Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம் -
திருமணத்திற்கு முந்தைய உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு உங்கள் உரிமையை மாற்றும்! -
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
திருமண சீசனில் தங்கம் விலை திடீர் உயர்வு: பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள்! -
ஜூன் 15-ல் உருவாகும் அரிய புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
உடலுறவின் உச்சத்தை அனுபவித்துக் கொண்டே குழந்தை பெற்றெடுக்க முடியுமாம்... புதிய கண்டுபிடிப்பு
உங்கள் துணையுடனான செக்ஸ் உணர்வு உச்சநிலை செயலின் மூலம் அதிகப்படியான ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கிறது. இது தான் தாய்ப்பால் சுரப்பி ற்கும் உதவும் ஹார்மோன். இந்த அதிக அளவு ஆக்ஸிடோசின் ஹார்மோனால் குழந்தை ப
குழந்தை பிறப்பு என்றாலே ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம் என்று சொல்வார்கள். சந்தோஷம் கஷ்டம் என்ற இரண்டையும் கொண்ட பயணம் தான் இது. தன் வாழ்நாளிலே ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் அதிகப்படியான வலி என்றால் அது இந்த பிரசவ வலி தான்.

ஒவ்வொரு பெண்ணும் அந்த வலியை சந்தித்து தான் புதிய ஒரு உயிரை இந்த உலகத்தில் ஈன்றெடுக்கின்றனர். இந்த மாதிரியான வலி மிகுந்த குழந்தை பிறப்பிற்கு மத்தியில் காதலுடன் அன்புடனும், செக்ஸ் உணர்வுடனும் மேற்கொள்ளும் உச்சநிலை குழந்தை பிறப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா.

செக்ஸ் உச்சநிலை பிரசவம்
சுய இன்பம் போன்றவை குழந்தை பிறப்பின் போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் உங்கள் துணையுடனான செக்ஸ் உச்சநிலை உணர்வை அனுபவித்துக் கொண்டே வலி மிகுந்த உங்கள் பிரசவத்தையும் மற்றும் உங்கள் உடலையும் ரிலாக்ஸ் செய்ய புதிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சரி வாங்க இந்த செக்ஸ் உச்சநிலை உணர்வை பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
பிரசவம் என்றாலே தாங்க முடியாத எலும்பே நொறுங்கக் கூடிய வலி, மணிக்கணக்கில் கருப்பை சுருங்கி விரிதல், வேதனை இவற்றின் ஒட்டுமொத்த உருவம் தான் பிரசவமாக இருந்து வருகிறது. ஆனால் உங்கள் குழந்தை பிறப்பு ஒரு மகிழ்ச்சியான உணர்வுப் பூர்வமான தருணமாக இருக்க நீங்கள் நினைத்தால் அதற்கு கை கொடுப்பது தான் இந்த செக்ஸ் உச்ச நிலை குழந்தை பிறப்பு.

ஹார்மோன் சுரப்பு
உங்கள் துணையுடனான செக்ஸ் செயல்பாட்டின்போது, உண்டாகிற உச்சநிலை மூலம் அதிகப்படியான ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கிறது. இது தான் தாய்ப்பால் சுரப்பிற்கும் உதவும் ஹார்மோன். இந்த அதிக அளவு ஆக்ஸிடோசின் ஹார்மோனால் குழந்தை பிறப்பு எளிதாகுவதோடு மட்டுமல்லாமல் பிரசவத்தின் போது குறைந்த இரத்த போக்கு மட்டுமே ஏற்படுகிறது.

ஆக்ஸிடோசின்
இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன் தான் "காதல் ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பிறக்கப்போகும் தருவாயில் பெண்கள் அதிக உணர்ச்சி நிலைக்கு செல்வார்கள். அப்பொழுது இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது தான் உடலுறவின் போது உச்சநிலையை அடைவதற்கும் காரணமாக அமைகிறது.

எப்படி நிகழ்கிறது
குழந்தை பிறப்பும், பாலியல் உணர்வும் இந்த காதல் ஹார்மோனால் தான் நடைபெறுகிறது. எனவே குழந்தை பிறப்பின் போது இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிக்க நீங்கள் தனி சூழ்நிலையில் உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும். நீங்கள் செக்ஸ் உச்சநிலையை அடைந்து கொண்டே குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினால் இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசித்து கொள்வது உங்கள் துணைக்கும் உங்களுக்கும் நல்லது. அது இம்முறை மீது உங்களுக்கு இருக்கும் பயத்தைப் போக்கி, மனநிம்மதியைத் தரும்.

விழிப்புணர்வு
ஆனால் இந்த மாதிரியான குழந்தை பிறப்பில் இன்றளவும் நிறைய சர்ச்சைகள் இருந்து வருகின்றன. ஆனால் பிரசவத்தை எளிதாக்க சந்தோஷமான தருணமாக ஆக்குவதில் இந்த செக்ஸ் உச்சநிலை பிரசவம் மிக உறுதுணையாக இருக்கும். ஆண்கள் இதுபற்றி அறிந்து கொள்ள முன்வராவிட்டாலும், பிரசவத்தின் கொடிய வேதனையை அனுபவிக்கும் பெண்கள் இதுபற்றி தெரிந்து வைத்திருப்பதும் விழிப்புணர்வு அடைவதும் நல்லது.

தடை
இந்த செக்ஸின் உச்சத்தை அனுபவித்துக் கொண்டே கழந்தை பெற்றுக் கொள்ளும் மகிழ்ச்சியான தருணத்தை உலக அளவிலேயே 0.3 சதவீதம் பெண்கள் தான் ஏற்றிருக்கிறார்கள். அதில் நம் நாட்டில் இ பற்றி தெரிந்தவர்களே மிக அபூர்வம். இன்றளவும் இதை நடைமுறைப்படுத்த உலகம் முழுவதும் பெரும் தடை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு இம்முறை பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும் ஏதாவது தவறாக நடந்துவிடுமோ என்ற இச்சமும் தான் முக்கிய காரணம்.

முடிவெடுத்தல்
உங்கள் பிரசவத்தின்போது தெளிவான முடிவை எடுங்கள். உங்களுக்கு சரியான தகுந்த பிரசவ முறையை தேர்ந்தெடுங்கள். இந்த உச்சநிலை குழந்தை பிறப்பு ஒரு சந்தோஷமான தருணத்தை உங்களுக்கு வழங்கும். உங்களுக்கு பிரசவ காலம் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறதா அல்லது காதல் உணர்வுகளை மேற்கொள்ள விரும்புகிறதா என்பதை உங்கள் உடல்நிலையை பொருத்து முடிவெடுங்கள். நீங்கள் உச்ச நிலை உணர்வை அடையும் போது எளிதாக ஹார்மோன் அதிகரிப்பால் கருப்பை சுருங்கி விரிதல் ஏற்பட்டு குழந்தை பிறப்பும் அதிக வலி இல்லாமல் அமையும். எல்லா பாலியல் உணர்வும் ஒன்றல்ல. இது உங்கள் பிரசவ காலத்தை எளிமையாக்க உதவும் உணர்வு. எனவே சரியான முடிவை எடுத்து உங்கள் குழந்தையை மகிழ்ச்சியாக ஈன்றெடுங்கள்.



Click it and Unblock the Notifications