Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கர்ப்ப காலத்தில் ஏன் பூண்டு சாப்பிடக்கூடாது?... சாப்பிட்டா என்ன ஆகும்?
குழந்தைக்கு பாதிப்பு ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. சில மூலிகைகளை உண்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
'இயற்கைக்குத் திரும்புவோம்' என்று எங்கு இயற்கையாக விளைந்த காய்கறிகள், உணவுப் பொருட்கள் கிடைக்கும் என்று எல்லோரும் அலையும் நாட்கள் இவை. ஆர்கானிக் கடைகள் எங்கும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், இந்த இயற்கை வைத்தியம் செய்யவும் மக்கள் விரும்புகின்றனர்.

ஆனால், சரியான வழிகாட்டல் இல்லாமல் மூலிகைகளை உண்பது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் மூலிகைகளால் சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கச் செய்து விடும். அதனால் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும்.

மூலிகைகள்
கருவுற்ற தாய்மார் இந்த விஷயத்தில் மிகவும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். சில மூலிகைகள் கருப்பை சுருங்குதலை தூண்டும். கர்ப்பப்பை சுருங்குவதால் கருச்சிதைவு, குறைபிரசவம் அல்லது கருவிலிருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. சில மூலிகைகளை உண்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இன்னும் சில பிறவி குறைபாடுகளை குழந்தைகளுக்கு உருவாக்கும்.
மூலிகைகள், மூலிகை பொடி, மாத்திரை மற்றும் காப்ஸ்யூல்கள் என்று பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் மூலிகைகளை எந்த வடிவிலும் எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடியும் உரிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் எவற்றையும் சாப்பிடக்கூடாது. சில மூலிகை தாவரங்களையும் அவை கருவுற்றிருக்கும் தாய்மாருக்கு கொடுக்கக்கூடிய பிரச்னைகளையும் கீழே காணலாம்.

கற்றாழை:
கர்ப்ப காலத்தில் கற்றாழையை எடுத்துக்கொள்வது கருச்சிதைவுக்கு அல்லது குழந்தைக்கு பிறவி குறைபாடு உண்டாவதற்கு வழி செய்யும். இது தவிர பொட்டாசியம் குறைபாடு, இருதய கோளாறு, தசை பெலவீனம் ஆகியவற்றையும் நாளடைவில் கொண்டு வரும்.

கிராம்பு:
கல்லீரலில் பிரச்னைகளை உருவாக்குவதோடு இரத்தக்கட்டு என்னும் இரத்தம் உறைதலுக்கும் கிராம்பு காரணமாகும். பெருஞ்சீரகம், சரும எரிச்சலை உண்டாக்கும்.

மல்லிகை:
இதுவும் கருப்பையை சுருங்கச் செய்து கருச்சிதைவு அல்லது குறைபிரசவத்திற்கு வழி செய்து விடும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.

இலவங்கப்பட்டை:
கல்லீரலில் நச்சுத்தன்மை சேர வழி வகுக்கும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.

வெள்ளைப்பூண்டு:
பூண்டு சேர்த்துக்கொள்வதும் கருப்பையை சுருங்கச் செய்யும். இது குறைபிரசவத்திற்கு காரணமாகும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.

லேடீஸ் மேண்டில்:
இதை அதிகமாக எடுத்துக் கொள்வது கல்லீரலில் நச்சுத்தன்மையை சேர்க்கும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.

ஸ்குவா வைன்:
கருப்பையை சுருங்கச் செய்து, கருச்சிதைவுக்கு வழி வகுக்கலாம் அல்லது குறித்த காலத்துக்கு முன்பாக பிரசவம் நடைபெற தூண்டக்கூடும்

ஆல்டர் பக்தார்ன்:
கர்ப்பிணிகளுக்கு வலியையும் குமட்டலையும் உருவாக்கக்கூடிய மூலிகை இது. அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும். பொங்கலுக்கு வாசலில் வைக்கப்படும் கூழைப்பூவோட பேரு தான் இது.

பார்பெர்ரி:
கருப்பையை அதிகமாக சுருங்க வைக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தை உருவாக்கும்.
ஆர்பர் விட்டே: வாந்தி, வலிப்பு, வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா மற்றும் கருச்சிதைவுக்கு இந்த மூலிகை காரணமாகும். இது வேற எதுவும் இல்லங்க. நம்ம ஊர் சரக்கொன்றை தான்.

நார்த்தங்காய்:
இருதய செயல்பாட்டில் கோளாறை உருவாக்கி, பக்கவாதத்தை கொண்டு வரும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.

பெத்ரூட்:
வயிற்றழைச்சலை உருவாக்கி கருச்சிதைவுக்கு காரணமாகும் அல்லது குறித்த காலத்துக்கு முன்பு பிரசவம் நிகழ காரணமாகி விடும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.

பென்னிராயல்:
புதினா இனச்செடியான இம்மூலிகை கல்லீரலுக்கும் சிறுநீரகங்களுக்கும் கேடு விளைவிக்கும். இரத்த வாந்தி, உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாகும். இரத்தக்கட்டு என்னும் இரத்த உறைதல் போன்ற பிரச்னைகளை உருவாக்கும்.
ஆரேகானா: கருப்பை சுருங்குதலை தூண்டி அதன் காரணமாக கருச்சிதைவு உண்டாக வழி செய்யும்.

மது அருந்துதல்
மேலே கூறப்பட்ட மூலிகைகள் தவிர்த்து தாய்மைப்பேறு காலத்தில் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் நரம்பு மண்டலத்தை தாக்கி, மனநிலை கோளாறுகளை உருவாக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஆகவே, பயன்தரும் மூலிகைகளானாலும் கர்ப்ப காலத்தில் அவற்றை தவிர்ப்பதே நல்லது. கர்ப்பகாலத்தில் கவனமாக இருந்து தாய்மைபேறடைய வாழ்த்துகள்!



Click it and Unblock the Notifications











