Latest Updates
-
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கவலை அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்...! -
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்..
2025 ஆம் ஆண்டில் நடந்த மறக்க முடியாத சில பயங்கரவாத தாக்குல்கள்!
Year Ender 2025: நாம் தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்த ஆண்டில் பல்வேறு காரணங்களால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களால் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே இயற்கை பேரழிவுகளால் மக்கள் ஒருபுறம் இறந்து வரும் அதே வேளையில் மறுபுறம் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி மக்களின் உயிரைப் பறித்துவருகின்றனர். முக்கியமாக இந்தியா, பாகிஸ்தானில் தான் ஏராளமான தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் மறக்க முடியாத மற்றும் உலகையே உலுக்கிய சில மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குல் சம்பவங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே 2025 ஆம் ஆண்டின் நவம்பர் 10 ஆம் தேதி ஒரு பெரிய கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த குண்டுவெடிப்பால் சுமார் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கொடிய சம்பவமானது இந்திய அரசாங்கத்தால் ஒரு பயங்கரவாத செயலாக வகைப்படுத்தப்பட்டதோடு, தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை செய்து வருகிறது.
2. இஸ்லாமாபாத் தற்கொலை குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிதுறை வளாகத்திற்கு வெளியே 2025 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் தாக்குதலை நடத்தியவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் இணைந்த தீவிரவாதக் குழுவான ஜமாத்-உல்-அஹ்ரார் தான் காரணமென கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் நடந்த மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதலாகும்.
3. கோமண்டா படுகொலை
காங்கோ ஜனநாயக குடியரசின் இடூரி மாகாணத்தில் உள்ள கோமண்டாவில் 2025 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இரவு நேரத்தில் இஸ்லாமிய அரசின் கூட்டணி ஜனநாயகப் படையுடன் இணைந்த கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களைத் தாக்கினர். இந்த தாக்குதலில் சுமார் 43 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்கும். மேலும் இந்த தாக்குதலால் ஏராளமானோர் காயமடைந்தனர்.
4. குஜ்தார் பள்ளி பேருந்து குண்டுவெடிப்பு
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் குஜ்தாரில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை பள்ளி பேருந்தின் மீது மோதி தாக்குதலை நடத்தினார். அதில் 11 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் 53 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்தியதாக கூறப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது மிகவும் கொடூரமான ஒன்றாகும்.
5. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சுற்றுலாத் தளமான பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரு திடீர் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலானது சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் என்னும் நடவடிக்கையை எடுத்தது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











