Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சனி வக்கிர பெயர்ச்சி 2024 எப்போது? அதன் தாக்கம் சுபமா? அசுபமா?
நவ கிரகங்களில் ஒன்பதாவது கிரகம் சனி கிரகம். சனிபகவான் நீதிமான். இவர் அரசனை மட்டும் இல்லை அனைத்து மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த அமைச்சரின் சிபாரிசும் எடுப்படாது. சிவனா இருந்தாலும் எமானாக இருந்தாலும் எவனாக இருந்தாலும் சனியின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
எல்லோருக்கும் ஒரே தீர்ப்புதான். அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுவார். சனி பகவான் எல்லாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார். அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகள் நடைபெறப்போகிறது. சனி பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

சனி வக்ரப் பெயர்ச்சி என்றால் என்ன?
சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் தங்கி இருந்து, 12 ராசிகளுக்கான பலன்களை தரக்கூடியவர். இந்நிலையில் இவர் இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சில முறை வக்ர பெயர்ச்சி என்று சொல்லப்படும் பின்னோக்கி நகரும் மற்றும் மீண்டும் நேராக நகர்தல் என தன் இயக்கத்தைக் கொண்டிருப்பார்.
சனி வக்ர பெயர்ச்சி எப்போது?
வேத ஜோதிடத்தின்படி, கிரங்கள் அவ்வப்போது வக்ர நிலையிலும், வக்ர நிவர்த்தி பெயர்ச்சியும் அடையும். இது மனித வாழ்விலும் பூமியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி வருகிற ஜூன் 30ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார், அதாவது எதிர் திசையில் நகரப் போகிறார். இந்த நிகழ்வானது ஜூன் 30 ஆம் தேதி இரவு 12:35 மணிக்கு சனியின் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நடக்கப் போகிறது. நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில் வக்ர நிலையில்தான் பயணிப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கும். அதாவது இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம்.
சனி பகவான் தற்பொழுது கும்ப ராசியில் உள்ள கடைசி நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பின்னர் நவம்பர் 15ஆம் தேதி, மீண்டும் நேராக பயணிக்க உள்ளார். இப்படி வக்ர நிலையில் சுமார் 139 நாட்கள் சனி பகவான் பயணிக்கவுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் 2023 ஆம் ஆண்டு முதலாக பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவாது ஜூன் 30 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார்.
சனி வக்ரமாவதால் அதன் தாக்கம் சுபமா? அசுபமா?
சனி வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது. மேலும் நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது சனி வக்ரமாவதால் மேஷம், மிதுனம், மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.மேலும் பணிபுரியும் இடத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப பலன்களைப் பெறலாம். மேலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்நேரத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். அதே நேரத்தில், இந்த நேரத்தில் வணிகர்கள் நல்ல லாபம் பெறலாம். புதிய ஒப்பந்ததை பெறலாம். இப்படியாக அதிகமான சுப பலன்கள் கிடைக்க போகிறது.



Click it and Unblock the Notifications