Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்
ஆடி பெருக்கு 2024 எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது?
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18ஆம் நாளாகும்.. இந்த நாளை தமிழகர்கள் ஆடி 18 என்று பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கிராம பகுதிகளில் இதனை விவசாயிகள் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர்.
அதற்கு காராணம் கரெக்டாக வருடா வருடம் ஆடி மாதம் 18ஆம் நாள் நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது..

ஆடிப்பெருக்கு 2024 எப்போது?
தமிழ்க மக்களால் கொண்டாப்படும் ஆடிப் பெருக்கு 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது. அன்று பிற்பகல் வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் வருகிறது. அன்று காலை 7.45 முதல் 8.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. மாலையில் 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரம் உள்ளது. அதன் பிறகு அமாவாசை திதி துவங்கி விடுகிறது. இது முன்னோர் வழிபாட்டிற்குரிய ஆடி அமாவாசை தினம் ஆகும். சனிக்கிழமை என்பதால் காலை 9 முதல் 10.30 வரையிலான நேரம் ராகு கால நேரமாகவும், பகல் 01.30 முதல் 3 மணி வரையிலான நேரம் எமகண்ட நேரமாகவும் உள்ளது. எனவே காலை 9 மணிக்குள் வழிபாட்டினை முடித்தால் சிறப்பு..
ஆடிப் பெருக்கு கொண்டாட காரணம் என்ன?
ஆடி 18ல் விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தங்களது கைகளால் தொட்டு வணங்கி வரவேற்ப்பார்கள்.. அதன் பிறகு தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முதுமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இந்த முதுமொழி விவசாயிகள் செய்யும் வேலையை அடிப்படையாக கொண்டே சொல்லப்பட்டது.. ஆடியில் நெல் விதைத்தால், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால் விவசாயத்திற்கு தேவையான நீர் குறைவில்லாமல் கிடைக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் தென் மாவட்டங்களில் காவிரி ஆற்றினை தங்கள் வீட்டு பெண்ணாக பாவித்து, ஆடிப் பெருக்கு அன்று சீர் படைத்து வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது.. மேலும் ஆடிப் பெருக்கு அன்று நீர் நிலைகளுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், மங்கலங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆடி பெருக்கு வழிப்படும் முறைகள் என்ன?
மக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆறு பாயும் கரையோர பகுதிகளுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள படித்துறைகளில் அமர்ந்து, பூ, பழம், பொங்களல் வைத்து காவிரி தாயை வணங்குவார்கள்.. அங்கு அமைக்கப்பட்டுள்ள படித்துறைகளின் எண்ணிக்கை 18 படிகள் கொண்டதாக இருக்கும். மேலும் ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இப்படி ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாத மக்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரி தாயை, மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடலாம்..
பலன்கள்
ஆடி பெருக்கு நாளில் விரதம் இருந்து வழிபட்டால் திருமண ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று தாலி பெருக்கி போடுவார்கள்.. சுமங்கலி பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்பது நம்பிக்கை.



Click it and Unblock the Notifications