Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
தங்கம் சவரன் ரூ.1.10 லட்சத்தை கடந்தது!! 2 நாட்களில் 3 முறை விலை உயர்வு!! எல்லா புகழும் டிரம்புக்கே!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சென்னையில் இன்று காலை தான் தங்கம் விலை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. இந்நிலையில் மாலையும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,10,000 ரூபாயை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் இன்று காலை ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்த 13,610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு சவரன் தங்கம் 1,08,880 ரூபாய் என புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில் மாலையிலும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. காலை 13,610 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் தற்போது 13,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 13,900 ரூபாய் என வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,11,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 8 மணி நேரத்திலேயே கிராமுக்கு 290 ரூபாய் விலை உயர்ந்து இருக்கிறது. சவரனுக்கு 2,320 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் தற்போது வரை மூன்று முறை தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை 170 ரூபாய், இன்று காலை 160 ரூபாய், தற்போது 290 ரூபாய் என தங்கத்தின் விலை கிராமுக்கு 620 ரூபாயும் ஒரு சவரனுக்கு 4960 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.
ஆபரண தங்கத்தின் விலை இரண்டே நாட்களில் சவரனுக்கு 5000 ரூபாய் வரை விலை உயர்வு கண்டிருக்கிறது. இது சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைப்பதாக மாறி இருக்கிறது. ஏற்கனவே தங்கம் சவரன் 1 லட்சத்தை கடந்ததையே மக்களால் ஏற்க முடியவில்லை இந்த நிலையில் 1.10 லட்சத்தை கடந்துள்ளது. அப்படி என்றால் ஒரு சவரனுக்கு நகை வாங்க வேண்டும் என்றால் மக்கள் 1.40 லட்சம் வரை செலவிட வேண்டி இருக்கும்.
2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!
சென்னையில் ஆபரண தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. இன்று காலை 330 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி மாலை 10 ரூபாய் விலை உயர்ந்து 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது வெள்ளி ஒரு கிலோ 3,40,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி பொறுத்தவரை நேற்று காலையில் இருந்து தற்போது வரை மூன்று முறை விலை உயர்வு கண்டிருக்கிறது ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 30 ஆயிரம் ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.
அமெரிக்கா டாலருக்கு குட் பை சொல்ல தயாராகும் இந்தியா!! ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான யோசனை
உலக காரணிகளே தங்கம், வெள்ளி விலையை இப்படி வரலாறு காணாத உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன. கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். இதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே டிரம்ப் இறக்குமதி வரியை விதித்தார். திடீரென வெனிசுலா, கிரீன்லாந்து, கனடா நாடுகளை அமெரிக்காவுக்கு சொந்தமான இடங்கள் என கூறி புதிய ஏஐ வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளார். டிரம்பின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து தங்கம், வெள்ளியை நோக்கி முதலீட்டாளர்களை தள்ளுகின்றன. இதுவே இவற்றின் விலை உயர்வுக்கு காரணம்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications
