Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் யார் தெரியுமா?
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்யவுள்ளார். இவர் ஆங்கர் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் அவார்.
ராதிகா மெர்ச்சன்ட் குஜராத் மாநிலம் கட்ச் நகரை பூர்வீகமாக கொண்டவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தான். இந்த நகரில்தான் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். மேற்படிப்பிற்காக நியூயார்க் சென்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு அஞ்சலி மெர்ச்சன்ட் என்ற சகோதரியும் உள்ளார்.

தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ராதிகா ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனமான இஸ்ப்ரவா குழுவிலில் (Isprava Groupல்) 2017ல் சேர்ந்தார். ராதிகா தற்போது என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார். மேலும் தனது குடும்பத்தின் தொழில் தொடர்பான விஷயங்களிலும் பங்களிப்பை செலுத்தி வருகிறார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
பரத நாட்டியத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக குரு பாவனா என்பவரிடம் பயிற்சி எடுத்தார். நடன பயிற்சி முடிந்தவுடன் ராதிகாவின் அரங்கேற்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
ராதிகாவின் அரங்கேற்றமானது மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடைப்பெற்றது. ராதிகாவின் பெற்றோர், முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானி ஆகியோர் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
சமூக மாற்றத்திற்கான பணிகள் மீது ஆர்வம் கொண்டவர். தொழில் துறையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர். உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் தீவிரம் காட்டுபவர். இவர் மும்பையில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு சொந்தமாக விலை உயர்ந்த கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் முகேஷ் அம்பானியுடன் ராதிகா மெர்சண்ட் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அம்பானியின் 2வது மகன் ஆனந்த் அம்பானி தனது குழந்தைப் பருவ காதலியான ராதிகா மெமெர்ச்சன்ட்- ஐ திருமணம் செய்து கொண்டார்.. ஆனந்த் அம்பானியை திருமணம் செய்ததினால் மிகவும் பிரபலமான மற்றும் பொது கொண்டாட்டத்தின் நட்சத்திரமாக ராதிகா இருக்கிறார்..
அம்பானி குடும்பத்திற்கு நடந்து முடிந்த திருமணங்கள்..
டிசம்பர் 2018 இல், ஆனந்தின் சகோதரி இஷா கோடீஸ்வரரான அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமாலை மணந்தார், மேலும் அவர்களது திருமணத்தில் பாப் ஐகான் பியோன்ஸின் நிகழ்ச்சி இடம்பெற்றது. ஒரு வருடம் கழித்து, அனந்தின் சகோதரர் ஆகாஷ் ஷ்லோகா மேத்தாவை திருமணம் செய்து கொண்டார், பிரிட்டிஷ் இசைக்குழு கோல்ட்ப்ளே மூலம் தலைப்பு பொழுதுபோக்கையும் வழங்கினார். அம்பானி வீட்டு விஷேசங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளில்தான் நடைபெறுகிறது...



Click it and Unblock the Notifications
