Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
Exclusive: ஆட்டிசம் என்பது நோய் இல்லை.. குறைபாடுதான்..! விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன்..!
ஆட்டிசம் என்பது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால், சமூக இணக்கம், பேச்சு, நடத்தை, மனநலம், கூடி விளையாடுதல் போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படும். இந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பார்களாம்.. அப்படி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிவது எப்படி? அதற்கான அறிகுறிகள் என்னென்ன? எதனால் ஆட்டிசம் வருகிறது? அதனை சிகிச்சையின் மூலமாக சரிசெய்ய முடியுமா? என ஆட்டிசம் குறித்த பலவிதமான கேள்விகளுக்கு தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். பிரவீன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்டிசம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ஆட்டிசம் என்பது நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடுதான். நோய் அல்ல. இது மதியிறுக்கம் அல்லது மன இருக்கம் என்று சொல்லாம். ஆனால் சிலர் இதை ஒரு நோய் என்று நினைத்து அவர்களை ஒதுக்கி வைக்கின்றனர். அதற்கு அவசியம் இல்லை.. ஆட்டிசம் ஏற்பட்ட குழந்தைக்கு பேசுவதிலும், சமூகத்தில் மற்றவர்களுடன் கலந்து பழகுவதிலும் சிரமம் இருக்கும். ஆனால் அவர்களை பாகுபாடு செய்யாமல் அவர்களுக்கான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.. அவர்களிடம் சிறப்பான திறன்கள் இருக்கும்.. அந்த திறனை வளர்க்க பெற்றொர்கள் உதவ வேண்டும்.. இந்த குறைபாடு பெரும்பாலும் 1 முதல் 3 வயதிற்குள் கண்டறியப்படுகிறது” என்றார் மருத்துவர்.

ஆட்டிசம் பிறவியிலேயே வரக்கூடியதா? அல்லது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,” இது வளரிளம் பருவத்தில் வரும் குறைபாடாக இருக்காலம் அல்லது மரபணு காரணமாக இருக்கலாம். பொதுவாக இந்த குறைபாடு 3 வயதிற்கு முன்பே இருந்தால்தான் அது ஆட்டிசம் என்று சொல்ல முடியும். 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு குறைபாடுகள் இருந்தால் அது கண்டிப்பாக ஆட்டிசம் கிடையாது “ என்கிறார் டாக்டர்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், ”தடுப்பூசியினால் ஆட்டிசம் வருகிறது என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால் ஆட்டிசம் எந்தவிதமான தடுபூசியினாலும் வருவதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசியால் ஆட்டிசம் குறைபாடு வருவதற்குச் சாத்தியமில்லை என்றும் பல ஆராய்ச்சிகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன” என்று தெரிவித்தார்.
மேலும் பேசியவர், ”ஆட்டிசம் உள்ள குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் பழகினாலும் சேர்ந்து விளையாடினாலும் அவர்களுக்கும் அந்த குறைபாடு வந்துவிடும் என்ற கருத்து நம் சமூகத்தில் உள்ளது. அது முற்றிலும் தவறானது. ஆட்டிசம் நோயல்ல ஒருவிதமான குறைபாடுதான். அதனால் அது மற்ற குழந்தைகளுக்கு பரவாது. அவர்கள் எல்லோருடனும் சேர்ந்து விளையாடலாம் என்ற விழுப்புணர்வு அனைத்து பெற்றொர்களுக்கும் வேண்டும்” என்று டாக்டர் கூறினார்.
ஆட்டிசம் உள்ள குழந்தைகளிடம் முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களிடம் 2 முக்கியமான விஷயங்களை பார்க்க வேண்டும். முதலில் அவர்கள் சமூகத்தில் எப்படி உரையாடுகிறார்கள் அல்லது எப்படி பழகுகிறார்கள் என்பதாகும். இரண்டாவதாக , செய்த செயலையே திரும்பத் திரும்ப செய்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.. இந்த 2 விஷயங்களும் 3 வயது வரை தொடர்ந்தால் கண்டிப்பாக அது ஆட்டிசம் குறைபாடுதான் என கண்டறியலாம்" என்றார்.
அதன் பிறகு ஆட்டிசத்திற்கான அறிகுறிகள் என்ன? என்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர், ஏற்கனவே சொன்னது போல ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் ஒரே விதமான செய்கைகளை திரும்ப திரும்ப செய்வார்கள். பொம்மைகளை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒழுங்காக வைக்க விரும்புவது மற்றும் அதை மாற்றும் போது கோபம் கொள்வது. ஒரே வார்த்தைகள் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருப்பது. ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியே பொம்மைகளுடன் விளையாடுவது. ஒரே கலர் படுக்கையிலேயே உறங்குவது. தனிமையை அதிகமாக விரும்புவது. வித்தியாசமான முறையில் கைகளை வளைத்து, நெளித்து கொண்டே நடப்பது போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும் என்றார் டாக்டர் பிரவீன்..
அடுத்ததாக, ”வயதிற்கேற்ற வளர்ச்சி தவறுவது மிக முக்கியமான அறிகுறி என்றார். யாராவது பெயர் சொல்லி கூப்பிட்டால் உடனே திரும்பி பார்த்தல் முதல் ஊர்ந்து நடப்பது வரை, முதல் 2 ஆண்டுகளில் குழந்தைகளின் வளர்ச்சி வேகமாகவே இருக்கும். குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் மாதங்கள் போக போக அவர்களின் வளர்ச்சியில் உரிய முன்னேற்றம் இல்லாம இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதனை கவனித்து மருத்துவரிடம் அழைத்து செல்லுதல் அவசியம். அது ஆட்டிசத்தின் துவக்க அறிகுறியாக கூட இருக்கலாம் என்பதால் நிபுணரின் வழிகாட்டுதலை பெற வேண்டும்” என்று டாக்டர் கூறினார்.
இந்த ஆட்டிசம் குறைபாடு குறித்து மக்களுக்கு முக்கியமாக கூற வேண்டிய விஷயம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், விர்ச்சுவல் ஆட்டிசம், அதாவது ஸ்கிரீன் டைம் அதிகமாக பார்ப்பது. 2 வயதிற்கு குறைவான குழந்தைகள் அதிகமாக ஸ்கிரீன் பார்ப்பது என்பது கூடாது. அது மொபைலாக இருக்கலாம். டிவி, அல்லது லாப் டாபாக இருக்கலாம். இவை அனைத்துமே ஸ்கிரீன்தான். அப்படி குழந்தைகள் மொபைலோ அல்லது டிவியோ பார்க்கும் போது சரியாக பதில் சொல்லமாட்டார்கள். காரணம் அண்டஹ் ஸ்கிரீனிலேயே மூழ்கி போய்விடுகிறார்கள். அதனால் அது ஆட்டிசம் போன்ற நடத்தையை ஏற்படுத்துகிறது. இண்டஹ் செயல் தொடரும் போது சமூதாயத்தில் எப்படி உரையாட வேண்டும் என்பது குறித்து குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விடுகிறது. இதைதான் விர்ச்சுவல் ஆட்டிசம் என்கிறோம். இது குறித்து இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் விதிமுறைகளை வகுத்துள்ளதாக டாக்டர் கூறுகிறார்.
அதில், ”கண்டிப்பாக 2 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஸ்கிரீன் காட்டவேக்கூடாது. 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் 1 மணி நேரம் டிவியை பார்க்க அனுமதிக்கலாம். அதிலும் தொடர்ச்சியாக 1 மணி நேரம் காட்டக்கூடாது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை என டிவியை காட்டலாம். 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் 2 மணி நேரம் டியை பார்க்கலாம். 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நேரம் என்று ஒன்றும் இல்லை. ஆனால் அவர்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நன்றாக நேரம் செல்வழிக்கின்றார்களா? படிக்கிறார்களா? குறைந்தது 8 மணி நேரம் தூங்குகிறார்களா? என்பதை பொருத்து மீதி நேரத்தை போனோ அல்லது டிவியோ பார்த்துக் கொள்ளலாம். காரணம் இந்த ஸ்கிரீன் டைம் என்பது தற்போது ஆட்டிசத்திற்கான முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது” என்கிறார் மாருத்துவர்.
ஆட்டிசம் குறைபாட்டிற்கு என்ன மாதிரியான சிகிச்சை இருக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ”ஆட்டிசம் குறைபாட்டிற்கு சிகிச்சை என்று ஒன்றும் கிடையாது. மருத்து, மாத்திரைகள் மூலமாக இதனை சரிச்செய்ய முடியாது. இதற்கு தெரபிதான் உள்ளது. தெரபி மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும். முழுமையாக சரிச்செய்ய முடியாது..அதாவது குறைக்க முடியுமே தவிர குணப்படுத்த முடியாது. ஸ்பீச் தெரபி, Behavioural தெரபி, Occupational தெரபி, பிசியோதெரபி, என பல்துறை வல்லுனர்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை தேவைப்படும். முற்றிலுமாக தீர்க்க முடியாது என்றாலும், அறிகுறிகளின் தீவிரத்தை குறைத்து ஓரளவிற்கு இயல்பான வாழ்க்கையை வாழ வைக்க முடியும்” என்கிறார் மருத்துவர்.



Click it and Unblock the Notifications












