் குழந்தைகளைப் பாதிக்காமல் எவ்வாறு பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

வீடு சுத்தம்
முதலில் உங்கள் வீட்டையும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமிகள் எங்கு இருந்து வேண்டுமானாலும் வந்து குழந்தைகளைப் பாதிக்கலாம். எனவே வீடு, தோட்டங்கள் மற்றும் குழந்தைகள் வீட்டினுள் விளையாடும் இடங்கள் அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் உண்ணும் உணவு தாய்ப்பால் வழியாகக் குழந்தைகளை பாதிப்பதற்கு வழிகள் உள்ளன. எனவே நீங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் தேவை.

தொற்றுநோய்கள்
மழைக்காலத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். அதாவது காய்ச்சல், உடல் வலி, தும்மல் போன்ற சிறிய பிரச்சனைகளும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களின் அறிகுறியாகும். எனவே சிறிய பிரச்சனை தான் என்று விட்டுவிடாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கொசுக்கள்
மழைக்காலம் வந்து விட்டாலே கொசுக்களும் வந்து விடும். கொசு கடித்தல் குழந்தைகளுக்கு வலி ஏற்படுத்தும் ஒன்று. மேலும் கொசுக்கள் கடித்த இடத்தில் சிவப்பு நிற மாற்றம் மற்றும் வீக்கமும் ஏற்படும். எனவே கொசுக்கள் குழந்தைகளை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் தூங்கும் போது அவர்களைப் பாதுகாப்பான கொசு வலைக்குள் தூங்க வையுங்கள். மாலை நேரத்தில் குழந்தைகளின் முழு உடலையும் முடி வையுங்கள். முடிந்தால் இயற்கையான கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள்.

நாப்கின்
குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது நாப்கின் அணியாமல் இருப்பதே சிறந்தது. குழந்தைகளுக்கு நாப்கின் அணிந்தால் அவை ஈரமானால் உடனே கழற்றிவிடுங்கள். நாப்கின் குழந்தைகளின் இடுப்பில் ஈரத்துடன் இருப்பதால் பாக்டீரியாக்கள் பரவி குழந்தைகளுக்கு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளைக் கவனித்து அடிக்கடி நாப்கின்களை மாற்றி விடுங்கள்.

ஆடைகள்
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு அணியும் ஆடைகளில் முக்கியமாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் குளிரிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க காட்டன் ஆடைகள் அல்லது கம்பளி ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணியுங்கள். இந்த ஆடைகள் குழந்தைகளைக் குளிரிலிருந்து பாதுகாக்கும். மேலும் முக்கியமாக குழந்தைகள் அணியும் ஆடைகள் ஈரமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் ஆடைகள் ஈரமாக இருந்தால் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஈரமில்லாத காட்டன் அல்லது கம்பளி ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணிந்து விடுங்கள்.

சுத்தமான கைகள்
கைகளில் தான் பாக்டீரியாக்கள் அதிகமான வசிக்கின்றன. எனவே உங்கள் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் கைகளினால் குழந்தைகளுக்குத் தண்ணீர் மற்றும் உணவுகளைக் கொடுக்கும் போதும் பாக்டீரியாக்கள் குழந்தைகளைத் தாக்க வலிகள் உண்டு. எனவே உங்கள் கைகளையும் குழந்தைகள் கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் அடிக்கடி அவர்களின் கைகளை வாய்களில் வைப்பார்கள். எனவே அவர்களின் கைகளையும் சுத்தமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உணவுகள்
குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டார்கள் எனில் அவர்களுக்கு கொடுக்கும் உணவுகள் எப்போதும் புதிய ஒன்றாகவும் மற்றும் சூடான ஒன்றாகவும் இருக்க வேண்டும். திரவமாக ஏதாவது குழந்தைகளுக்குக் கொடுக்கும் போதும் அவற்றை நன்றாகச் சூடேற்றி கொடுப்பதே சிறந்தது.

குழந்தைகள்
எல்லாவற்றை விட முக்கியமான ஒன்று குழந்தைகளைச் சுத்தமாக வைப்பது தான். குழந்தைகளை மலைக்காலத்தில் தினமும் குளிக்க வைக்க முடியாது எனவே ஒரு ஈரத்துணையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குழந்தைகளை துடைக்க வேண்டும். ஈரத்துணியால் துடைத்த பிறகு மிக முக்கியம் மற்றொரு காய்ந்த துணியைக் கொண்டு குழந்தைகளின் உடலில் ஈரம் இல்லாமல் சுத்தமாகத் துடைப்பது தான். இவை எல்லாவற்றையும் கடைபிடித்து குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
