Latest Updates
-
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம்
ஒரு வேளை நம்ம பூமி கிழக்கில் இருந்து மேற்காக மாறி சுற்றினால் என்ன நடக்கும்-னு தெரியுமா?
What If Earth Rotates in Reverse: இந்த பிரபஞ்சமே ஒரு அதிசயமானது. நாம் அதிசயப்படும் வகையில் பல நிகழ்வுகள் இன்னமும் இந்த பூமியில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. நாம் இன்னமும் இந்த பூமியில் வாழ்வதற்கு இந்த நிகழ்வுகளும் ஒரு காரணமாகும். தினமும் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது. இதனால் தான் பகல் மற்றும் இரவு என்பது மாறி மாறி வருகிறது.
இதே மாதிரி நம்முடைய பூமியும் சூரியனை சுற்றிக் கொண்டே வருகிறது. இப்படி தினசரி நடக்கும் நிகழ்வில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் என்னவாகும். அந்த வகையில் ஒரு வேளை பூமி மாற்றி சுற்றினால் என்னவாகும் என்று என்றாவது யோசித்து இருக்கீங்களா? பூமி சுற்றுவதில் தலைகீழ் நிலைமை ஏற்பட்டால் என்னவாகும் வாங்க பார்க்கலாம்.

பூமி சுற்றும் முறை
பூமி அதன் சொந்த அச்சில் சுழன்று கொண்டு வருகிறது. பூமி தனது ஒரு சுழற்சியை முடிக்க கிட்டத்தட்ட 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். பூமி கிட்டத்தட்ட 460 மீ/வி வேகத்தில் சுற்றி வருகிறது. அதாவது பூமத்திய ரேகையை வைத்து பார்க்கும் போது மணிக்கு 1650 கி. மீ ஆகும்.
ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியின் சுழற்சி வேகமானது குறைந்து கொண்டே வருகிறது. முன்பிருந்ததை விட தற்போது அதன் வேகமானது 1.7 மில்லி விநாடிகள் மெதுவாக உள்ளது. ஆனால் நம்முடைய பூமி அதன் சுழற்சியை நிறுத்த கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமி சுற்றுவதில் தலைகீழ் மாற்றம்
ஒரு வேளை நம்ம பூமி கிழக்கில் இருந்து மேற்காக சுற்றினால் பெரும் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் அறிஞர்கள். பூமியின் சுழற்சியின் தலைகீழ் மாற்றத்தால் வளிமண்டல நிலைகள் கடுமையாக மாறும். சூப்பர்சோனிக் காற்று மற்றும் புயல்களால் நம் கிரகம் அழியக்கூடும். பூமியின் சுழற்சியில் ஏற்படும் பெரிய மாற்றம் பெருங்கடலில் சுனாமி பேரலைகளை தூண்டி பேரழிவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் நிலைகளில் ஏற்படும் பெரிய மாற்றம் பல உயிரினங்களில் அழிவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்புகளையுமே சீர்குலைக்கும்.
சூரியன் உதிக்கும் திசை மாறும்
பூமி சுற்றுவதில் மாற்றம் ஏற்பட்டால் சூரியன் மேற்கிலிருந்து உதிக்கத் தொடங்கும். இதனால் பூமியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டாகும். இதனால் காற்றின் திசையும் தலைகீழாக மாறக் கூடும். இது கடல் நீரோட்டங்களில் மாற்றத்தை உண்டாக்கும். வறட்சி ஏற்படும். வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பசுமையான காடுகள் படிப்படியாக பாலைவனமாக மாறும். அதே நேரத்தில் சஹாரா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பசுமை சூழ்ந்த சூழல் நிலவும். காற்று வீசுவதில் மாற்றம் ஏற்படுவதால் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மற்ற பகுதிகளில் குளிர்வான நிலை
கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு சீனா பகுதிகளில் குளிர்ந்த காலநிலை நிலவ வாய்ப்பு உள்ளது. மேலும் பாலைவனத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படும் நிலை ஏற்படலாம். பருவமழையில் மாற்றம் ஏற்படும். கடலோரப் பகுதிகளைத் தவிர வேறு பகுதியில் பருவமழை வராமல் போக வாய்ப்பு உள்ளது. சில கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.
இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ள 4-5 மாநிலங்களில் வானிலை வேகமாக மாற வாய்ப்பு உள்ளது. பூமிக்கடியில் பொதிந்து கிடக்கும் வளங்கள் எல்லாமே வெளியே வர ஆரம்பிக்கும். எங்கும் வறட்சி காணப்படுவதால் பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது.
மண்ணின் மேற்பரப்பு வளங்கள் குறைய ஆரம்பிக்கும். இதனால் பூல் பூண்டு கூட வளராத நிலை ஏற்படலாம். வானிலையும் குளிர்ச்சியாக மாறும். இதனால் விலங்குகள் மற்றும் பறவைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அழிந்து போகும். பூமியின் ஈர்ப்பு விசையிலும் பல மாற்றங்கள் நிகழும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அட்லாண்டிக் பகுதிகள்
வடக்கு அட்லாண்டிக் போன்ற மற்ற பகுதிகளில் வெப்பநிலையானது சுமார் 10 டிகிரி குறைய ஆரம்பிக்கும். இதனால் மழை பொழியும் முறைகளும் மாறும். பாலைவனங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு அங்கு தாவரங்கள் வளரத் துவங்கும்.
கோரியோலிஸ் விளைவுகள்
பெருங்கடல் மற்றும் வானிலை செயல்பாடுகள் எல்லாமே கோரியோலிஸ் விளைவுகளால் தான் ஏற்படுகிறது. பூமியின் சுழற்சி தலைகீழாக மாறும் போது வானிலையில் கடுமையான மாற்றங்கள் ஏற்படும். இதனால் பல்வேறு பகுதிகள் மாற்றத்துக்கு உள்ளாகும். புளோரிடா பகுதிகள் சதுப்பு நிலங்களாக வறண்டு போகும்.
தற்போதைய விவசாய நிலங்கள் அனைத்தும் பயிர் விளைவதற்கு தகுதியில்லாமல் மாறும். அதிக மழை பொழியும். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்துவதற்கான இயற்பியல் செயல்பாடுகளும் மாறக் கூடும். உலகெங்கும் வறட்சி ஏற்பட்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.



Click it and Unblock the Notifications











