Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
தாத்தா ரஜினியை விட வளர்ந்த பேரன்.. பாட்டியை எப்படி கட்டிப் பிடிச்சிருக்காரு பாருங்க.. சோ க்யூட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் 9 நாளில் அவரது 75 வது பிறந்த நாளை டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாட உள்ளார். அவரது ரசிகர்கள் அவரது இந்த பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். தற்போது அவர் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவரது பேரன்கள், அவருக்கு மேல் வளர்ந்து நிற்கிறார்கள். அது இப்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்திற்கு சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது 56வது கோவா திரைப்பட திருவிழாவின் சார்பில் வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 50 ஆண்டுகளாக அவர் திரை உலகில் தொடர்ந்து செயல்பட்டதைப் பாராட்டி இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வாங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மொத்த குடும்பத்துடனும் கோவாவிற்கு சென்றிருந்தார்.

அதாவது, அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என அவரது மகள்கள், சௌந்தர்யாவின் கணவர் மற்றும் மகன், அதேபோல் ஐஸ்வர்யாவின் இரண்டு மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோருடன் சென்று விருதை வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ஏற்கனவே வெளியானது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் கோவா திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்டெண்டெட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் விருந்து வாங்கியதும், லால் சலாம் படம் திரையிடப்பட்டதும், ஒரே நாளில் நடைபெற்றதால் மொத்த குடும்பத்தினரும் திரைப்படத் திருவிழாவிற்குச் சென்றிருந்தனர்.
சூப்பர் ஸ்டார் விருது வாங்கச் சென்ற போது கோவாவில் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதைப் பார்த்த பலரும் சூப்பர் ஸ்டாரின் பேரன்கள் அவரது தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறார்கள். இதைப் பார்த்த பலரும் பேரன்கள் சூப்பர் ஸ்டாரை விட வளர்ந்து நிற்கிறார்களே என்றும், அதிலும் சௌந்தர்யாவின் இளைய மகன் லிங்கா, லதாவை கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கிறார். மொத்தமாக இந்த குடும்ப புகைப்படம் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. ரசிகர்களும் ரஜினி குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications
