உங்கள் குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய புகைப்படங்களுக்கான ஐடியாக்கள்!

குழந்தைப்பருவம் என்பது மீண்டும் கிடைக்காத ஒன்று; குழந்தைகளை புகைப்படம் எடுக்க உதவும் சில கிரியேட்டிவ் ஐடியாக்களை இங்கு காணலாம்!

குழந்தைப்பருவம் என்பது வாழ்க்கையின் மிக அருமையான காலகட்டம். அந்த நேரத்தில் நாம் அனைவரும் குழந்தையாய், மிகவும் தூய்மையானவர்களாய் இருந்ததனால், வளர்ச்சியின் பாதையின் நம் உடலும் மனமும் இருந்ததனால், நம்மால் அன்று நிகழ்ந்த அத்துணை நிகழ்வுகளையும் நினைத்து பார்த்து ஆனந்தப்பட முடியவில்லை.

Tips and Ideas for babies Photography

உங்களில் எவருக்கேனும் நீங்கள் குழந்தையாய் இருந்த பொழுது நீங்கள் எப்படி இருந்தீர்கள், என்னென்ன செய்தீர்கள் என்று நினைவு உள்ளதா? கண்டிப்பாக இருக்காது! மிகச்சிலருக்கு நினைவு இருக்கலாம். ஒரு வயதிற்கு முன் உங்கள் வாழ்வில் என்ன நடந்தது, ஒரு வயதை தாண்டி இரண்டு வயதை எட்டும் முன் என்னென்ன செய்தீர்கள் என்பது நினைவில் இருப்பது அரிது; அதுவே இரண்டு அல்லது மூன்று வயதிற்கு பின் நிகழந்தவை கொஞ்சம் நினைவில் இருக்கும்; பார்த்த மனிதர்களை, விளையாடிய பொம்மை போன்றவை நினைவில் இடம் பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரிசுகள்!

பரிசுகள்!

இந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, தனது குழந்தைப்பருவ நிகழ்வுகளை பார்த்து, இரசித்து குழந்தைகள் மகிழ, அந்த நாள் நினைவுகளை பெற்றோரான நீங்கள் எண்ணிப்பார்த்து நெஞ்சில் நிறுத்தி அசைபோட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த இரண்டும் இந்நாளில் வாழும் நமக்கு கிடைத்த மிகப்பெரியய பரிசுகள்; இந்த பரிசுகளை பயன்படுத்தி, உங்கள் குழந்தைக்கு நீங்கள் மிகச்சிறந்த பரிசினை வழங்க, இப்பதிப்பில் கூறப்பட்டுள்ள புகைப்பட ஐடியாக்களை முயற்சித்து பாருங்கள்! கண்டிப்பாக உங்கள் நினைவுகள் மலரும் நினைவுகளாக என்றென்றும் மறையாமல் நிலைத்திருக்கும்!

எப்படி இருந்தேன்?

எப்படி இருந்தேன்?

பிறந்தவுடன் நான் எப்படி இருந்தேன் என்று உங்கள் குழந்தை உம்மை பார்த்து வினவினால், அதற்கு தக்க பதில் அளிக்க வேண்டியது பெற்றோரான உமது கடமை! எனவே, குழந்தைகள் பிறந்து ஒரு மாதம் முடிந்த பின், அதிக கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தாத கேமரா கொண்டு அழகாக உங்கள் குழந்தையை புகைப்படம் எடுத்து வையுங்கள்! பின்னாளில் உங்கள் குழந்தை கேள்வி கேட்கும் பொழுது, அவர்களுக்கு காட்ட எதுவாக இருக்கும்.

மொட்டை பாப்பா!

மொட்டை பாப்பா!

குழந்தைகளுக்கு எடுத்த முதல் மொட்டையின் நினைவுகள் மிகவும் முக்கியமானவை! குழந்தைகள் நாளை வளர்ந்த பின் திடீரென என்னுடைய மொட்டைப்பாப்பா படம் இருக்கா என்று கேட்டால், உங்களால் உடனடியாக எடுத்து காட்ட முடியும்! மொட்டை பாஸ் படம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று!

அழுமூஞ்சி

அழுமூஞ்சி

குழந்தைகள் சிரிப்பது எத்தனை அழகானதோ, அவர்கள் அழுவதும் அத்தனை அழகானது தான். அதிலும் குழந்தைகள் கோபத்தோடு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு, அடம்பிடிப்பது என்பது ஒரு காணுதற்கரிய விஷயம்! அதை புகைப்படமாக குழந்தைகளுக்கு காட்டி, அவர்களின் அழுகைக்கான காரணத்தை வளர்ந்த பின் விவரித்தால், அது அவர்கள் முகத்தில் சிரிப்பின் ரேகைகளை வரச் செய்யும்.

சகோக்கள்

சகோக்கள்

இரண்டாம் குழந்தையை பெற்று எடுத்து இருந்தால், அக்குழந்தை தனது உடன் பிறந்தவருடன் எப்படி இருந்தது, உடன் பிறந்தவர் எப்படி பார்த்துக் கொண்டார் என்று அவர்தம் பாசத்தை அறிய முடியும்; அதேபோல் முதல் குழந்தையும் தன் குட்டி தம்பி அல்லது பாப்பாவை எப்படி பார்த்துக் கொண்டோம் என்று எந்த அழகிய கானா காலத்தை எண்ணிப் பார்த்து மனம் மகிழ, இப்படி புகைப்படம் எடுப்பது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும்!

தண்ணீர் டப்!

தண்ணீர் டப்!

பெரும்பலான குழந்தைகள் சற்று வளர்ந்ததும், அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டாக கடைபிடிப்பது இந்த தண்ணீர் டப் விளையாட்டை தான்; இந்த விளையாட்டு குழந்தையி குளிப்பாட்டும் பொழுது தொடங்கியதாக இருக்கும்; குழந்தை அதில் குஷியாக விளையாடுவதை காண கண் கோடி வேண்டும் என்றே கூறலாம்.

தந்தையின் பாசம்!

தந்தையின் பாசம்!

தந்தை தன்னை எவ்வளவு நேசித்தார், நேசித்து வருகிறார் என்பதை குழந்தையும் தந்தையும் ஒன்றாய் செய்த லூட்டிகளின் போது, எடுத்த புகைப்படத்தில் இருந்து குழந்தையால் அறிந்து கொள்ள முடியும்; வளர்ந்த பின் தந்தையை தவறாய் புரிந்து கொண்ட குழந்தைகளுக்கு உண்மை நிலையை அறிய இது பெரிதும் உதவும்.

தாயின் பாசம்

தாயின் பாசம்

குழந்தைகள் எப்பொழுதும் தாய்ப்பாசம் கொண்டவர்களாகவே இருப்பர்; என்னதான் தந்தை எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தாலும், தாயின் அருகாமை தான் அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக குழந்தைகள் நினைத்திருப்பர். தாய் சிறுவயதில் இருந்து தன்னைக் காக்க என்னென்ன செய்திருக்கிறார் என்று குழந்தைகள் புரிந்து கொள்ள இந்த அப்புகைப்படங்கள் சான்றாய் நின்று எடுத்துக் காட்டும்.

முதல் நீச்சல்

முதல் நீச்சல்

அனைத்துக் குழந்தைகளுக்கும் முதல் முறையாக நீச்சல் அல்லது குளத்தில் ஆடிய விளையாட்டு என்பது அவர்தம் தந்தையுடன் சேர்ந்து செய்ததாகவே இருக்கும். குழந்தைகளுக்கு தனது முதல் நீச்சல் அல்லது குளத்தில் தான் ஆடிய விளையாட்டை நினைவுகூர, அச்சமயம் தந்தை தனக்கு அச்சம் ஏற்படாமல் காத்ததை எண்ணிப்பார்க்க புகைப்பட பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கும்!

முதல் எழுத்து

முதல் எழுத்து

அனைத்துக் குழந்தைகளும் முதல் முறையாக கை பிடித்து எழுத கற்றுக்கொடுத்தது தன் தாயாக தான் இருக்கும். அந்த பிள்ளையார் சுழி நினைவினை என்றென்றும் நிலைத்திருக்க செய்ய அவசியம் ஒரு புகைப்படம் தேவை, என்று உணருங்கள் அன்பு பெற்றோர்களே! அது குழந்தைக்கு தனது கல்வியியல் வளர்ச்சி பாதை தொடங்கிய மைல்கல்லை சுட்டிக்காட்டும்.

வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை!

வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை!

குழந்தைகளுக்கு குழந்தை பருவ நாட்களில் வண்ணங்கள் என்றாலே அப்படி ஒரு அலாதி பிரியம் - ஆசை என்றே சொல்லலாம். குழந்தைகளுக்கு பந்துக்களை வைத்து விளையாடுவதிலும் மிகவும் ஆசை! அப்படி வண்ணங்கள் நிறைந்த பந்துகளுடன் குழந்தை விளையாடுவதை கண்டிப்பாக பெற்றோர் படம் படித்து வைத்திருக்க வேண்டியது அவசியம்!

அடம் பிடிக்கும் பாப்பா!

அடம் பிடிக்கும் பாப்பா!

குழந்தைகள் அடம் பிடிப்பதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்; அதிலும் கொழு கொழுவென இருக்கும் பாப்பா எதையாவது தூக்கி எறிந்து, எதையேனும் பிய்த்துக்கொண்டு, ஆடைகளை கையால் சுற்றிக்கொண்டு தனியாக கோபித்துக் கொண்டு நிற்கும் காட்சியின் அழகுக்கு இணையான அழகை வேறெங்கும் பார்க்க முடியாது!

அம்மாவுக்கு உதவி!

அம்மாவுக்கு உதவி!

குழந்தைகள் சிறு பிராயத்தில் அம்மாவிற்கு உதவி செய்வதில் அதிக அக்கறை காட்டுவர்; வளர்ந்த பின் அந்த அக்கறையை காண்பது மிகவும் அரிதான விஷயம். ஆகையால் எப்பொழுது உதவி செய்கிறார்களோ, அப்பொழுதே அதை பதிவு செய்து வைத்துவிடுங்கள்! அது பின்னாளில் குழந்தைகளுக்கு தன் உதவி மனப்பான்மையை எடுத்துரைக்க உதவும்.

பொம்மை

பொம்மை

குழந்தைப்பருவத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பொம்மை இருந்திருக்கும்; அதனுடனேயே தான் இருப்போம்; தூங்குவோம்; உண்போம்; விளையாடுவோம்; பேசுவோம், அது நம் வாழ்க்கையின் முதல் சிறந்த நண்பன் போல் நம்முடனேயே இருந்திருக்கும். ஆனால் வளர்ந்த பின் அதை நாம் மறந்திருப்போம்; அதை நமக்கு மீண்டும் நினைவுபடுத்த குழந்தை - பொம்மையுடன் இருப்பது போன்ற படம் மிகவும் உதவும்!

செல்லப்பிராணி

செல்லப்பிராணி

குழந்தைகள் வளரும் பொழுது வீட்டில் செல்லப்பிராணி இருந்தால், அதனுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு மிகவும் ஆழமானதாக இருக்கும். குழந்தைகள் தன் செல்லப்பிராணியுடன் அழகாய் செலவிட்ட நிமிடங்களை புகைப்படமாக சேமித்து வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை! அது பின்னாளில் குழந்தைகளுக்கு தன் பிராணி நண்பனை நினைத்துப் பார்க்க உதவும்.

ரவி வர்மா!

ரவி வர்மா!

குழந்தைகள் அனைவருமே சிறு வயதில் வரைவதில் அதிக ஆர்வம் காட்டியவர்கள் தான்; பின்னாளில் தான் அந்த பழக்கம் மாறிப்போய் விடுகிறது. குழந்தைப்பருவத்தில் உங்கள் குழந்தை வரைவதை, அவர்கள் வரைந்த அழகு ஓவியங்களை நினைவலைகளாக பெற்றோர்கள் சேமிக்க வேண்டியது அவசியம்!

பலூன்!

பலூன்!

குழந்தைகளுக்கு வண்ண மயமான பலூன்களுடன் விளையாடுவது மிகவும் பிடித்த விஷயம்! அதிலும் பலூன்களை தலையணை போல் பயன்படுத்துவது, அது உடைந்ததும் பயம் கொள்வது போன்ற விஷயங்களை குழந்தைகள் செய்யும் பொழுது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

பப்புல்ஸ்

பப்புல்ஸ்

குழந்தைகள் பப்புல்ஸ் உடைத்து விளையாடுவதை மிகவும் விரும்புவர்; பெரியவர்கள் ஆனாலும் கூட இந்த பப்புல்ஸ் விளையாட்டின் மீதான ஆர்வம் என்றும் மறையாமல் நம்முடனேயே இருக்கிறது. ஆகையால் குழந்தைகள் பப்புல்ஸ் விட்டு விலையாடிய தருணங்களை சேகரித்த வையுங்கள் பெற்றோர்களே! அது பின்னாளில் அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, August 13, 2018, 12:30 [IST]
Desktop Bottom Promotion