Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
சாமானியர்கள் வாங்க முடியாத விலையில் தங்கம்!! ஒரு சவரன் ரூ.1.25 லட்சத்தை நெருங்கியது!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக சவரனுக்கு 2800 ரூபாய் விலை உயர்வு கண்டு சாமானிய மக்களை கலங்கடிக்க வைத்திருக்கிறது. கடந்த நான்கு வர்த்தக நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் கிராமுக்கு 350 ரூபாயும் சவரனுக்கு 2800 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.
சென்னையில் ஜனவரி 17ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து 13,280 ரூபாயாக இருந்தது. ஜனவரி 18ஆம் தேதி அன்று எந்த விலை மாற்றமும் இல்லை. ஜனவரி 19ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு 170 ரூபாய் விலை உயர்ந்து 13,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே ஜனவரி 20ஆம் தேதி ஆன நேற்று காலை, மாலை என இரண்டு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தின் விலை உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ஆபரண தங்கம் கிராமுக்கு 450 ரூபாய் விலை உயர்ந்து வரலாற்றிலேயே இல்லாத உச்சமாக 13,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் தங்கத்தின் விலை காலையிலேயே கிராமுக்கு 350 ரூபாய் விலை உயர்ந்து 14,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலை.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,250 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,42,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த நான்கு வர்த்தக நாளில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 1020 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது ஒரு சவரனுக்கு 8160 விலை உயர்வு கண்டிருக்கிறது. நான்கு நாட்களிலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு 8000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 382 ரூபாய் விலை 15,546 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் விலை 1.25 லட்சம் ரூபாயை எட்டிவிட்டது. 1,24, 368 ரூபாய்க்கும் 10 கிராம் 1, 55,460 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலையும் வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது. ஒரு கிராம் 11,890 ரூபாய்க்கும் ஒரு சவரன் 95,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கூடிய விரைவில் 18 கேரட் தங்கமும் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற விலையை எட்டி விடும் நிலைக்கு வந்திருக்கிறது.
இன்று பங்குச்சந்தை படுத்துக்க போகுது!! தங்கம் விலை எகிற போகுது!! அமெரிக்கா கொடுத்த சிக்னல்!!
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை இன்று வெள்ளி விலை ஒரு கிராம் 340 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலை உயர்வுக்கு கிரீன்லாந்து விவகாரமே முக்கிய காரணம். அமெரிக்கா அரசு கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 10 சதவீத வரியை விதித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கிரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துப் போகவில்லை என்றால் மேலும் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் விடுக்கும் வரிமிரட்டல்கள் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கம், வெள்ளியில் முதலீடு செய்கின்றனர் இதனால் உலக அளவில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்திருக்கிறது. இதுதான் இந்திய சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது. கிரீன்லாந்து விவகாரம் முடியும் வரை தங்கம், வெள்ளி விலை குறையாது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications