Latest Updates
-
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்! -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? -
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம்
கனகாவின் பரிதாப நிலைக்கு காரணமே அந்த யாகம் தானா? காட்டுத்தீபோல பரவிய வதந்தி.. பிரபலம்!
சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், பிரபு, விஜயகாந்த், மலையாளத்தில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து அந்த காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை நடிகை கனகா. அவர், திரையுலகை விட்டு விலகி, வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் வாழ்த்து வருகிறார். நடிகை கனகா குறித்து மருத்துவர் காந்தராஜ் பல விஷயத்தை பேசி உள்ளார்.
BBT Cinema youtube சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், கனகாவை விட கனகாவின் அம்மா தேவிகாவை எனக்கு நன்றாக தெரியும். அழகிலும், திறமையிலும் அவரை அடித்துக்கொள்ள அந்த காலத்தில் ஆளே இல்லை. அந்த அளவுக்கு சினிமாவில் அவர் கொடி கட்டி பறந்தார் தேவிகா. புகழின் உச்சியில் இருந்த தேவிகா, ஒரு உதவி இயக்குநர் தேவதாஸ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவரை தேவதாசை யார் என்றே தெரியாது. தேவிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் தேவதாஸ் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார்.

நடிகை கனகா: தேவதாசுக்கு பெரிதாக தொழில் எதுவும் தெரியாததால் தேவிகாவின் பணத்தை நம்பி தான் குடும்பம் நடத்தி வந்தார். இதுவே பின்னாளில் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த தம்பதிகளின் ஒரே ஒரு மகள் தான் கனகா. தேவிகாவிற்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை வர, இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின் தேவிகா கனகாவை மிகவும் சிரமப்பட்டு வளர்த்தார்.
ஆயுள் யாகம்: கனகாவை பற்றி அந்தகாலத்தில் பயங்கரமான ஒரு வதந்தி பரவியது. அது என்னவென்றால், தேவிகா தெலுங்கு டாப் நடிகர் ஒருவருடன் பல படத்தில் இணணைந்து நடித்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில், அந்த தெலுங்கு நடிகருக்கு ஆயுள் யாகம் செய்ய வேண்டி இருந்தது. அந்த யாகத்தின் ஒரு சடங்காக, பருவத்திற்கு வராத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அப்படி திருமணம் செய்து கொண்டால், அந்த தெலுங்கு நடிகரின் ஆயுள் நன்றாக இருக்கும் என்று யாகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது தான் தேவிகா தன்னுடைய மகள் கனகாவை அந்த யாகத்திற்கு அனுப்பி இருக்கிறார். அந்த யாகத்தில் அந்த தெலுங்கு நடிகர் கனகாவின் கழுத்தில் தாலி கட்டியதாக சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் இது மிகப்பெரிய வதந்திய பரவியது. அது உண்மையா? பொய்யா? என யாருக்கும் தெரியாது. ஆனால், இதன் மூலமாக தான் கனகா மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது என்றார்.
மனஅழுத்தம்: தொடர்ந்து பேசிய காந்தராஜ், கனகாவும் அம்மாவைப் போல திறமையான நடிகை தான். முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். கனகா நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. அதன் பின் இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் ஜோடி போட்டு நடித்தார். அந்த அளவுக்கு புகழில் உச்சிக்கு சென்றார் நடிகை கனகா. ஆனால், யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் யார் அவர் என்று எந்த விவரமும் யாருக்குமே தெரியவில்லை. அம்மா இறந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வராமல் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று காந்தராஜ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications