Latest Updates
-
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா?
குழந்தைகளின் காதில் இருக்கும் அழுக்கை பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி?
குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் காதில் இருக்கும் அழுக்கை பாதுகாப்பாக சுத்தம் செய்வது எப்படி என இங்கு படிக்கலாம்.
குழந்தைகள் பிறந்த பின் அவர்களை வயிற்றில் இருக்கும் பொழுது பார்த்துக் கொண்டதை விட மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகள் பிறந்த பின்பு அவர்களால் அவர்கள் என்ன உணர்கிறார்கள், எங்கு வலிக்கிறது, எது என்னது போன்ற எந்த விஷயங்களும் தெரியாதவர்களாய், எதுவும் அறியாதவர்களாய் இருப்பார்கள். இந்த நிலையில் அவர்களை முழுவதுமாக கவனித்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை ஆகும்.

இந்த பதிப்பில் குழந்தைகளுக்கு காது வலி ஏற்பட்டால், காதிலிருந்து சீழ் வடிந்தால் என்ன செய்ய வேண்டும் என்று படித்து அறியலாம்.

காது மெழுகு
காதில் உள்ள சில சுரப்பிகள் இயர் வேக்ஸ் எனும் காது மெழுகினை சுரக்கும். இந்த மெழுகு எதற்கு சுரக்கப்படுகிறது என்றால், காதில் உள்ள இறந்த செல்களை அகற்ற மற்றும் மேலும் காதில் காணப்படும் தேவையற்ற செல்கள் மற்றும் செயல்படாத செல்களை வெளியேற்ற தான்.
வெளியிலிருந்து காதினுள் செல்லும் எந்த பொருட்களும், காதில் ஊற்றும் நீர் போன்ற பொருட்கள் காதில் உள்ள எலும்புகள், மெல்லிய தசைகள் மற்றும் சதைகளை பாதிக்கும் அபாயம் உண்டு; காதின் செயல்பாடுகளை கூட பாதிக்கலாம். இந்த அனைத்து பாதிப்புகளையும் தடுக்க காதில் சுரக்கப்படும் மெழுகு பயன்படுகிறது.

அளவு எவ்வளவு?
காதில் சுரக்கப்படும் மெழுகு ஒரு குறிப்பிட்ட அளவில் தான் இருக்க வேண்டும்; மெழுகின் அளவு அதிகமாகி விட்டால் அது தற்காலிக காது கேளாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் காதில் சுரக்கப்படும் மெழுகின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்ற அறிதல் இருக்க வேண்டும்.
இந்த காது மெழுகின் அளவு ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும்; இந்த காது மெழுகு அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மருத்துவரால் மட்டுமே சரியாக கூற முடியும்.

குழந்தைகளில் இந்த பிரச்சனை
குழந்தைகளுக்கு காது வலி ஏற்பட்டால் அல்லது காதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் குழந்தைகள் காதில் கையை வைத்துக் கொண்டு இருப்பர்; காதை இழுத்தல், காதினுள் விரலை விடுதல் போன்ற செயல்களை செய்து கொண்டு இருப்பர். குழந்தைகளுக்கு காது வலி அல்லது காதில் நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுதல் வேண்டும்.

கவனம் தேவை!
குழந்தைகளில் காதில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்வது என்பது மிக முக்கியமான விஷயம். பெற்றோர்கள் தெரியாத்தனமாக குழந்தையின் காதினுள் எங்கேனும் இடித்து விட்டால், அது பெரிய பிரச்சனையாக மாறலாம்; குழந்தைகளின் காதில் ஏற்படும் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய, குழந்தைகளால் நீங்கள் இடித்ததை கூட உங்களிடம் எடுத்து உரைக்க முடியாது. எனவே மிகவும் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு எப்படி சுத்தம் செய்வது?
குழந்தைகளின் காதில் இருக்கும் மெழுகை மருத்துவரிடம் காட்டி, அது சரியான அளவு என்றால் அப்படியே விட்டுவியொடுங்கள்; இதுவே மெழுகின் அளவு அதிகம் எனில், சுடுநீரில் ஒரு துண்டின் நுனியை தொட்டு, வெதுவெதுப்பான ஈரம் கொண்ட துணியை கொண்டு குழந்தையின் காதில் இருக்கும் அதிகப்படியான மெழுகின் அளவை மெதுவாக எங்கும் இடித்திடாமல் அகற்ற வேண்டும்.

இயர்டிராப்ஸ்
குழந்தைகளின் காதில் இருக்கும் அழுக்கை பட்ஸ் கொண்டு எடுப்பது நல்லதல்ல; காதின் உள்ளே விரலை விடுவதும் சரியான நடைமுறை அல்ல. குழந்தைகளின் காதில் இருக்கும் அழுக்கை நீக்க காது அழுக்கு நீக்கி - இயர் டிராப்ஸை பயன்படுத்தலாம். ஆனால் எந்தவொரு மருந்து பொருளையும், டிராப்ஸ் ஐட்டங்களையும் குழந்தைக்கு பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் கலந்து பேசி, தகுந்த உரையாடலின் பின்னர் பயன்படுத்தவும்.

பாதிப்பு ஏற்பட்டுவிட்டால்.?
குழந்தைகளின் காதில் அதிகப்படியான மெழுகின் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால், அந்த சமயத்தில் சில வீட்டு வைத்திய முறைகளை கூட நீங்கள் முயற்சித்து பார்க்கலாம். இந்த வீட்டு வைத்திய முறைகள் குழந்தையின் பிரச்சனையை தீர்க்க உதவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், எந்தவொரு வீட்டு வைத்திய முறையை குழந்தைக்கு பயன்படுத்தும் முன்னரும் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து விட்டு தான் பின்பற்ற வேண்டும்; அதுவே மிகவும் நல்ல முறை.

வீட்டு வைத்திய முறை
குழந்தைக்கு காதில் அதிகம் மெழுகு இருந்தால், அதனால் வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் அந்த சமயத்தில் ஒரு துணியை சூடேற்றிய உப்பு நீரில் முக்கியோ, குழந்தைக்கான எண்ணெயில் அமிழ்த்திய துணி, வினிகர், கிளிசரின், பேக்கிங் சோடா கலந்த நீர் போன்ற திரவங்களில் துணியை நனைத்து மெதுவாக குழந்தையின் காதில் இருக்கும் அழுக்குகளை அகற்ற வேண்டும்.

வேடிக்கை காட்டுங்கள்!
குழந்தைகளின் காதில் இருக்கும் அழுக்கை அல்லது அதிகப்படியான மெழுகை அகற்றும் பொழுது குழந்தைகளுக்கு நன்கு வேடிக்கை காட்டி, அவர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பும் வண்ணம் அவர்களை திசை திருப்பி விட்டு, அன்னையர்கள் குழந்தையின் காதில் இவருக்கும் அழுக்கை அகற்ற முயலலாம்.
மேலும் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு கூட அவர்தம் காதில் இருக்கும் அழுக்கை அகற்ற முயற்சி மேற்கொள்ளலாம். குழந்தைகளின் காதில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற உங்களுக்கு பயமாக இருந்தால், மருத்துவரிடம் கூட்டிச்சென்று சோதித்து மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் காதில் இருக்கும் அழுக்கை அகற்றி விடலாம்.



Click it and Unblock the Notifications











