Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் வெற்றியையும், பணத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள்
2023-ல் இந்தியாவை உலுக்கிய சில பயங்கரமான குற்ற வழக்குகள்.. இதயம் பலவீனமானவங்க படிக்காதீங்க..
Year Ender 2023: ஒருவரைக் கொல்வது என்பது கொடூரமான குற்றமாகும். ஆனால் இந்த மாதிரியான குற்றங்கள் நாட்டில் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் சில கொலைகள் மிகவும் கொடூரமாகவும், ஒருவரை உறைய வைக்கும் படியும் இருக்கும். முக்கியாக சீரியல் கில்லர்கள், கொடுமை செய்து கொல்வது, சிதைப்பது அல்லது நரமாமிசம் போன்ற வழக்குகள் மிகவும் பயங்கரமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டிலும் மறக்க முடியாத அளவில் ஒருசில இப்படியான கொலை வழக்குகள் இருக்கும். அந்த வகையில் தற்போது நாம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் புத்தாண்டில் நுழைந்துவிடும். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த உறைய வைக்கும், மறக்க முடியாத கொடூரமான சில கொலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. டெல்லி கஞ்சவாலா கொலை
2023 ஆம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை சுல்தான்புரியில் 20 வயதை சேர்ந்த அஞ்சலி குமாரி தனது நண்பருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, கிரே நிற மாருதி சுஸுகி பலேனோ மோதியது. அந்த காரில் ஐவர் இருந்தனர். விபத்தின் போது அஞ்சலி குமாரி காரின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டார்.
அந்த காரில் உள்ளோர் சுமார் 2 மணிநேரம், அதாவது குறைந்தது 14 கி.மீ அவரது உடலை இழுத்துச் சென்றுள்ளனர். அதனால் அஞ்சலியின் உடல் சிதைந்து போனது. சிதைந்த நிலையில் உள்ள அப்பெண்ணின் உடலானது உள்ளூர்வாசிகளால் டெல்லியின் கஞ்சவாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால், அப்பெண் காரில் சிக்கியிருப்பது குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கும் தெரியவில்லை.
2. நிக்கி யாதவ் கொலை
டெல்லியைச் சேர்ந்த நிக்கி யாதவ் என்ற பெண், தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் 2023-ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2023 பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு நிக்கி யாதவ் அவரது காதலரான சாஹில் கெஹ்லாட் என்பவரால் காரில் கொல்லப்பட்டார்.
பின் அவரது உடலை சாஹில் தனக்கு சொந்தமான ஹோட்டலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். காதலியை கொலை செய்து விட்டு, அதே நாளில் வேறு ஒரு பெண்ணையும் சாஹில் திருணம் செய்து கொண்டார். இதுக்குறித்து போலீஸ் விசாரித்த போது, சாஹிலுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்திருப்பதால், காதலியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
3. உமேஷ் பால் கொலை
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பிஎஸ்பி எம்எல்ஏ ராஜு பால் 2005 கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பிரயாக்ராஜில் உள்ள உமேஷ் பாலின் இல்லத்திற்கு வெளியே நடந்த இந்த தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொலையுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டாலும், சிலர் தலைமறைவாக உள்ளனர்.
4. மும்பை மீரா ரோடு கொலை
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பைக்கு அருகில் உள்ள மீரா சாலையில் இருக்கும் குடியிருப்பில், ஒரு கொடூரமான கொலை நடந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது என்னவெனில் 32 வயதான பெண் ஒருவர் மனோஜ் சானே என்னும் தனது லிவ்-இன் துணையால் துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அதுவும் அவரது உடலை மனோஜ் சானே டஜன் கணக்கான துண்டுகளாக வெட்டி, 3 வாளிகள் மற்றும் பாத்திரங்களில் வைத்து சமையலறையில் வைத்திருந்தார். மேலும் அவரது சில உடல் துண்டுகளை வேக வைத்தும், அரைத்தும் ரகசியமாக வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாரிடம் அந்த குடியிருப்பின் உள்ளோர் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து பார்த்தபோது, அவரது உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மனோஜை கைது செய்தனர்.
5. நீதிமன்ற அறையில் கொலை
2023 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி கிரிமினல் பாதாள உலகத்தின் முக்கிய நபரான சஞ்சீவ் ஜீவா லக்னோ நீதிமன்ற அறைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி விஜய் யாதவ், வழக்கறிஞர் போல் மாறுவேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்து, நீதிபதி மற்றும் நீதிமன்ற பணியாளர்களின் முன் ஜீவா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
6. சனா கான் கொலை
பல மாதங்களாக காணாமல் போன பாஜகவின் மகாராஷ்டிரா பிரிவின் சிறுபான்மை பிரிவு தலைவர் சனா கான், அவரது கணவர் அமித் என்ற பப்பு சாஹூவால் படுகொலை செய்யப்பட்டார். சனாவுக்கும், அமித்துக்கும் நீண்ட நாட்களாக பணம் தொடர்பான தகராறு இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அமித்தை சந்திக்க சனா மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்குச் சென்றார். 2 நாட்களில் வீட்டிற்கு திரும்பிவிடுவதாக இருந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. அப்போது சனாவுக்கும், அமித்துக்கும் இடையே பண பரிவர்த்தனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
போலீசாரின் தீவிர விவாரணையில் சனா கானை கொலை செய்ததை அமித் ஒப்புக்கொண்டார். அதுவும் சனாவை தனது சொந்த வீட்டில் வைத்து தாக்கியதாகவும், அதனால் அவர் மரணமடைந்ததாகவும் கூறினார். பின்னர் ஜபல்பூரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிரன் ஆற்றில் அவரது உடலை வீசி அப்புறப்படுத்தியுள்ளார்.



Click it and Unblock the Notifications