Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த ஒரு கிரகத்தில் மட்டும் எந்த நாட்டினாலும் நுழைய முடியவில்லையாம் - அது ஏன் தெரியுமா?
மனிதன் அறியாத பல விஷயங்களை கண்டுபிடித்து, அதைப் பற்றி ஆராய்ந்து காரணத்தை அறியும் காலகட்டத்தில் தற்போது இருக்கிறோம். அதுவும் சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டும் மனிதனால் உயிர் வாழத் தேவையான அனைத்து வளங்களும் உள்ளன. ஆனால் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு தான் நமது இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் சந்திரனில் இதுவரை யாராலும் தரையிறக்க முடியாத பகுதியில் வெற்றிகரமாக ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இது தவிர சூரியனுக்கும் நமது விஞ்ஞானிகள் விண்கலத்தை அனுப்பியுள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை அனுப்ப முடியாத அளவில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் உள்ளது என்பது தெரியுமா? அது தான் சனி. சரி, எதனால் சனி கிரகத்தில் மட்டும் யாராலும் தரையிறங்க முடியவில்லை என்று தெரியுமா? இதுக்குறித்து இப்போது விரிவாக காண்போம்.
சனி கிரகம்
நாம் எவ்வளவு ஆண்டுகள் பிரபஞ்சத்தில் வாழ்ந்து, பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இன்னமும் மிகப்பெரிய புதிர் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. என்ன தான் சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகில் இருக்கும் பல கிரகங்களுக்கும் விண்கலத்தை அனுப்பி, அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், சூரிய மண்டலத்தில் 6 ஆவது கிரகமாக இருக்கும் சனியில் மட்டும் யாராலும் தரையிறங்க முடியவில்லை.
கிரகங்களில் செவ்வாய் ஒரு மிகப்பெரிய சிவப்பு நிற கிரகம். ஆனால் அப்படிப்பட்ட செவ்வாயில் நுழைய முடிந்த நம்மால், சனி கிரகத்தில் மட்டும் நுழைய முடியவில்லை. அது எதனால் என்று தெரியுமா?
காரணங்கள்
சனி கிரகமானது முற்றிலும் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களால் ஆனது. மேலும் இது அம்மோனியா, நீர், மீத்தேன் போன்றவற்றின் கலவையும் கூட. இந்த கிரகத்திற்குள் நாம் நுழைந்தால், அங்குள்ள வாயுக்கள் அழுத்தம் காரணமாக திரவமாகின்றன. மற்றொரு காரணம் அதன் அழுத்தம் மற்றும் வெப்பநிலையும் ஆகும்.
பொதுவாக பூமியின் வளிமண்டல அழுத்தம் 1 பார் என கணக்கிடப்படுகிறது. ஆனால் சனியின் வளிமண்டல அழுத்தம் 1 மில்லியன் பார். எனவே இங்கு மனிதன் சென்றால், கொதித்துப் போவான் என அறிக்கைகள் கூறுகின்றன.
சனி கிரகத்தின் ஆரம் 58,232 கிமீ ஆகும். இது பூமியை விட 9 மடங்கு அகலம் கொண்டது. இந்த கிரகத்தில் ஒரு நாளானது 10.7 மணிநேரம் மட்டுமே நீடிக்கும். இது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களிலும் இரண்டாவது குறுகிய நாளைக் கொண்ட கிரகமாகும். சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர 29.4 பூமி ஆண்டுகள் ஆகும்.
மேலும் சூரிய குடும்பத்திலேயே மற்ற கிரகங்களை விட சனி தான் அதிக நிலவுகளை கொண்டுள்ளது. முக்கியமாக சனி கிரகத்தின் தனித்துவமான விஷம், அதன் வளையங்கள் தான். இந்த வளையங்கள் வால்மீன்கள், சிறு கோள்கள் மற்றும் சிதைந்த நிலவுகளால் ஆனதாக கூறுப்படுகிறது.



Click it and Unblock the Notifications