Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
குழந்தைக்கு ஏற்படும் சிரங்கு நோயின் தன்மையைக் குறைக்கும் எளிமையான வழிகள்!!!
எக்ஸிமா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கரப்பான், காளாஞ்சகப்படை, தேமல் என்று நாம் கேள்விப்படும் சில சரும நோய்களுள் எக்ஸிமாவும் ஒன்று. இது சிரங்கு என்று தமிழில் குறிப்பிடப்படும். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. வறண்ட சருமம், சிவந்து தடித்த சருமம், சொறிய சொறிய மேலும் மேலும் சொறியத் தூண்டும் அரிப்பு, இவை தான் எக்ஸிமாவின் அறிகுறிகள்.
இவ்வாறு குழந்தையின் தோல் வறண்டு, வெடிப்புற்று, அரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அதனைச் சரிசெய்து குழந்தையின் கஷ்டத்தைப் போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். அதிர்ஷ்டவசமாக, எக்சிமாவிற்கு நிவாரணம் தர நிறைய மருத்துவங்கள் உள்ளன. அம்முறைகளை இங்கே பார்ப்போம்.

அடிக்கடி குளிப்பாட்டவும்
குழந்தைக்கு எக்ஸிமா உள்ளது என அறிந்தால், தினந்தோறும் குளிப்பாட்ட வேண்டும் என்று அனைத்து குழந்தை தோல் நிபுணர்களும் பரிந்துரைப்பார்கள். அதிலும் தினந்தோறும் நிறைய தடவையோ குழந்தையை குளிப்பாட்டினால், தோலில் ஈரத்தன்மை இருந்து கொண்டே இருக்கும். இதனால், தோல் உலர்ந்தும், வறண்டும் போகாமலும் காக்கப்பட்டு, தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை விரட்டுகிறது.

வறட்சி ஏற்படுத்தாத சோப்புகள்
வாசனையில்லாத மென்மையான சோப்புகளையோ அல்லது சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தாத சோப்புக்களையோ பயன்படுத்த வேண்டும். குழந்தையை குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு குளிப்பாட்டவும். சருமத்திற்குள் ஈரம் தங்கியிருக்கும் வண்ணம் தட்டிக்கொடுக்க வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசரைத் தடவி விட வேண்டும்.

மாய்ஸ்சுரைசர்
சருமத்தின் வறட்சியையும், அரிப்பையும் இதப்படுத்தும் வண்ணம், குழந்தையின் சருமத்தின் மீது மாய்ஸ்சுரைசரை தினமும் இரண்டு முறையேனும் தடவ வேண்டும். வறண்ட சருமம் எக்ஸிமாவை மேலும் மோசமானதாக்கி, வீக்கத்தை அதிகப்படுத்தும். அதிகமான ஈரத்தன்மையுடைய லோஷன்களை விட, அடர்த்தியான மாய்ஸ்சுரைசிங் க்ரீம்கள் குழந்தையின் சருமத்தில் ஊடுருவி எக்ஸிமாவின் தீவிரத்தைக் குறைக்கும். அதிலும் மருத்துவர் அரிப்பு நீக்கும் க்ரீமைப் பரிந்துரைத்தால், அதனை மாய்ஸ்சுரைசரைத் தடவும் முன்பு சருமத்தின் மீது தடவ வேண்டும். காலநிலைக்குத் தக்கவாறு மாய்ஸ்சுரைசரை மாற்ற நினைத்தால், குளிரான காலநிலையில், பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட கிரீம்கள் ஏற்றவை. இந்த க்ரீம்கள், மிகவும் அடர்த்தியாக இருப்பதால், கோடைகாலத்திற்கு ஏற்றவையல்ல. வெப்பமான காலநிலையில், இதனை விட இலேசான க்ரீம்களே தகுந்தவை.

இயற்கைப் பொருள்களை ஒதுக்கி வைக்கவும்
தற்காலத்தில் ஆர்கானிக் மற்றும் இயற்கை மூலிகையினால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பொருள்கள் மிகவும் பிரசித்தமானவை. ஆனால் இத்தகைய பொருள்கள், மூலிகைகளையும் தாவரங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டவையாதலால், அவை குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாமல், அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றை ஒதுக்கிவிடுவது நல்லது.
பெரும்பாலான குழந்தைகளுக்கு, மலர்களின் வாசனை, தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் மருத்துவத் திரவியங்கள் அலர்ஜியை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளதால், குழந்தைகளின் சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்தாது என்று நிரூபிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பொருள்களின் பட்டியலை மருத்துவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நீர்த்த ப்ளீச் குளியலை மேற்கொள்ளவும்
மிதமான அல்லது தீவிரமான எக்ஸிமாவால் பாதிக்கப்பட்ட 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, நீர்த்த ப்ளீச் குளியலை அளிக்கலாம் என்று சில்வர்பெர்க் என்பவர் பரிந்துரைக்கிறார். குழந்தையின் சருமம் கடினத்தன்மை அடைந்திருந்தால் தான், இக்குளியல் மிகவும் பலன் தரும். எக்ஸிமாவைத் தோற்றுவிக்கும் ஸ்டாஃப் பாக்டீரியாவை ப்ளீச் அகற்றுகிறது. இதனால் ஆன்டி-பயாடிக் தேவையில்லை. எனினும் குழந்தைக்கு நீர்த்த ப்ளீச் குளியலை அளிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டும். அவரது அறிவுரை ஏதேனும் இருப்பின் அவற்றைப் பெற்றுக் கொண்டு மேற்கொள்ளவும்.
1 காலன் தண்ணீருக்கு, 1 தேக்கரண்டி ப்ளீச் பயன்படுத்துங்கள் அல்லது ஒரு முழு குளியல் தொட்டிக்கு, கால் கப் ப்ளீச் பயன்படுத்த வேண்டும்.

சொறிந்து கொள்வதை நிறுத்தவும்
குழந்தைகள் எக்ஸிமா பாதித்த சருமத்தினைச் சொறிந்து கொண்டு, அரிப்பை நிறுத்த முயற்சிப்பார்கள். இவ்வாறு சொறிந்து கொள்வதை நிறுத்துவதற்காக கைவிரல்களின் மீது அணியப்படும் உறைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது வளர்ந்த குழந்தைகளுக்கும், தளர்நடையினருக்கும் பயன் தராது. ஏனெனில் அவர்களுக்கு இவ்வுறையை அணிவிக்க முடியாது.

நகங்களை வெட்டி விடவும்
அரிப்பினால் குழந்தைகள் சொறிந்து கொள்வதைத் தடுக்க, அவர்களது கைவிரல் நகங்களை நகவெட்டி மூலம் வெட்டிவிட்டு, நகத்தின் கூர்மையை மழுங்கடித்து விட வேண்டும். குழந்தை வழக்கத்தை விட அதிகமாக சொறிந்து கொள்வதைக் கண்ணுற்றால், உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அரிப்புத் தடுப்பு க்ரீமை பரிந்துரைக்கச் செய்து வாங்கித் தடவவும்.



Click it and Unblock the Notifications