Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
குழந்தைகளது பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....

பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....
1. குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை ஊற்றி கொடுக்கும் முன், பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவி பின்னர் பாலை ஊற்றி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாட்டிலை சூடான தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் கொடுத்தால் பாட்டிலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். மேலும் பாட்டிலில் உள்ள மூடியை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அதுவே குழந்தையின் வாய்க்குள் செல்கிறது, அதன்மூலமே கிருமிகள் குழந்தையின் வாயில் செல்லும். ஆகவே அதனை நன்கு சூடான நீரில் கழுவிய பின்னர் கொடுக்க வேண்டும்.
2. எப்போது குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை கொடுக்கும் போதும், குழந்தைகளால் பால் முழுவதையும் குடிக்க முடியாது. ஏனெனில் அதன் வயிற்றானது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வளர்ச்சி அடையும். மேலும் குழந்தைகளால் எவ்வளவு பால் குடிக்க முடிகிறதோ, அவ்வளவு மட்டும் குடித்துவிடும். ஆகவே அந்த மீதிப் பாலை அப்படியே வைக்காமல், கொட்டிவிடவும். இல்லாவிட்டால் பாட்டிலில் பாக்டீரியா மற்றும் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும்.
3. பாட்டிலானது ஈரமாக இருந்தால் பாக்டீரியா மற்றும் கிருமிகள் தங்கிவிடும். ஆகவே முதலில் பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவியதும், குளிர்ந்த நீரிலும் சற்று கழுவ வேண்டும். பிறகு உடனடியாக ஒரு சுத்தமான துணியில் நன்கு துடைத்துவிட வேண்டும். அப்படி துடைக்காமல் கழுவி விட்டு, மூடி வைத்துவிட்டால் அந்த பாட்டிலில் தண்ணீர் அல்லது பால் நாற்றமானது அப்படியே இருக்கும்.
4. தினமும் பாட்டில் மூடியை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் சுடு தண்ணீரில் நன்கு பாட்டிலையும், பாட்டில் மூடியையும் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் பாட்டில் மூடியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேய்த்துக் கழுவலாம்.
ஆகவே குழந்தையின் பாட்டிலானது எப்போதும் சுத்தமாக, சரியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை குழந்தை பால் குடிக்கும் போது பாட்டிலை கீழே போட்டு விட்டால், சோம்பேறித்தனமாக இருக்காமல், பாட்டில் மூடியை மாற்றி கொடுங்கள்.



Click it and Unblock the Notifications
