Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
15 நாட்களுக்கு பெண்களை வாடகை மனைவியாக கொடுக்கும் வினோத நாடு... இதற்கு எவ்வளவு பணம் வாங்குறாங்க தெரியுமா?
பூமியில் தற்போது 195 நாடுகள் உள்ளன, ஒவ்வொரு நாடும் அதற்கென தனிப்பட்ட கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் சில விசித்திரமான மற்றும் நம்ப முடியாத விஷயங்கள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் சில சமயங்களில் வினோதமாக பழக்கவழக்கங்கள் அதிகரித்து வருகின்றன.
அப்படி தற்போது வேகமாக வினோத பழக்கம் அதிகரித்து வரும் ஒரு நாடுதான் இந்தோனேசியா. இங்கு மற்ற நாடுகள் செய்யத் தயங்கும் ஒரு பழக்கம் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏழை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பணத்திற்காக ஆண் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக மனைவிகளாக (சுமார் 15 நாட்களுக்கு) பெண்கள் அனுப்பப்படுகிறார்கள்.

இன்பத் திருமணங்கள்
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்காக பெண்கள் தற்காலிக திருமணங்களில் நுழைகிறார்கள். அதற்கு ஈடாக, அவர்கள் தங்கள் தற்காலிக கணவரின் பாலியல் ஆசைகளையும், வீட்டு வேலைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறை பொதுவாக 'இன்ப திருமணம்('pleasure marriage)' அல்லது நிக்காஹ் முத்'ஆ என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு பெண் விரும்பினால், ஒரு வருடத்தில் இதுபோன்ற 20-25 திருமணங்களில் ஈடுபடலாம். இந்தத் திருமணம் இரு தரப்பினரின் சம்மதத்துடன் ஒரு குறுகிய, நிலையான காலத்திற்குப் பிறகு தானாகவே முடிவடைகிறது. இந்த வகை நிக்காஹ் ஷியா இஸ்லாத்தில் தோன்றியது.
இன்பத் திருமணம் எப்படி முடிவடையும்?
இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான புன்காக் பகுதியைச் சேர்ந்தவர்களால் இந்த வினோத் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது, இது அதன் இயற்கை அழகு மற்றும் அரபு செல்வாக்குகளுக்கு பெயர் பெற்றது. மத பாரம்பரியம் என்ற போர்வையில் இந்த நடைமுறை எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெண்களைச் சுரண்டுகிறது. எனவே, மத்திய கிழக்கிலிருந்து வரும் பணக்கார சுற்றுலாப் பயணிகள், பணம் தேவைப்படும் உள்ளூர் பெண்களுடன் இந்த தற்காலிக திருமணங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் போது அந்த திருமணமும் முடிவடைகிறது.
ஏஜென்சிகளின் ஆதிக்கம்
இந்த தற்காலிக ஏற்பாட்டை செய்து கொடுக்க இங்கு பல ஏஜென்சிகள் உள்ளன. இந்த ஏஜென்சிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கிராமத்துப் பெண்களை அறிமுகப்படுத்துகின்றன, மேலும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், அவர்கள் விரைவான, அங்கீகரிக்கப்படாத திருமண விழாவை நடத்துகிறார்கள், அதன் பிறகு சுற்றுலாப்பயணிகள் மணமகளுக்கு உரிய விலையைக் கொடுக்கிறார்கள். இதற்கான கட்டணம் பெண்களின் வயது, தோற்றம் மற்றும் நாட்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் வரை அந்த பெண்கள் பாலியல் சேவைகளையும் மற்றும் பிற சேவைகளையும் செய்கிறார்கள். சுற்றுலாப் பயணி புறப்பட்டதும், அந்த திருமணம் செல்லாததாக மாறுகிறது, மேலும் அந்த பெண்கள் விரும்பினால் அடுத்த திருமணத்தை நோக்கி நகரலாம்.
கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சனைகள், இந்த சட்டத்திற்கு புறம்பான இன்பத் திருமணங்களை வளர்ந்து வரும் தொழிலாக மாற்றியுள்ளன, உன்மையில் இது சமீபத்தில் உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளது.
ஊடக அறிக்கைகளின் படி, ஒரு பெண் தனது 17 வயதிலிருந்தே மத்திய கிழக்கு சுற்றுலாப் பயணிகளை குறைந்தது 15 முறை திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார். அவர் வழக்கமாக ஒரு இன்பத் திருமணம் மூலம் $300 முதல் $500 வரை சம்பாதிக்கிறார், ஏஜென்சி அதன் கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு, வாடகை செலுத்தவும், நோய்வாய்ப்பட்ட தனது தாத்தா பாட்டிகளைப் பராமரிக்கவும் அந்த பணத்தைப் பயன்படுத்துவதாக அந்த பெண் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












